ரூ.8,333 மேல் மாத வருமானம் இருந்தால் ரேஷன் ரத்து: நியாய விலை கடைக்கு மூடுவிழா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு மாத வருமானம் 8,333 ரூபாயும், 5 ஏக்கர் நிலம், ஏசி, பிர்ட்ஜ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ வருமான வரி செலுத்துகின்றீர்கள் என்றாலோ உங்களுக்கு ரேஷன் கார்டுகள் ரத்துச் செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

 

தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாகப் பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இதனால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை என அரசு கூறினாலும் மோசமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டம் என்பது காலம் காலமாக அனைவருக்கும் பொதுவானத் திட்டமாக இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் இதைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும், பொதுமக்களாலும் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.

வகைப்படுத்தல்

வகைப்படுத்தல்

இப்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி பொதுவிநியோகத் திட்டப் பயனாளிகளை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமையில்லாத பிரிவினர் என வகைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதன்படி தான் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருமான வரியும், குளிரூட்டியும்

வருமான வரியும், குளிரூட்டியும்

அதன்படி, குடும்பத்தில் எவராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் குளிரூட்டி அல்லது கார் வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பமும் முன்னுரிமையற்றதாக அறிவிக்கப்படும்.

யாரெல்லாம் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்?
 

யாரெல்லாம் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்?

அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினராகக் கருதப்பட்டு அவர்களும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்.

மத்திய அரசிடம் கணக்குக் காட்ட பட்டியல்

மத்திய அரசிடம் கணக்குக் காட்ட பட்டியல்

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி மத்திய அரசிடம் கணக்குக் காட்டப்படுவதற்காக மட்டும் தான் இந்த வகைப்படுத்தல் நடைபெறுவதாகவும், இதைப் பொருட்படுத்தாமல் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

உறுதிமொழியைத் தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும்.

உறுதிமொழியைத் தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும்.

தமிழக அரசின் இந்த உறுதிமொழியைத் தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். ஏனெனில், மத்திய அரசு அதன் உணவு மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது. அதேபோல், மாநிலங்களும் உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. தமிழக அரசின் நிதிநிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் பொது வினியோகத்திடம் அனைவருக்கும் தொடரும் என அரசு கூறுவது வெற்று சமாதானமாகவே இருக்கும்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி தமிழகத்தில் 50.55% மக்கள் மட்டுமே மானிய விலையில் உணவு தானியம் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறிவருகிறது. தமிழ்நாடு அரசு இப்போது அதன் சொந்த செலவில் மானியம் வழங்கி அனைவருக்கும் உணவு தானியங்களை வழங்கினாலும் இதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாகும்.

இதற்கேற்ற வகையில் தான் உணவுப் பாதுகாப்புத் திட்ட விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படியே தமிழகத்தில் இப்போது முன்னுரிமைப் பிரிவினரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

ஆண்டு வருமானமும், சொத்தும்

ஆண்டு வருமானமும், சொத்தும்

பொது வினியோகத் திட்டத்தின்படி பயனடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் மிகவும் கடுமையானவை... பொருத்தமற்றவை.

தகுதியுடைய பலருக்கு பொது வினியோக செய்யப்பட வாய்ப்பில்லை

தகுதியுடைய பலருக்கு பொது வினியோக செய்யப்பட வாய்ப்பில்லை

இந்த விதிகள் பின்பற்றப்பட்டால் தமிழகத்தில் தகுதியுடைய பலருக்கு பொது வினியோகத் திட்டத்தின் பயன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. பொதுவினியோகத்திட்டத்தின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. அதனால் தான் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழகம் ஒருபோதும் சேரக்கூடாது என்று தமிழக அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மின்சாரக் கட்டணம் உயர வாய்ப்பு

மின்சாரக் கட்டணம் உயர வாய்ப்பு

மின்வாரியத்தின் கடன்களை அடைப்பதற்கான உதய் திட்டத்தில் சேர தமிழக அரசு திட்டமிட்டபோது, அத்திட்டத்தில் இணைந்தால் அடிக்கடி மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதால் அதில் சேர வேண்டாம் என்று பா.ம.க. வலியுறுத்தியது. ஆனால், அதை மதிக்காமல் அத்திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று உறுதியளித்தது. ஆனால், உதய் திட்ட விதிகளைக் காட்டி வரும் மார்ச் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.

முன்னுரிமையற்றப் பிரிவினருக்குச் சலுகை நிறுத்தப்படுவது உறுதி

முன்னுரிமையற்றப் பிரிவினருக்குச் சலுகை நிறுத்தப்படுவது உறுதி

அதேபோல் தான் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்கள் அனைவருக்கும் தொடரும் என்று அரசு உறுதியளித்தாலும், அடுத்தச் சில ஆண்டுகளில் முன்னுரிமையற்றப் பிரிவினருக்கு இச்சலுகை நிறுத்தப்படுவது உறுதியாகும்.

திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

எனவே, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைவரும் முன்னுரிமைப் பிரிவினர் என அறிவித்து அவர்களுக்குப் பொதுவிநியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று டாக்டர் ராமாதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If your monthly income of Rs 8333 ration canceled Ramadoss Statement on ration shop closure?

If your monthly income of Rs 8333 ration canceled Ramadoss Statement on ration shop closure?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X