யார் இந்த இல்லுமினாட்டிகள்..? நாம் பயப்படும் அளவிற்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய வர்த்தக மற்றும் வாழ்க்கை முறையில் ஒரு நாட்டை அடங்கி ஆள வேண்டும் என்றால் இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று அரசியல் மற்றொன்று பணம். அன்று முதல் இன்று வரையில் உலகில் அனைத்து இடத்திலும் அரசியலிலும் பணமும் ஒரு முக்கிய கருவியாக கொண்டே இயங்கி வருகிறது. இதை நாம் மறுக்க முடியாது.

 

இந்த பணத்தை கொண்டு வரும் வர்த்தக சந்தையே அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. வர்த்தக சந்தையின் வாயிலாக ஒரு நாட்டையல்ல ஒட்டுமொத்தை உலகையே தனது கைகளில் வைத்திருப்பதாக நம்பப்படும் 13 குடும்பங்களை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். இந்த 13 குடும்பங்களுக்கு வேறு ஒரு பெயரும் உண்டு 'இல்லுமினாட்டி'.

தனிஒருவன்

தனிஒருவன்

ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடித்த தனிஒருவன் இந்த இல்லுமினாட்டி கான்செப்ட்-க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. இதில் அரவிந்த் சாமி (இல்லுமினாட்டி) மறைமுகமாக தனது தந்திர புத்தியால் வெளியாட்களை கொண்டு பார்மா, ரியல் எஸ்டேட், சுரங்கம் என பல துறைகளை கட்டியாண்டு வருவது மட்டுமல்லாமல் அரசியல் வாயிலாகவும் தனக்கு தேவையான சட்டதிட்டங்களை தானே வடிவமைத்து கொண்டு வந்தார்.

இதேயே பெரிய வடிவில் செய்பவர்கள் தான் இந்த இல்லுமினாட்டி.

 

 

நிரூபிக்க முடியாத உண்மை

நிரூபிக்க முடியாத உண்மை

இல்லுமினாட்டி கான்செப்ட் இதுவரை நிரூபிக்க முடியாத உண்மையாகவே உள்ளது, இதற்கு பல காரணங்களை கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இல்லுமினாட்டி பற்றி மக்களுக்கு தற்போது மிகப்பெரிய அளவிலான புரிதலும், விழிப்புணர்வு கிடைத்துள்ளது.

இல்லுமினாட்டி
 

இல்லுமினாட்டி

சமுக வலை மற்றும் இணைய தளங்களில் இல்லுமினாட்டி பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், அனைத்தில் ஒற்றுமையாக இருப்பது இல்லுமினாட்டி அமைப்பில் இருக்கும் 13 குடும்பங்கள்.

இவர்கள் யார் இவர்களிடம் அப்படி என்ன இருக்கிறது என்பதேயே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 

ஏஸ்டார் குடும்பம்

ஏஸ்டார் குடும்பம்

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்கா, பிரட்டன் நாடுகளில் வர்த்தகம், அரசியல், மக்கள் நல சேவைகள் என பல துறைகளில் கொடிக்கட்டி பரந்தவர்கள் தான் ஏஸ்டார் குடும்பம்.

ஏஸ்டர் குடும்பம் முதன் முதலில் தஞ்சம் அடைந்தது ஜெர்மனி தான், அதன்பின் வட அமெரிக்காவிற்கு சென்றாகள்.

 

ஜான் ஜேகப் ஏஸ்டார்

ஜான் ஜேகப் ஏஸ்டார்

ஏஸ்டார் குடும்பத்தில் இன்றுவரை மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்படுவது ஜான் ஜேகப் ஏஸ்டார் இவர் 1864-1912 ஆண்டு வரையில் வாழ்ந்தவர். இன்று இந்த குடும்பம் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கான அடித்தளமிட்டவர் ஜான் ஜேகப் ஏஸ்டார்.

