ஐடி துறையில் 38% குறைவான வேலைவாய்ப்பு.. நாஸ்காம் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய ஐடி துறைக்குப் போராத காலமாக இருக்கும் இந்த நேரத்தில் 2017 நிதியாண்டில் ஐடி துறையில் 20 முதல் 38% அளவாகக் குறைந்து தான் வேலைவாய்ப்பு இருக்கும் என்று நாஸ்காம் அறிவித்துள்ளது.

ஐடி துறை 2016-2017 நிதி ஆண்டில் என்ன தான் 1.8 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து இருந்தாலும் 2017-2018 நிதி ஆண்டில் 1.3 முதல் 1.5 லட்சம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நாஸ்காம் கூறுகின்றது.

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

நாஸ்காமின் இந்த அறிக்கை குறித்து விளக்கம் அளித்த ஆர் சந்திரசேகர இந்த வேலை வாய்ப்பு இழப்பிற்கு ஆட்டோமேஷன் தான் காரணம் என்றும் அதனால் தான் புதிய வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குறையும் செலவுகள்

குறையும் செலவுகள்

இந்திய ஐடி துறை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு ஆடோமேஷன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகின்றன, இதனால் அவர்களுக்குச் செலவுகளும் குறைகின்றது.

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ்

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ்

அன்மையில் டிசிஎஸ் நிறுவனம் 1,414 நபர்களைப் பணியை விட்டு நீக்கியுள்ளது. இதே போன்று இன்ஃபோசிஸ் நிறுவனமும் 1,800 நபர்களை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பணி நீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. விப்ரோ நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 1,309 ஊழியர்களாகக் கூடுதலாக நிறுவனத்தின் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது

தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது

பொருளாதாரச் சிக்கல் மற்றும் துறை சார்ந்த பிரச்சனைகளால் பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைந்து காணப்படுகின்றது. தொழில்நுட்பங்களால் அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது, அதற்கு ஐடி துறையும் விதிவிலக்கு இல்லை.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வேலையின்மை சதவீதம்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வேலையின்மை சதவீதம்

தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தி வரும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இதே நிலை தான் நீட்டிக்கின்றது. தற்போது அந்த நாடுகளில் எல்லாம் வேலையின்மை சதவீதம் பூஜ்ஜியமாக இருப்பினும் பணி நீக்கம் நடைபெற்று தான் வருகின்றன. இதற்குப் பொருளாதார வளர்ச்சியும் முக்கியக் காரணம் என்று தெரிவித்தார்.

வளாக நேர்காணல் குறையும்

வளாக நேர்காணல் குறையும்

பொறியியல் கல்லூரிகளில் நேரடியாகச் சென்று வேலை வாய்ப்பினை அளிப்பதில் ஐடி நிறுவனங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. எண்ணிக்கை அளவிலான தகவல் ஏதும் அளிக்காவிட்டாலும் கல்லூரி வளாகத்திற்கு வந்து வேலைவாய்ப்பு அளிப்பது இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் குறையும் என்றும் சந்திரசேகரக் கூறினார்.

நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வளாகத் தேர்வு, அலுவலக நேர்முகத் தேர்வு எனப் பல வகையினைக் கையாண்டு வந்தாலும் இந்த ஆண்டுக் கல்லூரி வளாகத்திற்கு வந்து வேலைவாய்ப்பு அளிப்பது குறைந்துவிடும் என்றார்.

 

தமிழகம்

தமிழகம்

2016-2017 நிதி ஆண்டில் தமிழகத்தில் இருந்து 30,000 நபர்கள் தான் கல்லூரி வளாக நேர்முகத் தேர்வின் மூலம் வேலைகளை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அதில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

வருவாய் மற்றும் ஊழியர்கள்

வருவாய் மற்றும் ஊழியர்கள்

பணிக்கு எடுக்கும் ஆட்களைக் குறைத்து வருவாயினை அதிகரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. நிறுவனங்கள் மறுசீரமைப்பை மேற்கொள்ளாவிட்டால், அது 0.5-3% மக்களைப் பாதிக்கும். முன்பு வருவாயில் 100% உயர்வு ஊழியர்களிலும் 100% உயர்ந்துள்ளது என்று தெரிகின்றது. இப்போது ஊழியர்களினை வேலைக்கு எடுப்பது 60% தான் உயர்ந்துள்ளது, "என்று அவர் கூறினார்.

நாஸ்காம்

நாஸ்காம்

ஐடி தொழில் துறையின் எந்த அச்சமும் பாதிக்கப்படுவதால், நாஸ்காம் தலைமையிடம் இந்த உலகளாவிய மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் முழுமையாக உள்ளது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT sector to see up to 38% fewer jobs this fiscal: Nasscom

IT sector to see up to 38% fewer jobs this fiscal: Nasscom
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X