இணையதள, மின்னணு வங்கி சேவையில் மோசடி நடந்தால் 3 நாட்களில் புகார் அளிக்க வேண்டும்: ஆர்பிஐ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இணையதள மற்றும் மின்னணு வங்கி சேவையினைப் பயன்படுத்தி வரும் போது ஏதேனும் மோசடிகள் நடைபெற்றால் மூன்று நாட்களில் புகார் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தப் புகார் உறுதி செய்யப்பட்ட உடன் 10 நாட்களுக்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.

ஒரு வேலை வாடிக்கையாளர் 4 முதல் 7 நாட்கள் வரை தாமதமாக வங்கி பரிவர்த்தனை மோசடி குறித்துப் புகர் அளித்தால் 25,000 ரூபாய் வரை அவர் பொறுப்பேற்க வேண்டும். வாடிக்கையாளர் மீது தவறு இல்லாத போதிலும் காலதாமதமாகப் புகார் அளித்தால் இந்த நிலைக்குத் தள்ளப்படுவார். இல்லை என்றால் முழு இழப்பிற்கு அவரே பெருப்பு ஆவார்.

வங்கி முழுப் பொறுப்பு

வங்கி முழுப் பொறுப்பு

வாடிக்கையாளர் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை குறித்துப் புகார் அளித்த பிறகு ஏதேனும் மோசடி நடந்தால் அதற்கு வங்கி முழுப் பொறுப்பை ஏற்று வாடிக்கையாளர்க்குப் பாதுகாப்பான சேவையுடன் பணத்தைத் திருப்பி அளிக்கும்.

காரணம்

காரணம்

வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை மூலம் மோசடியாக நிறையப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றது என்ற புகார்கள் அண்மைக்காலமாக்க அதிகரித்து வருவதினால் ஆர்பிஐ தனது விதிகளை மாற்றி அமைத்துள்ளது.

வாடிக்கையாளர் பொறுப்பு அள்ள

வாடிக்கையாளர் பொறுப்பு அள்ள

வங்கி அல்லது மூன்றாம் தரப்பு மூலம் ஏதேனும் தவறு நடந்து இருக்கும் நிலையில் அதற்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சம்மதமும் இல்லை என்றால் அவர் அதற்குப் பொறுப்பு ஆக மாட்டார்.

அபராதம்
 

அபராதம்

இதுவே வாடிக்கையாளர்களின் துணையுடன் நடந்து இருக்கும் போது 25,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும். சேமிப்பு கணக்கு வைத்துள்ளதவர்கள் அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை பொறுப்பேற்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

காப்பீடு

காப்பீடு

வங்கி தரப்புத் தவறுகள், அல்லது மூன்றாம் நபர் மோசடி என்றால் காப்பீடு கோரிக்கைக்காகக் காத்திருக்காமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.

எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள்

எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள்

ஆர்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் மற்றும் மின்னஞ்சல் விழிப்புட்டல்கள் போன்றவற்றை மின்னணு பரிவர்த்தனைக்காக இணைப்பது நல்லது என்றும் வழியுறுத்துகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Customers should report fraud in 3 days to avoid losses: RBI

Customers should report fraud in 3 days to avoid losses: RBI
Story first published: Friday, July 7, 2017, 12:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X