பன்டி குடும்பம்

பன்டி குடும்பம்

பல வருடங்களாக இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் அமெரிக்க அரசியல் மற்றும் அரசுடன் பணியாற்றி வருகின்றனர். இதற்கு நேராக இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லுமினாட்டி அமைப்புடன் நெருங்கி வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களின் வாயிலாகவே மான்ஹேட்டன் பிராஜெக்ட், சிஐஏ, நேசிய பாதுகாப்பு, பிரைவேட் லா மற்றும் கவுன்சில் ஆஃப் பாரின் ரிலேஷன் போன்ற பல முக்கிய திட்டங்கள் இயக்கப்பட்டதாகவும் ரேங்கர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கோலின்ஸ் குடும்பம்

கோலின்ஸ் குடும்பம்

இல்லுமினாட்டி அமைப்பில் இருக்கும் 13 குடும்பங்களில் கோலின்ஸ் குடும்பம் தான் மிகவும் ரகசியமாக இயங்கி வருகிறது. இல்லுமினாட்டி செய்யும் அரசியல் வேலைகளில் கோலின்ஸ் குடும்பத்தின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

இந்த குடும்பத்திற்கு பிரட்டன் வர்த்தக சந்தை மற்றும் அரசியல் தலைவர்களுடன் மிகப்பெரிய அளவிலான தொடர்புகள் உள்ளது.

இக்குடும்பத்தில் மிகவும் பிரபலமானவர்கள் என்றாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் மைக்கல் கோலின்ஸ் மற்றும் நடிகை ஜோன் கோலின்ஸ் ஆகியோர்.

 

டுபான்ட் குடும்பம்

டுபான்ட் குடும்பம்

அமெரிக்க தொழிற்துறையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வரும் டுபான்ட் நிறுவனத்தின் ஆஸ்தான நிர்வாகிகள் அனைவரும் டுபான்ட் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ப்ரீமேன் குடும்பம்

ப்ரீமேன் குடும்பம்

கோலின்ஸ் குடும்பத்தை போல இல்லுமினாட்டி அமைப்பில் இருக்கும் மாற்றொரு மர்மமான மற்றும் நிழல் உலக குடும்பம் என்றால் அது ப்ரீமேன் குடும்பம் தான்.

கென்னடி குடும்பம்

கென்னடி குடும்பம்

அமெரிக்க அரசியலில் கென்னடி குடும்பத்தின் ஆதிக்கத்தை பற்றி கூறவேண்டியது அவசியமில்லை. இந்த குடும்பமும் இல்லுமினாட்டி அமைப்பில் முக்கிய உறுப்பினர்.

இந்த குடும்பத்தை சேர்ந்த பல இல்லுமினாட்டி அமைப்பின் திட்டங்களுக்கு ஒத்துழைக்காத காரணத்தால் ஜோசப் கென்னடியின் பல குழந்தைகள், ஜோசப் ஜூனியர், ஜான், ராப்ர்ட் ஆகிய பலர் மோசமான மற்றும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்ததாக கருத்து இணையதளங்களில் பரவிக்கிடக்கிறது.

சமீப காலத்தில் இந்த குடும்பத்தின் ஆதிக்கம் அமெரிக்க அரசியலில் இல்லை என்றாலும் இன்றும் இக்குடும்பத்தின் ஆதிக்கம் இந்த அமைப்பில் உள்ளது.

 

லீ குடும்பம்

லீ குடும்பம்

சீனாவில் லீ என்னும் பெயர் பரவலாக காணப்பட்டாலும், இந்த அமைப்பில் லீ குடும்பத்தின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இக்குடும்பத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் சீனாவின் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த காலத்தில் சீனாவின் பிரதமராக இருந்த லீ பெங் மற்றும் இக்குடும்பத்தை சேர்ந்த பல சீனா மற்றும் ஹாங்காங் அரசியல் மற்றும் வர்த்தக சந்தையில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஒனஸ்சிஸ் குடும்பம்

ஒனஸ்சிஸ் குடும்பம்

சர்வதேச கப்பல் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒனஸ்சிஸ் குடும்பம் இந்த அமைப்பில் உள்ளது.

இக்குடும்பத்தில் முக்கியமான தலையாக பார்க்கப்படுவது அரிஸ்டோடில் ஒனஸ்சிஸ். ஜான் எப்.கென்னடியின் மனைவியான Jacqueline Kennedy அவரின் இரண்டாவது கனவர் தான் அரிஸ்டோடில் ஒனஸ்சிஸ்.

