டிடிஎச் நிறுவனங்களை மிரட்ட வரும் முகேஷ் அம்பானி.. மக்களுக்கு மீண்டும் ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜியோ போன் கேபிள் டிவி விரைவில் வெளிவர இருக்கின்றது. இது கேபிள் டிவி செட்-ஆ பாக்ஸ்சினை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுக் கேபிள் டிவி சேவையினை வழங்கும்

 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ போன் டிவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார், ஜியோ போன் பயனர்கள் தங்களது விருப்பனான டிவி, திரைப்படங்கள் மற்றும் கல்வி சார்ந்த தொலைக்காட்சி சேவைகளை மொபைல் போன் மூலமாகப் பார்த்து மகிழலாம் என்று அறிவித்துள்ளார்.

தொலைதூர கிராமங்கள்

தொலைதூர கிராமங்கள்

இந்தியாவில் உள்ள பல தொலைதூர கிராம்களில் கேபிள் டிவி மற்றும் இணையதளச் சேவைகள் கிடைக்காத நிலையில் எங்களது தொழில்நுட்ப பொறியாளர்கள் புதிய திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளனர். அதுதான் ஜியோ போன் டிவி என்றும் தெரிவித்தார்.

ஜியோ போன் டிவி

ஜியோ போன் டிவி

ஜியோ போன் டிவி ஸ்மார்ட் டிவி மட்டும் இல்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளிளும் ஜியோ போன் இணைப்பினை அளிப்பதன் மூலம் தொலைக்காட்சி சேவைகளினை பெற்று மகிழலாம். இதற்காக ஜியோ பயனர்கள் புதிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஜியோ போனை டிவி ஆகப் பயன்படுத்துவது எப்படி?
 

ஜியோ போனை டிவி ஆகப் பயன்படுத்துவது எப்படி?

தற்போது அனைத்துத் தொலைக்காட்சி சேனைகளும் தங்களது சேவையினை இணைத்ததிலும் லைவாக வழங்கி வருகின்றனர். ஜியோ போன் டிவி கேபிள் சேவையினைப் பயன்படுத்தி நீங்கள் எளிமையாக டிவி உடன் இணைத்துப் பயன்பெறலாம்.

செட் ஆ பாக்ஸ் போன்று சாதனம் ஏதேனும் வேண்டுமா?

செட் ஆ பாக்ஸ் போன்று சாதனம் ஏதேனும் வேண்டுமா?

ஆம், அதற்கு நீங்கள் கண்டிப்பாக உங்கள் போனை டிவி உடன் இணைக்கக் கூடிய சாதனம் ஒன்றை வாங்க வேண்டும்.

அந்தச் சாதனம் எதற்கு?

அந்தச் சாதனம் எதற்கு?

ஜியோ போனை டிவி உடன் இணைத்து மொபைல் திரையில் என்ன செல்கின்றதோ அதனை அப்படியே தொலைக்காட்சி பெட்டிகளில் பார்க்கலாம். எனவே எப்போது எல்லாம் மொபைல் போனில் டிவி பார்க்க விரும்புகின்றீர்களோ அதனை டிவி-லும் பார்த்து மகிழலாம்.

இணையதளம் மற்றும் தரவு எவ்வளவு தேவைப்படும்?

இணையதளம் மற்றும் தரவு எவ்வளவு தேவைப்படும்?

முகேஷ் அம்பானி 4 முதல் 5 மணி நேரம் வரை ஜியோ போன் உதவியுடன் டிவி பார்க்க 4ஜி இணையம் மற்றும் 512 எம்பி தரவு இருந்தால் டிவி பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

யாருக்கு இது அதிகப் பயன் அளிக்கும்?

யாருக்கு இது அதிகப் பயன் அளிக்கும்?

பொதுவாக யாரெல்லாம் அதிகமாக டிவி பார்க்க மாட்டார்களோ அவர்களுக்கு இந்த ஜியோ போன் கேபிள் டிவி டிடிஎச் கட்டணங்களைக் குறைக்க உதவும்.

309 ரூபாய்

309 ரூபாய்

ஜியோ போன் கேபிள் டிவி-ல் 309 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு நீங்கள் தினமும் 3 முதல் 4 மணி நேரங்களை வரை தொலைக்காட்சிகளைக் கண்டு கழிக்கலாம்.

ஜியோ போன் விலை

ஜியோ போன் விலை

1,500 ரூபாய்க்கு ஜியோ போன் வெளிவரும் என்று கூறப்படுகின்றது. இந்தப் போனை வாங்கிப் பயன்படுத்திய மூன்று வருடத்திற்குப் பிறகு திருப்பி அளித்தால் 1,500 ரூபாயினைத் திரும்பப் பெறலாம்.

மாதம் எவ்வளவு சேமிக்க முடியும்

மாதம் எவ்வளவு சேமிக்க முடியும்

ஜியோ போன் கேபிள் டிவியினை நீங்கள் பயன்படுத்தத் துவங்கினால் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Using Reliance JioPhone TV cable, you can save your DTH cable bill; how it process

Using Reliance JioPhone TV cable, you can save your DTH cable bill; how it process
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X