இந்த வேலையில் அதிக சம்பளம் ஆனாலும் டென்ஷனே கிடையாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலக் கட்டத்தில் சிறிய தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, அரசு மற்றும் தனியார் பணியிடங்கள் வரை வேலை செய்பவர்களுக்கிடையே ஒரே டென்ஷன் ஆக இருக்குப்பா என்பதும், மேலதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியல என்று கூறுவதும், மன அழுத்தத்தைக் குறைக்க யோகா கற்றுக் கொள்ளுங்கள் என்று பல்வேறு விதமான கூச்சல்கள் நமக்குக் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

மக்களின் மன நிலையெல்லாம் குறைவான வேலையே செய்ய வேண்டும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு பொருந்தாத சித்தாந்தத்தில் இருப்பது ஆபத்தானது மட்டுமல்ல மிகுந்த வேதனையையும் தரக்கூடியது.

இந்த மனநிலை மாறவில்லை என்றால் அனைத்து தொழில்களும் நசித்துப் போய் ஒரு நேரத்தில் மனுஷனை மனுஷன் சாப்பிடக் கூடிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்படியெல்லாம் இருக்கும் போது, இந்த உலகில் உள்ள அதிக வருமானம் தரக்கூடிய, மிகக் குறைவான மன அழுத்தம் கொடுக்கக் கூடிய வேலைகளில் சிலவற்றில் 11 வேலைகளைப் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம்.

11.. பொருளாதார ஆசிரியர்

11.. பொருளாதார ஆசிரியர்

சராசரி சம்பளம் : 95,770 டாலர்கள்.

இந்த வேலை கற்பிக்கும் பணி செய்பவர்கள் மற்றும் கற்பித்தலோடு ஆராய்ச்சிப் பணியும் செய்பவர்களும் சேர்ந்தது ஆகும். இந்த வேலையைச் செய்ய உங்களுக்கு ஒரு இளநிலை பட்டம், முதுநிலை பட்டம், மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றுடன் பணிக்காலப் பயிற்சியும் தேவைப்படும். இருக்கும் வேலைகளிலேயே மிகக் குறைந்த மன அழுத்தம் தரக்கூடிய வேலையாகவும், அதிக வருமானம் தரக்கூடிய வேலையாக இது இருக்கும்.

 

10. மூலப்பொருள் விஞ்ஞானி

10. மூலப்பொருள் விஞ்ஞானி

சராசரி சம்பளம் : 99,430.டாலர்கள்

மூலப்பொருள் விஞ்ஞானிகள் பல்வேறு செயற்கை, இயற்கை மற்றும் கூட்டு மூலப்பொருள்களின் வேதிப்பண்புகளைப் பற்றியும் அவற்றின் அமைப்புகளைப் பற்றியும் படிப்பதோடு ஆராய்ச்சியும் செய்து உயர்ந்த வருமானத்தை ஈட்டுகிறார்கள். இந்த மூலப்பொருள்களில், அலோகங்கள், உலோகங்கள், கண்ணாடி, பீங்கான், ரப்பர், செயற்கை பிளாஸ்டிக்குகள், மின்கடத்திகள் ஆகியவையும் அடங்கும்.

மூலப்பொருள் விஞ்ஞானிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மேற்கூறிய பொருள்களை இணைத்து அவற்றைப் பலப்படுத்துவதுடன், வேறு புதிய பொருள்களைக் கண்டுபிடிக்கவும் வழி தேடுகின்றனர். இவர்களில், பீங்கான் விஞ்ஞானிகள், செயற்கை பிளாஸ்டிக்கு விஞ்ஞானிகள், கண்ணாடி விஞ்ஞானிகள் மற்றும் உலோகவியல் விஞ்ஞானிகளும் அடங்குவர்.

 

9.காப்பீட்டுக் கணிப்பாளர்
 

9.காப்பீட்டுக் கணிப்பாளர்

சராசரி சம்பளம் : 100,610 டாலர்கள்

மேம்பட்ட புள்ளியியல் மற்றும் மாதிரி மென்பொருள் ஆகியவற்றைக் கொண்டு காப்பீட்டுக் கணிப்பாளர்கள் எதிர்காலத்தில் நடக்கக் கூடியவற்றைக் கணித்துச் சொல்வார்கள். கணக்கு, புள்ளியியல் மற்றும் நிதிநிலை கோட்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, காப்பீட்டுச் சந்தையில் காணப்படும் நிதி தொடர்பான அபாயங்கள் குறித்துப் பரிசீலிப்பார்கள்.

அவர்கள் வியாபாரத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் உதவி செய்து சந்தை நிதி அபாயங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பார்கள். இந்த வேலைக்கு ஒரு இளநிலை பட்டமும், மேலும் சில தேர்வுகளும் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் உங்கள் வேலையில் நீங்கள் வெற்றி பெற, வியாபாரம், புள்ளியியல் மற்றும் கணிதத் திறமைகளைக் கைக்கொண்டிருக்க வேண்டும்.

