7வது சம்பள கமிஷன்: கொடுப்பனுவுகள், எச்ஆர்ஏ குறித்த மோடி, ஜேட்லி சந்திப்பு பற்றிய முழு விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் லட்சம் கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய திருத்தப்பட உள்ள கொடுப்பனுவுகள் மற்றும் வீட்டு வாடகைப்படியான எச்ஆர்ஏ குறித்துச் சந்தித்துப் பேசி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கொடுப்பனுவுகள் குறித்த அறிவிப்பு வருகின்ற ஜூன் 28-ம் தேதி நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூன் 28-ம் தேதி நடக்க இருக்கும் 7வது சம்பள கமிஷன் தொடர்பான கூட்டத்தின் போது மோடி அவர்கள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி இருப்பார் என்று நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேட்லிக்கு மோடி என்ன கூறினார்?

ஜேட்லிக்கு மோடி என்ன கூறினார்?

மோடி, ஜேட்லி இருவருக்கும் இந்த வாரம் பிஸியான அட்டவணை என்றே கூறலாம். இரண்டு தலைவர்களும் திங்கட்கிழமை சந்தித்த போது உயர்த்தப்படும் கொடுப்பனுவுகள் மற்றும் வீட்டு வாடகைப்படி குறித்துப் பேசியுள்ளார்கள். அந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசுக்கு ஏற்பட இருக்கும் சுமை குறித்து விவாதித்ததாகவும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சந்திப்பு நேர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வீட்டு வாடகைப்படி எவ்வலௌ கிடைக்க வாய்ப்பு

வீட்டு வாடகைப்படி எவ்வலௌ கிடைக்க வாய்ப்பு

இரண்டு தலைவர்களும் வீட்டு வாடகைப் படியை 27, 18 மற்றும் 9 சதவீதமாக ஊழியர்கள் இருக்கும் நகரத்தைப் பொருத்து வழங்க முடிவு செய்துள்ளனர்.

குழு பரிந்துரை
 

குழு பரிந்துரை

ஏற்கனவே 24, 16 மற்றும் 8 சதவீதமாக வழங்கி வரும் வீட்டு வாடைப்படியை 30, 20 மற்றும் 10 சதவீதம் வரை உயர்த்தலாம் என 7வது சம்பள கமிஷன் கமிட்டி பரிந்துரை செய்தது. இதையே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.

தமாதப்படுத்த வேண்டாம்

தமாதப்படுத்த வேண்டாம்

மோடி, ஜேட்லி சந்திப்பின் போது கொடுப்பனுவுகள் வழங்குவதில் மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். தமாதத்தினால் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்வதாக நிதி அமைச்சகம் கருதுகின்றது. அதிகம் தாமதப்படுத்துவதினால் ஊழியர்களும் எரிச்சலடைவார்கள் என்று உளவுத் துறையும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேகமாக அளிப்பது நல்லது

வேகமாக அளிப்பது நல்லது

கொடுப்பனுவுகள் அளிப்பதில் தாமதம் ஆவதால் ஊழியர்கள் மன நிலை சோர்வடைந்துள்ளதாகவும் ஊழியர்கள் தரப்பில் இருந்து தகவல் அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடமாக ஊழியர்கள் நல்ல செய்திக்காகக் காத்திருப்பது நல்லது இல்லை என்று இருவரும் முடிவு செய்துள்ளனர்.

கவலைப்பட வேண்டாம் அமைச்சகம்

கவலைப்பட வேண்டாம் அமைச்சகம்

நிதி அமைச்சக செயலாளர் கொடுப்பனவுகள் குறித்து மத்திய அரசு ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். அடுத்த அமைச்சக கூட்டத்தில் கண்டிப்பாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாமதமாக நடைபெறும் கூட்டம்

தாமதமாக நடைபெறும் கூட்டம்

பொதுவாக மத்திய அமைச்சகத்தின் கூட்டம் புதன்கிழமைகளில் தான் நடைபெறும் என்றும் இந்த முறை யோகா தினம் வந்ததால் ஓர் இரு தினங்கள் தாமதமாக நடைபெறும் என்றும் இந்த மாதத்தின் இறுதிக்குள் கொடுப்பனுவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்தும் நிதி அமைச்சகம் தீவிரமாகா ஆலோசனை நடத்தி வருவதாகவும் அது குறித்து நல்ல முடிவு விரைவில் வெளிவரும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7th Pay Commission: Full details of Modi, Jaitley meet on revised allowances, HRA

7th Pay Commission: Full details of Modi, Jaitley meet on revised allowances, HRA
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X