மோடியின் கனவு திட்டம் 2019 முதல் அதிரடி ஆரம்பம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்டல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பிஜேபி அரசு, முதல் முறையாகப் பட்ஜெட் அறிவிக்கப்படும் நேரத்தை மாலை 5 மணியில் இருந்து காலை 11 மணியாக மாற்றியது.

 

இதற்கு அடுத்தபடியாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு ரயில் பட்ஜெட் அறிக்கையை முழுமையாக நீக்கிவிட்டு மத்திய பட்ஜெட் அறிக்கையுடன் சேர்த்தது. அது மட்டுமல்லாமல் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியைப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செலவு செய்ய ஏதுவாகப் பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 29ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மோடி தலைமையிலான அரசு மாற்றியது.

அடுத்த மாற்றம்..

அடுத்த மாற்றம்..

இப்படிப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம் மற்றும் நாள்-ஐ தொடர்ந்து மாற்றி வரும் பிஜேபி அரசு, தற்போது ஜனவரி 1ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் ஜனவரி 1ஆம் தேதியன்று பட்ஜெட்-ஐ தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

 

2019ஆம் ஆண்டு முதல்...

2019ஆம் ஆண்டு முதல்...

இந்தப் புதிய மாற்றம் வருகிற 2019ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

ஆக, அடுத்தப் பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1, 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தப் பட்ஜெட் அறிக்கை வெறும் 9 மாத்திற்கானது.

 

ஜனவரி 2019
 

ஜனவரி 2019

2019 முழு ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும்.

இந்த இடைப்பட்ட காலத்திற்கு மத்திய அரசு அனைத்துப் பொருளாதாரத் தரவுகளையும் மறுசீராய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிதியாண்டு மாற்றம் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகவில்லை, ஆனாலும் அரசு துறைகளில் இதற்கான பணிகள் மிகவும் முக்கியத்துவம் பெற்று நடந்து வருகிறது.

 

தேர்தல்

தேர்தல்

2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களின் பொதுத்தேர்தல் நடைபெறவும் உள்ளது. இதனால் 2018 நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவிலான தாக்கம் இந்திய சந்தையின் மீது இருக்கும்.

தேவையற்ற ஒன்று...

தேவையற்ற ஒன்று...

இந்நிலையில் நிதியாண்டு மாற்றத்தைக் குறித்து ஆய்வு செய்த சங்கர் ஆச்சாரியா குழு இதனைத் தேவையற்ற ஒன்று, இதனால் இந்திய பொருளாதாரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்ற மத்திய அரசு கருத்து முழுமையாக நினைவாகாது.

அறுவடை..

அறுவடை..

செப்டம்பர்-அக்டோபர் காலத்தில் பெய்யும் பருவமழை, நாட்டின் விவசாயத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவும், மேலும் நிதியாண்டு மாற்றத்தின் மூலம் அறுவடை காலத்திற்கும் ஏற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என மத்திய அரசு வாதாடுகிறது.

உண்மை நிலை..

உண்மை நிலை..

பருவமழை, அறுவடை காலத்திற்கு ஏற்ப பட்ஜெட் தாக்கலை மாற்றியமைப்பதை விடவும், விவசாயம் சார்ந்த பொருளாதாரம் கொண்ட இந்தியாவிற்கு விவசாயத்தை மேலும் வளர்க்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தினால்.

தண்ணீர் சேமிப்பு..

தண்ணீர் சேமிப்பு..

இந்தியாவில் பருவமழை மிகவும் மோசமாக இருந்தாலும் கூட 2,600 பில்லியன் கியூபிக் மீட்டர் மழையைப் பெறும். இந்தியாவின் தண்ணீர் தேவையோ 1,100 BCM தான்.

ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை நடைமுறைப்படுத்திய சிறப்பான திட்டங்கள் மூலம் வெறும் 253 BCM மழைநீரை மட்டுமே சேமிக்கிறோம்.

 

ஓட்டை..

ஓட்டை..

விவசாயத்தை உற்பத்திக்காகச் செயல்படுத்தும் நிதியாண்டு மாற்றத்தில் அடித்தளத்திலேயே இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்துக்கொண்டு நிதியாண்டை மாற்றி என்ன பயன்.

செலவுகள்..

செலவுகள்..

மத்திய அரசு கூறும்வகையில், வறட்சியான நிதியாண்டில் நாட்டின் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்திய கிராம பகுதிகளில் கூடுதல் செலவுகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்துள்ளது நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று.

 

 

 இதுதான் சரி..

இதுதான் சரி..

ஆக மத்திய அரசு நிதியாண்டு மாற்றும் திட்டத்தை விடுத்த மழைநீரை எப்படிச் சிறப்பாகச் சேமித்து நாட்டின் விவசாயத் துறை உற்பத்தியை மேம்படுத்துவது என்பதை யோசிக்கலாம்.

திசை மாற்றும் முயற்சி..

திசை மாற்றும் முயற்சி..

மத்திய அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும் தோல்வியில் முடிந்த நிலையில், ஒவ்வொரு முறையும் தோல்வியை மூடி மறைக்க ஏதேனும் ஒரு புதிய அறிவிப்பை விட்டு மூடிமறைக்கிறது. அத்தகைய அறிவிப்பாகவே இது இருக்குமென எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Financial Year from 2019, Budget will be November 2018

New Financial Year from 2019, Budget will be November 2018 - Tamil Goodreturns | 2019 முதல் புதிய நிதியாண்டு.. மோடியின் திட்டம் நிறைவேறியது..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X