 

8.பொருளாதாரவியல் அறிஞர்

8.பொருளாதாரவியல் அறிஞர்

சராசரி சம்பளம் : 101,050 டாலர்கள்

பொருளாதாரவியல் அறிஞர் பணி செய்பவர்கள் சந்தை நிலவரங்களைக் கண்காணித்துக் கணித்துச் சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்கள் புள்ளிவிவரங்களை அலசி ஆராய்வது மற்றும் பொருளாதார உத்திகளை உருவாக்குவதோடு, பொருள்களின் உற்பத்தி, பகிர்மானம், ஆதாரங்கள் மற்றும் சேவைகள் குறித்துக் கற்கவும் செய்கிறார்கள்.

பலர் சுதந்திரமாக ஒரு அலுவலகத்தில் பணிபுரிகின்றனர், ஆனால் அவர்களும் அவ்வப்போது புள்ளியியலாளர்கள் மற்றும் பொருளாதாரவியலாளர்களோடு இயைந்து பணியாற்றுகிறார்கள். பெரும்பாலான பொருளாதாரவியல் அறிஞர்கள் முதுநிலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள். இத்துறையில் நுழைய இளநிலை பட்டம் முடித்திருந்தாலே போதும்.

 

7.வானவியல் அறிஞர்

7.வானவியல் அறிஞர்

சராசரி சம்பளம் : 104,740 டாலர்கள்

வானவியல் அறிஞர்கள் சில வானவியல் நிகழ்வுகள், விண்பொருள்கள், சூரியக் கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பார்கள். இவர்கள் காலங்களின் பரிமாணம் பற்றியும், இந்தப் பேரண்டத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றியும் படிப்பார்கள். வானவியல் அறிஞர்கள் தங்கள் அலுவகங்களில் நேரத்தை செலவிடும் அதே நேரத்தில் அவ்வப்போது ஆய்வகங்களிலும், கணிப்பகங்களிலும் சிற்சில ஆய்வுகளிலும் ஈடுபடுவர்.

இவர்கள் ஆராய்ச்சித் துறையில் பணியாற்ற ஆராய்ச்சி பட்டப் படிப்புப் படித்திருக்க வேண்டும். இந்த வேலையும், அதிகச் சம்பளத்துடன் குறைந்த மன அழுத்தத்தைத் தருவதாக இருக்கும்.

 

6..கணிதவியல் அறிஞர்

6..கணிதவியல் அறிஞர்

சராசரி சம்பளம் : 105,810 டாலர்கள்

பெரும்பாலானவர்கள் கணக்கை வெறுத்தாலும், மிகக் கடினமானது என நினைத்தாலும் அதனைக் கற்று தேர்ந்தவர்கள் அதைச் சுலபமானதாகவே கருதுகின்றனர். கணிதவியல் அறிஞர்கள் சில கணித கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளச் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி உள்ளது. கணிதத் தொழில்நுட்பத்தையும், பகுப்பாய்வு செய்யப்பட்ட புள்ளி விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டும் தற்கால உலகின் அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு கூறுவார்கள்.

அவர்கள், அரசு நிறுவனங்கள் அல்லது தனியார் எஞ்சினியரிங் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிவார்கள். சில வாய்ப்புகள் இளநிலை பட்டம் படித்தவர்களுக்கும் கிடைத்தாலும், அனைவரும் கணித்தத்தில் முதுநிலை பட்டம் பெறுவதையே விரும்புகின்றனர்.

 

5..சட்ட ஆசிரியர்

5..சட்ட ஆசிரியர்

சராசரி சம்பளம் : 111,210 டாலர்கள்

இந்த வேலை சட்டக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்லாது கற்பித்தலோடு ஆராய்ச்சிப் பணியும் செய்பவர்களையும் உள்ளடக்கியது ஆகும். இப்பணிக்குக் குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மேற்கூறிய சம்பளம் பெற முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக் கட்டாயம் தேவை.

மேலும் பணிக்காலப் பயிற்சியும் தேவை. ஆனால்,. முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தால், உரிய திறமையும், பயிற்சியும் பெற்றிருப்பதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

 

4..அரசியல் விஞ்ஞானி

4..அரசியல் விஞ்ஞானி

சராசரி சம்பளம் : 114,290 டாலர்கள்

இந்தப் பணி வாய்ப்புகள் 2014 முதல் 2024 க்குள் 2% மாகக் குறைய வாய்ப்பு இருந்த போதிலும், அழுத்தம் இல்லாத அதிக வருவாய் கிடைக்கக் கூடிய தொழிலாக இது அமைகிறது. அரசியல் விஞ்ஞானிகள் அரசியல் கொள்கைகள், தந்திரங்கள், அரசியல் நடைமுறைகள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் அவை தொடர்பான விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

 

3..இயற்பியலாளர்

3..இயற்பியலாளர்

சராசரி சம்பளம் : 115, 870 டாலர்கள்

இயற்பியலாளர்கள் பணி நமது சம்பள தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இவர்கள் பொருளும், சக்தியும் ஒன்றோடு இயைந்து வெவ்வேறு வடிவங்கள் பெறுவது குறித்தும், காலத்தின் பரிமாணம் அல்லது பேரண்டத்தின் தோற்றம் ஆகியவை குறித்தும் படிக்கிறார்கள்.

