என்னது.. விரைவில் 2,000 ரூபாய் நோட்டின் மதிப்பும் நீக்கப்படுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளஞ்சிவப்பு நிற ரூபாய் நோட்டுகள் எங்கே என்று இரண்டு நாட்களுக்கு அனைத்துத் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். புதிய 2000 ரூபாய் நொட்டுகள் வெளிவந்த காலம் முதல் பலர் இந்த ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற்றுவிடும் என்று கூறுகின்றனர்.

 

அதே நேரம் சிலர் மத்திய அரசு கண்டிப்பாக இந்த ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறுகின்றனர். சரி இங்கு நாம் மத்திய அரசு ஏன் 2000 ரூபாய் நோட்டின் மதிப்பை நீக்க வேண்டும் என்ற காரணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முதன்மை இயக்கு அலுவலர் நீரஜ் வயாஸ் இது பற்றி நமக்குக் கூறும் போது தற்போது இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து 500 ரூபாய் நோட்டு மட்டும் தான் வருகின்றது. 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டும் மீண்டும் திரும்பி வங்கிக்கு வரும் நோட்டுக்கள் என்று தெரிவித்தார்.

500 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வெளியீடு

500 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வெளியீடு

ஆங்கில இதழ் ஒன்றின் கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில் 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வெளியிட ரிசர் வங்கி முடிவு செய்துள்ளதாகக் கூறி இருந்தது.அதே நேரம் பண மதிப்பு நீக்கம் அறிவித்த காலம் போன்று பெரிதாக ரொக்கப்பணத் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்தியது.

சில்லறை சிக்கலைத் தீர்க்க வழி
 

சில்லறை சிக்கலைத் தீர்க்க வழி

வங்கி விவகாரங்கள் குறித்த வல்லுநர்கள் ஆர்பிஐ அதிகப்படியாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டின் அளவைக் குறைக்கும் விதமாக இந்த 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் சந்தைக்கு வந்துகொண்டு இருக்கின்றன என்றும் சில்லை பிரச்சனைகள் தீரும் என்று கூறுகின்றனர். இது வரை வங்கி அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களின் கருத்தைப் பார்த்தோம். இப்போது நமது ஆய்வு கருத்துக்களை இங்குப் பார்ப்போம்.

எஸ்பிஐ வங்கி ஏடிம் சீரமைப்பு

எஸ்பிஐ வங்கி ஏடிம் சீரமைப்பு

இந்தியாவில் மொத்தம் 2.2 லட்சம் ஏடிஎம் மையங்கள் இருப்பதாகவும் அதில் 58,000 ஏடிஎம் மையங்கள் எஸ்பிஐ வங்கிக்கு உறியது. 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் அளிக்க எஸ்பிஐ சில ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைப்புச் செய்து இருந்தது ஆனால் அதில் பலவற்றை இப்போது 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யும் அமைப்பாக மாற்றப்பட்டு வருகின்றது எனத் தகவல்கள் வந்துள்ளன. இதனை வைத்துப் பார்க்கும் போது 2,000 ரூபாய் நோட்டுகளை அந்த ஏடிஎம் இயந்திரங்களில் வைக்க முடியாது. எனவே இப்போதைக்கு 2,000 ரூபாய் நோட்டு ஏடிஎம் களில் வைக்க முடியாது.

தற்காலிக நடவடிக்கை

தற்காலிக நடவடிக்கை

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பை நீக்கிய மத்திய அரசு வேகமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டினை குறைப்பதற்காகவே இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

யோகா குரு மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பர தூதுவரான பாபா ராம்தேவ் பண மதிப்பு நீக்கத்தினை அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது தவறு, இதனால் கருப்புப் பணம் ஒன்று அழிந்து விடாது என்று கருத்து தெரிவித்து இருந்தார். அது இப்போது உறுதி ஆகியுள்ளது. கள்ளப்பணம் மற்றும் கருப்புப் பணம் இரண்டும் பெரிதாக அழிவுற்றதாகத் தெரியவில்லை.

எஸ் குருமூர்த்தி

எஸ் குருமூர்த்தி

ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரான தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ் குருமூர்த்திச் சில வருடங்களில் இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகா பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

கள்ளப் பணம்

கள்ளப் பணம்

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு இருந்தாலும் ஒரு பக்கம் கள்ளப் பணம் அதிகரித்துள்ளது என்று கூறலாம். அதிகளவில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கள்ளப்பணமாகச் சிக்கியுள்ளன.

200 ரூபாய் நோட்டு

200 ரூபாய் நோட்டு

ஆர்பிஐ புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப் போகின்றது என்று என்ன தான் செய்திகள் வெளியாகி வந்தாலும் ஆர்பிஐ தரப்பு இது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தங்களது இணையதளத்தில் இது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

திரும்பப் பெறும் எண்ணம் இல்லை

திரும்பப் பெறும் எண்ணம் இல்லை

அதுமட்டும் இல்லாமல் மாநிலங்கள் அவை அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ 2,000 ரூபாய் நோட்டினை திரும்பப் பெறும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மைதானா?

உண்மைதானா?

இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இருக்கலாம் ஆனால் அது உண்மைதானா? 2,000 ரூபாய் நோட்டுக்கு நீண்ட ஆயுள் இல்லையெனக் கூறும் விமர்சகர்களின் குரல்கள் மற்றும் அரசி நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது இது உண்மை தான் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. பொருத்து இருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why government may 'demonetise' new Rs 2,000 note

Why government may 'demonetise' new Rs 2,000 note
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X