தற்போது ஜாக்குலின் பெயர் ஜாக்குலின் கென்னடி ஒனஸ்சிஸ்.

 

ரெனால்ட்ஸ் குடும்பம்

ரெனால்ட்ஸ் குடும்பம்

சர்வதேச புகையில் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் ரெனால்ட்ஸ் குடும்பம் இந்த அமைப்பில் முக்கிய உறுப்பினராக உள்ளது.

ராக்பெல்லர் குடும்பம்

ராக்பெல்லர் குடும்பம்

உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த குடும்பங்களில் முதல் இடத்தில் இருக்கும் ரெனால்ட்ஸ் குடும்பம் இல்லுமினாட்டி அமைப்பில் முக்கிய உறுப்பினர். இந்த குடும்பத்திடம் கணக்கிடமுடியாத அளவிற்கு சொத்துக்களும், அதிகாரமும் உள்ளது.

இந்த குடும்பம் இன்று வரை ரியல் எஸ்டேட் முதல் தொழிற்துறை வரை பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

ராத்ஸ்சைல்டு குடும்பம்

ராத்ஸ்சைல்டு குடும்பம்

ராக்பெல்லர் குடும்பத்திற்கு இணையாக சக்தி வாய்ந்த குடும்பம் என்றால் ராத்ஸ்சைல்டு குடும்பம் தான்.

இக்குடும்பத்தின் அஸ்திவாரம் மேயர் ஆம்ஸ்செல் ராத்ஸ்சைல்டு முதல் துவங்கியது. இவரின் 5 மகன்கள் ஐரோப்பியாவின் 5 முக்கிய பகுதிகளுக்கு சென்று வங்கி மற்றும் கடன்களின் வாயிலாக மிகப்பெரிய அளவிலான சொத்துக்களையும் அதிகாரத்தையும் சம்பாதித்தனர்.

இந்த குடும்பம் ஆயுத விற்பனையில் பெரிய அளவில் ஈடுப்பட்டு இருப்பதாகவும் ரேங்கர் தளம் தெரிவித்துள்ளது.

 

ரஸ்செல் குடும்பம்

ரஸ்செல் குடும்பம்

பைபில் ஸ்டூடென் என்ற வரலாறு நிகழ்வை நிகழ்த்திய சார்லஸ் டி ரஸ்செல் இல்லுமினாட்டி அமைப்பின் ஆரம்பகட்ட மற்றும் முக்கிய உறுப்பினர் ஆவார். இவரின் வாயிலாக பல மத அமைப்புகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேன் டியூன் குடும்பம்

வேன் டியூன் குடும்பம்

நியூயார்க் நகரத்தை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த வேன் டியூன் குடும்பமும் இல்லுமினாட்டி அமைப்பில் உள்ளது. முந்தைய அமெரிக்காவில் இருந்த முக்கிய டச் குடும்பங்களில் வேன் டியூன் குடும்பமும் ஒன்று.

இண்டர்கனெக்டட் குடும்பங்கள்

இண்டர்கனெக்டட் குடும்பங்கள்

இந்த 13 குடும்பங்களுடன் டிஸ்னி குடும்பம், கரூப் குடும்பம், மெக்டொனால்டு குடும்பமும் உள்ளது.

பேஸ்புக் இணைப்பு

இக்கட்டுரை பிடித்திருந்தால் ஷேர் செய்யவும். மேலும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை தொடர்ந்து பின்தொடர எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்.

 

ஹோட்டல் சரவண பவன்

ஹோட்டல் சரவண பவன்

<strong>ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..!</strong>ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..!

புதிய வரி

புதிய வரி

<strong>மோடியின் அடுத்த டார்கெட் இவர்கள்தான்.. புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்..!</strong>மோடியின் அடுத்த டார்கெட் இவர்கள்தான்.. புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்..!

இந்திய ப..." data-gal-src="http:///img/600x100/2018/01/08-1515396335-tamilnadu600.jpg">
தமிழ்நாடு

தமிழ்நாடு

<strong>இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது..!!</strong>இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

13 Main Families of the Illuminati

13 Main Families of the Illuminati - Tamil Goodreturns | உலகை அடக்கியாளும் 13 குடும்பங்கள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X