இயற்பியலாளர்களும், வானவியலாலர்களும் ஒன்றேபோல் வேலை செய்வதோடு, இரண்டும் அழுத்தம் குறைந்த பணிகளாகவே உள்ளன. இவர்களும் ஆராய்ச்சி பணியில் தொடர அதற்குரிய பி.எச்.டி. படிப்புப் படித்திருக்க வேண்டும். சில அரசு பணிகளில் மாத்திரம் இளநிலை பட்டம் இருந்தால் போதுமானது.

 

2.. இயற்கை அறிவியல் நிர்வாகி

2.. இயற்கை அறிவியல் நிர்வாகி

சராசரி சம்பளம் :119,850 டாலர்கள்.

அழுத்தம் குறைவானதும், இரண்டாவது அதிகச் சம்பளம் பெறும் பணியே இந்த இயற்கை அறிவியல் நிர்வாகி பணி.. உயிரியலாளர்கள், இயற்பியலாளர்கள் மற்றும் வேதியியலாளர்கள் ஆகியோரின் பணிகளை மேற்பார்வையிடும் பணியையும் செய்கின்றனர்.

இப்பணி, வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கிறது. குறைந்த பட்சம் ஒரு இளநிலை பட்டம் பெற்றவரே இப்பணிக்கு வர இயலும்.

 

1..பல் அமைவு மருத்துவர்

1..பல் அமைவு மருத்துவர்

சராசரி சம்பளம் : 187,199 டாலர்கள்.

நமது தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது பல் அமைவு மருத்துவரின் பணியாகும். இவர்கள் பல் நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் மாறுபட்ட பல்சேர்க்கை மற்றும் பல் வரிசை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றையும் மேற்கொள்கின்றனர்.

பல்வேறு பல்நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில், தாடை மற்றும் பற்களை ஒழுங்குபடுத்தி, தோற்றத்தை மேம்படுத்திடும் பணிகளையும் செய்கின்றனர். இப்பணிக்கு முதுநிலை பட்டம் அல்லது பி.எச்.டி. படித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு இளநிலை பட்டமாவது முடித்திருக்க வேண்டும்.

 

பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம்

பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம்

பணிச்சுமை மற்றும் மனஅழுத்தம் ஆகியவை அந்தப் பணியைத் தவர் ஏற்படாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியாற்றும்போது இருந்தாலும், அந்தப் பணியை முடித்தவுடன் ஒரு சாதனை செய்த மகிழ்ச்சியும், அதன் பயன் நல்ல விதமாக அமையும்போது ஏற்படுகிற மன நிறைவும் உண்மையிலேயே நினைத்துப் பார்த்து மகிழ்வதற்குரிய விஷயமாகும்.

யாருக்கு டென்ஷன்

யாருக்கு டென்ஷன்

வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த டென்ஷனும் இல்லை. வேலையைச் செய்பவர்களுக்கு, குறிப்பாகச் செய்யும் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்குத்தான் இந்த டென்ஷன் எல்லாம்.

பொறுப்புத் துறுப்பு

பொறுப்புத் துறுப்பு

நாம் செய்யும் வேலையைத் தவறாகச் செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த வேலையினால் விளையக்கூடிய பயன்களை நம்பி இருக்கக் கூடியவர்களைப் பாதிக்கக் கூடாது.

உங்கள் அறிவையும், உங்கள் வேலைக்கான பணி சூழலையும் அவற்றை நம்பி இருக்கக் கூடியவர்களுக்காகச் சரியான வகையில் பயன்படுத்திட வேண்டும். இல்லையென்றால் அது ஆபத்தாகப் போய் முடியும்.

 

உன் மனநிலை

உன் மனநிலை

நீங்கள் கனவு காணும் வேலை அழுத்தம் குறைந்ததாக இருக்கும் என்று கூற முடியாது. உதாரணமாக நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக வர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தால், உங்களின் வேலை ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது அழுத்தம் தரக் கூடியதாக ஆகலாம். ஏனென்றால் உங்களை நம்பி ஒரு நோயாளியின் உயிரும், அவனின் குடும்பமும் உள்ளன என்பது ஒரு சிறிய விஷயம் இல்லையே.

இதனால் நாம் எடுத்துக்கொள்ளும் விதம்தான் அனைத்திற்கும் காரணம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These Jobs are awesome: Low Stress, High Pay

These Jobs are awesome: Low Stress, High Pay
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X