7 வது சம்பள கமிஷன்: வீட்டு வாடகை படி எவ்வளவு என்று இன்று அறிவிக்க வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அமைச்சரவை இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷனின் கீழ் வரும் கொடுப்பனுவுகள் மற்றும் வீட்டு வாடகைப்படி போன்றவற்றில் பல முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அரசு முறை பயணமாகத் தென் கொரியா செல்ல இருக்கிறார். அசோக் லாவசா தலைமையிலான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்பு குழு 2017 ஏப்ரல் மாதம் தங்களது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

செயலாளர்கள் அதிகாரசபை குழு அறிக்கை மற்றும் நிறுவனம் அமைச்சரவை முன்மொழிவுக்காக இந்தப் புரிந்துரைகள் காத்திருக்கின்றது.

கொடுப்பனுவுகள்

கொடுப்பனுவுகள்

லாவசா குழு அனைத்து ஊழியர்களுக்கும் சில கொடுப்பனுவுகளைப் பரிந்துரைத்துள்ளதாகவும், அதுமட்டும் இல்லாமல் குறிப்பிட்ட சில பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் பிற கொடுப்பனுவுகளைப் பரிந்துரைத்து உள்ளதாகவும் நிதி அமைச்சகத்தில் இருந்து நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணவீக்கம்

பணவீக்கம்

7 வது சம்பள கமிஷன் மூலம் ஊழியர்கள் பெற இருக்கும் கொடுப்பனுவுகளால் வாடிக்கையாளர்கள் செலவு செய்வது அதிகரிக்கும் என்றும் பணவீக்கம் குறையும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பணவீக்கம் குறித்த முக்கியச் சிக்கல்களை ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் மற்றும் 7 வது சம்பள கமிஷன் கீழ் வர இருக்கும் கொடுப்பனவுகளை ஒதுக்குதல் ஆகியவற்றின் விளைவாக உலக அரசியல் மற்றும் நிதி அபாயங்கள் பல நிகழ உள்ளன.

 

எப்போது முதல் அறிவிப்பு இல்லை?
 

எப்போது முதல் அறிவிப்பு இல்லை?

அதுமட்டும் இல்லாமல் இன்னும் எவ்வளவு கொடுப்பனுவுகள் அளிக்கப்போகின்றது என முழு விவரங்கள் தயாராகவில்லை, அதன் பிறகு எப்போது முதல் இந்தக் கொடுப்ப்பனுவுகள் அளிக்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.

அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம்

அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம்

மத்திய அரசு சென்ற வருடம் நீதிபதி ஏகே மதூர் தலைமையிலான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை ஏற்றுக்கொண்டது. அசோக் லாவசா தலைமையிலான குழு கொடுப்பனுவுகள் குறித்த பரிந்துரைகளை அளித்துள்ளன.

வீட்டு வாடகைப் படி

வீட்டு வாடகைப் படி

கொடுப்பனுவுகளில் முக்கியமாகப் பார்க்கப்படும் வீட்டு வாடகைப்படி மீதான 7 வது சம்பள கமிஷனின் பரிந்துரையில் 3 முறை மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதலில் ஊழியர்கள் இருக்கும் நகரத்தைப் பொருத்து 24,16, 8 சதவீதம் ஆகப் பரிந்துரைத்தது.

பின்பு 27, 18, 9 சதவீதமாகப் பரிந்துரைத்தது, அடுத்து 30, 20, 40 சதவீதமாகப் பரிந்துரைத்தது. ஊழியர்கள் சங்கமும் 30,20, 40 சதவீத அளவிலான வீட்டு வாடகைப் படியே அமலுக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.

 

மொத்த கொடுப்பனுவுகள்

மொத்த கொடுப்பனுவுகள்

7 வது சம்பள கமிஷன் மொத்தமாக 196 கொடுப்பனவுகளைப் பரிந்துரைத்தது, 52 மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டது, 36 தனித்தனி அடையாளங்களாக ஒழிக்கப்பட்டது.

மத்திய அமைச்சகம் அளித்த கடைசி ஒப்புதல்

மத்திய அமைச்சகம் அளித்த கடைசி ஒப்புதல்

மத்திய அமைச்சகத்தைப் பொருத்த வரை 2016 -ம் ஆண்டுக் கடைசியாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்தற்காக மட்டுமே முழுமையாக 7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th Pay Commission: Decision On Revised Allowances, HRA Unlikely Today

7th Pay Commission: Decision On Revised Allowances, HRA Unlikely Today
Story first published: Wednesday, June 14, 2017, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X