விப்ரோ நிறுவனத்திற்கு தில்லு கொஞ்சம் அதிகம்தான்.. மொனம் காக்கும் டிரம்ப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் முறையாக ஒரு இந்திய ஐடி நிறுவனம், அமெரிக்காவில் தனது வர்த்தகத்திற்கும், வர்த்தக வளர்ச்சிக்கும் அதிபர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என நேரடியாக டொனால்டு டிரம்ப்-ஐ சுட்டிக்காட்டி அமெரிக்கப் பங்குச்சந்தையில் வருடாந்திர அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது விப்ரோ.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் இந்திய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பை கட்டம்கட்டி பறித்து வரும் நிலையில், விப்ரோ நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டு இந்திய நிறுவனங்களை மேலும் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிபரை நேரடியாகச் சுட்டிக்காட்டும் அளவிற்கு, விப்ரோ நிறுவனத்திற்கு என்ன பிரச்சனை..?

ஆபத்து காரணிகள்

ஆபத்து காரணிகள்

நாட்டின் 3வது பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கும் விப்ரோ தனது அமெரிக்கச் சந்தை வர்த்தகத்திற்குப் பல ஆபத்து காரணிகளைப் பட்டியலிட்டுள்ளது. இதில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை, தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றையும் பட்டியலிட்டுள்ளது.

இதன் எதிரொலியாகத் தனது வர்த்தகம், வருவாய் மற்றும் லாபம் ஆகியவை அதிகளவில் குறைந்துள்ளதாக விப்ரோ அமெரிக்கப் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

அதிபர் தேர்தல் மற்றும் தேர்வு..

அதிபர் தேர்தல் மற்றும் தேர்வு..

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த அதிபர் தேர்தல் மற்றும் அதிபர் தேர்வு எங்களது வர்த்தகம் அதிகளவில் பாதித்துள்ளது என மிகத் தெளிவாக விப்ரோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 8, 2016

நவம்பர் 8, 2016

பராக் ஒபாமாவிற்கு அடுத்ததாக ஆமெரிக்காவின் அதிபராக நவம்பர் 8, 2016 அன்று டொனால்டு டிரம்ப் அதிபராகப் பதிவியேற்றார். இதன்பின் டிரம்ப் தலைமையிலான அரசு பல நாடுகள் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றியது. இதில் முக்கியமாக NAFTA ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.

ஐடி நிறுவனங்கள்

ஐடி நிறுவனங்கள்

ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்கள் விசா பிரச்சனைகளுக்காகப் பல வருடங்களாகப் போராடி வரும் நிலையில், டிரம்ப் அரசு இருக்கும் விசா தளர்வுகளையும் குறைத்தது. இது இந்திய ஐடி நிறுவனங்களை எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்றால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

விப்ரோ தனி..

விப்ரோ தனி..

விப்ரோ நிறுவனம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க விசா கட்டுப்பாடுகள் மட்டும் அல்லமல்ல பிரிட்டன், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளாலும் அதிகளவில் பாதித்துள்ளது என இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

விப்ரோ நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக் காரணமாக டிரம்ப் அரசு அதிக நெருக்கடி கொடுக்கமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நெருக்கடிகள் எப்படியும் விப்ரோ நிறுவனத்திற்கானதாக மட்டும் இருக்காது. இது மொத்த இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும் ஒரு அறிவிப்பாகவே இருக்கும்.

பதற்றம்...

பதற்றம்...

ஏற்கனேவே அமெரிக்காவில் பல பிரச்சனை சந்தித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் புதிய பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதேபோல் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது வருவாய் சரிவிற்கு அதிபரைக் காரணம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மாற்றம்

மாற்றம்

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்த கட்டுப்பாடுகளால், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் இந்திய ஐடி மற்றும் பிற துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் விசாவை நம்பி வர்த்தகம் செய்யும் நிலையில் இருந்து மாறி.

அமெரிக்கக் குடிமக்களை அதிகளவில் பணியில் அமர்த்தி வருகிறது.

 

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் அடுத்த 2 வருடத்தில் அமெரிக்காவில் சுமார் 10,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தப்போவதாக உறுதி அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro declare Trump as potential threat to business

Wipro declare Trump as potential threat to business - Tamil Goodreturns | 'டிரம்ப்' எங்கள் வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.. அமெரிக்காவில் விப்ரோ நேரடி தாக்கு..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X