வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு வருடமும் வருமான வரித் துறை வரி தாக்கல் செய்வதற்கான முறைகளை எளிமைப்படுத்திக் கொண்டு வருகின்றது. எனவே இங்கு வருமான வரித் தக்கலினை இணையம் வாயிலாகப் பதிவேற்றம் செய்து எப்படிச் செய்வது என்று இங்குப் பார்க்க இருக்கின்றோம்.

வருமான வரி தக்கல் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தேவையான படிவத்தை வருமான வரித்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆப்லைனில் சேமித்து மீண்டும் பதிவேற்றுவது.

இரண்டாவது முறையில் தேவையான விவரங்களை இணையதள உதவியுடன் ஆன்லைன் படிவத்தில் உள்ளிட்டுச் சமர்ப்பிப்பது ஆகும்.

எனினும் இந்த இரண்டு முறைகளும் தனிநபர்களுக்கான வருமான வரித் தாக்கலினை பொறுத்தவரையில் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 இரண்டு படிவங்களுக்கு மட்டுமே சேவையினை அளிக்கின்றது.

சரி, இப்போது எக்செல் கோப்பினை பதிவிறக்கம் செய்து எப்படி வருமான வரி தாக்கல் செய்வது என்று படிப்படையாகப் பார்ப்போம்.

இணைதளம்

இணைதளம்

முதலில் வருமான வரித்துறையின் இணையதளமான www.incometaxefiling.gov.in என்ற முகவரிக்கு உலாவியில் செல்ல வேண்டும். அங்குப் பதிவிறக்கங்கள் என்ற டேபினில் உள்ள ஐடிஆர் படிவம் இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலமாகப் படிவங்கள் உள்ள பக்கத்திற்குச் செல்ல முடியும்.

பதிவிறக்கம் செய்தல்

பதிவிறக்கம் செய்தல்

உங்களது வருமானத்தைப் பொருத்து எந்தப் படிவம் வேண்டும் என்பதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். படிவங்கள் இரண்உ மென்பொருள் வடிவங்களாகக் கிடைக்கும். ஒன்று எக்செல் மற்றொன்று ஜாவா வடிவம் ஆகும். உங்களுக்கு எந்த மென்பொருள் வடிவத்தில் படிவம் வேண்டுமோ அந்த வடிவத்தில் பதிவிறக்கும் செய்துக்கொள்ளலாம்.

படிவத்தைப் பூர்த்திச் செய்தல்

படிவத்தைப் பூர்த்திச் செய்தல்

படிவத்தைப் பூர்த்திச் செய்யும் போது சிவப்பு நிறம் உள்ள செல்களைக் கண்டிப்பாகப் பூர்த்திச் செய்ய வேண்டும், தரவுகளைப் பச்சை நிற செல்களில் உள்ளிட வேண்டும். இப்படிச் செய்யும் போது சில செல்கள் தானாகவே நீங்கள் உள்ளிட்ட தரவை வைத்து சில செல்களை நிறப்பவும். அது அமைப்பின் மூலமாகத் தானாகவே கணக்கிட்டுப் புதுப்பித்துக்கொள்ளும். படிவத்தைப் பூர்த்திச் செய்யும் போது சரிபார்க்கவும் பொத்தானை அழுத்துவதன் மூலமாகத் தேவையான அனைத்து விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

எக்செல் வடிவ படிவத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்

எக்செல் வடிவ படிவத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள்

எக்செல் படிவங்கள் மூலமாகப் படிவத்தைப் பூர்த்திச் செய்யும் போது சில செயல்பாடுகள் இயங்காது. எக்செல் கோப்புகள் மேக்ரோ மற்றும் ஆக்டிவ் எக்ஸ் உதவியுடன் செயல்படும் என்பதால் இவற்றை எக்செல் வொர்க் பக்கத்தில் செயல்படச் செய்ய வேண்டும். அதற்கு எக்செல் File > Excel options > Trust Centre > Trust Centre Settings > Macro Settings > Enable All Macro > Click 'OK' என்பதைத் தேர்வு செய்வதன் மூலமாக ஆக்டிவ் எக்ஸ் செட்டிங்கினை மேக்ரோ போன்று செயல்பட வைக்க முடியும்.

