ஜிஎஸ்டி: எம்ஆர்பி விலையை திருத்தி ஸ்டிக்கர் ஓட்டவில்லை என்றால் நிறுவனர்களுக்கு அபராதத்துடன் சிறை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புப் பொருட்கள் மீது உள்ள எம்ஆர்பி விலையினை ஜிஎஸ்டிக்கு பிறகு மாற்றி ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் நிறுவனர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனைக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டின் கீழ் சம்பாதிக்கும் நன்மைகள் உற்பத்தியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் நன்மைகள் பெற்றுள்ளனர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை மத்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்தியது.

நுகர்வோர் விவகார துறை

நுகர்வோர் விவகார துறை

ஒருவேலை உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரியான விவரங்களை அளிக்கவில்லை என்றால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதத்துடன் சிறை தண்டனை அளிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இன்று அறிவித்தார்.

உதவி எண்

உதவி எண்

மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனங்களுக்கு உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட உதவி எண்ணின் லைனை 14-ல் இருந்து 60 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

பேக் செய்யப்பட்ட சரக்குப் பொருட்களில் எம்ஆர்பி விலையைத் திருத்தி ஸ்டிக்கர் ஒட்டவேண்டியது கட்டாயம் என்று பாஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கெடு

கெடு

புதிய எம்ஆர்பி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விற்கப்படாத பொருட்களைச் செப்டம்பர் மாதத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் இந்த முடிவினால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள ஜிஎஸ்டிக்கு முந்தைய பொருட்களினை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த முடிவு வாடிக்கையாளர்கள் பலர் விலை மாற்றம் குறித்தும் எம்ஆர்பி குறித்தும் அளித்த புகாரில் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.

 

அபராதங்களும், தண்டனையும்

அபராதங்களும், தண்டனையும்

உற்பத்தி நிறுவனங்கள் இந்த விதியினைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் முதல் முறை கண்டறியப்படும் போது 25,000 ரூபாயும், இரண்டாவது முறை 50,000 ரூபாயும், மூன்றாம் முறை 1 லட்சம் ரூபாய் எனத் தொடர்ந்து செய்தால் ஒரு வருடம் சிறை தண்டனை வரை பெற வேண்டி வரும்.

இரட்டை முறை எம்ஆர்பி

இரட்டை முறை எம்ஆர்பி

நுகர்வோர்கள் மால், விமான நிலையம் மற்றும் உணவகங்களில் உள்ள இரட்டை முறை எம்ஆர்பி முறை அகற்றவும் முடிவை எடுத்துள்ளதாக நுகர்வோர் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

2018 ஜனவரி 1

2018 ஜனவரி 1

இந்த உத்தரவின் பேரில் 2018 ஜனவரி 1 முதல் தண்ணீர், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு இரட்டை விலையில் பிரீமியம் இடங்களில் வைத்து விற்க முடியாது.

 நோட்டிஸ்

நோட்டிஸ்

புதிய முடிவுகள் குறித்துக் கோகோ கோலா, பெப்சி, ரெட் புல், யுரேகா ஃபோர்ப்ஸ், ஃப்ளிப் கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி இரட்டை விலை முறையை நீக்க அறிவுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 விளம்பரம்

விளம்பரம்

சரக்குப் பெட்டியில் புதிய விலைகள் அச்சிடப்பட வேண்டும் எனவும், நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு, நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வுக்கு விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்றும் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Under GST Penalty, including jail, for manufacturers if not reprinting revised MRP on unsold old goods

Under GST Penalty, including jail, for manufacturers if not reprinting revised MRP on unsold old goods
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X