சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்ய மோடியின் சொந்த மண்ணில் ஒரு நிறுவனம்

தேசிய பங்கு சந்தையின் GIFT சிட்டி IFSC பரிமாற்ற சந்தை குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்கு சந்தைத் திங்கள்கிழமை அன்று குஜராத் மாநிலம், காந்திநகருக்கு அருகிலுள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில்(GIFT), தனது வர்த்தகத்தைத் தொடங்கி வைத்தது.

 

சில சந்தை இழப்புகளைச் சிங்கப்பூரின் பங்குச் சந்தையில் முதலீடு செய்து மீளத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

NSE IFSC என்றால் என்ன?

NSE IFSC என்றால் என்ன?

NSE IFSC என்பது இந்திய தேசிய பங்கு சந்தைக்குச் சொந்தமான ஒரு துணை நிறுவனமாகும். குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில்(GIFT) உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தில் தொடங்கப்பட்ட சர்வதேச வர்த்தகத்திற்கான தளமாகும்.

GIFT சிட்டி

GIFT சிட்டி

GIFT சிட்டி என்பது இந்தியாவின் முதல் சர்வதேச நிதி சேவைகள் மையத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும். இந்த ஆண்டின் ஜனவரி யில் தொடங்கப்பட்ட NSE IFSC ன் போட்டியாளரான மும்பை பங்கு சந்தையின் (BSE) INX க்கு இது வாய்ப்புகளை அளிக்கும்.

நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான வரி
 

நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான வரி

GIFT சிட்டி யில் அமைக்கப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான குறைந்த அளவிலான வரியைச் செலுத்தலாம். இவை அயல்நாடுகளிலுள்ள இந்திய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்நிய செலாவணி மீதான கடன்களை வழங்குகிறது.

வர்த்தகத்திற்கான காலம்

வர்த்தகத்திற்கான காலம்

பங்குச் சந்தைகள் ஆரம்பத்தில் 16 மணி நேரத்திற்குத் தினசரி வர்த்தகம் செய்ய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது சந்தை பின்னூட்டத்தைப் பொறுத்து விரிவாக்கப்படலாம். தினமும் இரண்டு வர்த்தக நேரங்கள் உண்டு. அவை, முதலில் 8 மணி முதல் 5 மணி வரை மற்றும் இரண்டாவது 5.30 மணி முதல் 11.30 மணி வரை.

இந்த வர்த்தக நேரங்களுடன் நீண்ட நேரத்திற்கு முதலீட்டாளர்கள் வரும் செய்திகளின் அடிப்படையில் லண்டன் மற்றும் துபாய் சந்தை நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்று சந்தை தெரிவிக்கிறது.

 

சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் பங்குகள் மற்றும் குறியீடுகள்

சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் பங்குகள் மற்றும் குறியீடுகள்

இரண்டாம் நிலை பங்குகள் என்பவை ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், லார்சென் அண்ட் டூப்ரோ, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிகள், எஸ்பிஐ வங்கி, டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய 10 நிறுவனங்களின் பங்குகளின் எதிர்நோக்கு மற்றும் விருப்ப உரிமை ஒப்பந்தங்கள் சேர்ந்தவையாகும். இரண்டாம் நிலை குறியீடுகள் தேசிய பங்கு சந்தைக் குறியீடுகளான நிப்டி 50, நிப்டி வங்கி மற்றும் நிப்டி IT ஆகியவை உள்ளடங்கியதாகும். பில்லியன் மற்றும் கரன்சி வர்த்தகங்கள் மட்டுமல்லாது யுரோ டாலர் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் டாலர் ஆகியவற்றுக்கிடையிலான வர்த்தகங்களும் நடைபெறுகின்றன.

குறிக்கோள்

குறிக்கோள்

பரிமாற்றம் என்பது சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களுக்கு மற்றுமொரு வர்த்தகத் தளமாக விளங்குகிறது. இதில் ரூபாயல்லாத பிற நாணய முறைகளிலும் சர்வதேச போட்டி மாற்ற மதிப்புகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படும். சந்தை வாய்ப்புகளான, நிப்டி குறியீடுகள், இந்திய பங்குகள், பொருள் வர்த்தகம், நாணய மாற்று போன்ற முதலீட்டாளர்களிடையே பிரபலமானவற்றிலும் சந்தைப் பங்கேற்பாளர்களும், சர்வதேச முதலீட்டாளர்களும் பங்கு பெறும் அளவிற்குச் சில வியாபார வாய்ப்புத் தொகுதிகள் வழங்கப்படும்.

சர்வதேச சந்தையின் போட்டி

சர்வதேச சந்தையின் போட்டி

இன்னும் சில ஆண்டுகளில் சர்வதேச சந்தையின் போட்டிகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் நாங்கள் செயல்படுவோம் எனத் தேசிய பங்குச் சந்தையின் சேர்மன் அசோக் சாவ்லா கூறுகிறார்.

பங்கு வர்த்தகம் பற்றி

பங்கு வர்த்தகம் பற்றி

செபியின் ஒப்புதலோடு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள், வைப்பு வரவுகள், தகுதி வாய்ந்தோரின் கடன் பத்திரங்கள், நாணயம், குறியீடு, வட்டி விகிதம் மற்றும் விவசாயமல்லாத பொருள் வர்த்தகங்கள் ஆகியவற்றினூடே FATF / IOSCO சட்ட எல்லைக்குட்பட்டு வர்த்தகங்களை மேற்கொள்ளலாம். NSE IFSC 2016 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் நாள் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நிறுவனங்களுக்கான பதிவாளரிடமிருந்து அனுமதிச் சான்று பெற்றுள்ளது.

மும்பை பங்கு சந்தையின் INX குறியீடு எவ்வாறு செயல்படுகிறது?

மும்பை பங்கு சந்தையின் INX குறியீடு எவ்வாறு செயல்படுகிறது?

ஜனவரி மாதத்தில் துவங்கியதிலிருந்தே சராசரியாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மேல் இந்திய INX வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் தினமும் 45 மில்லியன் டாலர் அளவுக்கு (மே 2 முதல் ஜூன் 5 வரை) INX வலைத்தளத்தில் தரவுகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

இந்திய INX ஒரு நாளில் 22 மணி நேரமும், ஒரு வாரத்தில் 6 நாள்களும் செயல்படுகிறது. ஜூன் 1 முதல் இந்த நிறுவனம் அலுமினியம், ஈயம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியவை தொடர்பான வர்த்தகத்திலும் ஈடுபடுகிறது.ஏப்ரல் மாதத்தில் தங்கம், வெள்ளி மற்றும் தாமிரம் ஆகியவை தொடர்பான வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாத கடைசியிலிருந்து மேலும் 10 வகையான வர்த்தகத்திலும் ஈடுபடத் துவங்கியிருக்கிறது. நான்கு மைக்ரோ செகண்டுகள் அளவிற்கு மிக நுண்ணிய அளவிலும் தனது வர்த்தகத் தொடர்புகளை இந்திய INX மேற்கொண்டு வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things you must know about NSE’s IFSC Exchange in GIFT city

Things you must know about NSE’s IFSC Exchange in GIFT city
Story first published: Thursday, June 8, 2017, 14:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X