பல தாள்கள்

பல தாள்கள்

ஐடிஆர் படிவங்களைப் பொருத்தவரை பல தாள்கள் போன்ற பக்கங்கள் இருக்கும். அவற்றில் சில பொதுவாகத் தேவைப்படும் விவரங்கள் மற்றும் வரி கணக்கிடுவதற்கான உங்கள் வருமான மற்றும் வரி தள்ளுபடி விவரங்களும் அளிப்பதற்காக இருக்கும். ஒவ்வொரு பக்கங்களைத் திறந்து உங்களுக்கான விவரங்களி உள்ளிட்டுத் தேவையான புலங்களை நிரப்ப வேண்டும். பொது விவரங்கள் குறித்த புலன்களை எல்லா இடங்களிலும் பூர்த்திச் செய்தல் அவசியம். வருமான குறித்த புலன்களை நிரப்பும் போதே பிற பக்கங்களில் உள்ள நிறையப் புலன்களைத் தானாகவே பூர்த்திச் செய்துகொள்ளும்.

எக்ஸ்எம்எல்

எக்ஸ்எம்எல்

எக்செல் கோப்பினை முழுமையாகப் பூர்த்திச் செய்து சேமித்த பிறகு எக்ஸ்எம்எல் கோப்பாக உருவாக்கவும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போது உங்களுக்குக் கிடைக்கும் எக்ஸ்எம்எல் கோப்பினில் விவரங்கள் சரியாகப் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

முதல் முறையாக வரி தாக்கல் செய்பவர்கள்

முதல் முறையாக வரி தாக்கல் செய்பவர்கள்

எக்ஸ்எம்எல் கோப்பினை பதிவேற்ற மீண்டும் வருமான வரித் துறையின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முதல் முறையாக வரி தாக்கல் செய்யப் போகின்றீர்கள் என்றால் ‘புதிதாகப் பதிவு செய்தல்' என்பதைத் தேர்வு செய்து பயனர் ஐடி, கடவுச் சொல், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை உருவாக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் வரி செலுத்தியுள்ளீர்கள் என்றால் பதிவு செய்த பயனர் என்ற தெரிவை கிளிக் செய்யலாம்.

உள்நுழைதல்

உள்நுழைதல்

வருமான வரித் துறை இணையதளத்தில் பயனர் ஐடி, பான் எண், கடவுச்சொல், பிறந்த நாள் மாற்றும் கேட்சாவை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.

பதிவேற்றம்

பதிவேற்றம்

e-file மெனுவிற்குச் சென்று படிவத்தைப் பதிவேற்றவும் என்ற தெரிவை தேர்வு செய்து தேவையான விவரங்களை உள்ளிட்டு எக்ஸ்எம்எல் கோப்பினை பதிவேற்றம் செய்து வரி தாக்கல் செய்யலாம்.

டிஜிட்டல் கையொப்பம்

டிஜிட்டல் கையொப்பம்

டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் என்ற தெரிவை தேர்வு செய்வதன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

டிஜிட்டல் கையொப்பம் வைத்துள்ளவர்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள கையொப்பத்தைப் பதிவேற்றம் செய்து வருமான வரி தாக்கல் செய்தால் எளிதாக வரி தாக்கல் செய்துவிடலாம்.

 

மின்னணு சரிபார்ப்பு

மின்னணு சரிபார்ப்பு

ஒரு முறை வரி தாக்கல் செய்து முடித்த உடன் மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டினை பெற ஆதார் ஒரு முறை கடவுச் சொல் மூலமாகவும், வங்கி கணக்குகள் பயன்படுத்தியும் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

E filing income tax return: How individuals can upload any ITR using excel utility in Tamil

E filing income tax return: How individuals can upload any ITR using excel utility in Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X