கல்வி கடன் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டியவை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த சில வருடங்களாக, கல்விக்கான செலவுகள் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் நீங்கள் ஒரு பெற்றோராக அல்லது மாணவராக இருந்தால், கல்விக்கடனை பற்றி நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது.

சில நேரங்களில் பல முனைகளில் இருந்து கடன் கிட்டும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கும் மற்றவைகளுக்கும் சிறிய வேறுபாடு மட்டுமே இருந்திருக்கலாம். ஆனால் அவை எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும். கல்விக் கடனில் அப்படி நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?

கல்விக்கடன் மீதான வட்டி விகிதம்

கல்விக்கடன் மீதான வட்டி விகிதம்

கல்விக்கடனை பொறுத்த வரைக்கும் 0.25 சதவீதம் அல்லது 25 அடிப்படை புள்ளிகள் என்ற சிறிய வேறுபாடு பெரிய தக்கத்தை ஏற்படுத்தும் அதனால் கடன் வாங்குவதற்கு முன்பு வட்டி விகிதங்களை ஆய்வு செய்து கொள்வது நல்லது.

தனியார் வங்கியா??  அரசு வங்கியா??

தனியார் வங்கியா?? அரசு வங்கியா??

பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். அதில் எப்போதுமே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறந்து விளங்குவதை நீங்கள் காணலாம். மேலும் தனியார் வங்கிகளில் வட்டி வகிதங்கள் அதிகமாக இருக்கும் எனவே கல்வி கடன் வாங்கு பொழுதில் தனியார் வங்கிகளை ஒதுக்கிடுவது நல்லது.

பெண் குழந்தைகள்

பெண் குழந்தைகள்

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் மேலும் தள்ளுபடி கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வட்டியில் 2 வகை உண்டு

வட்டியில் 2 வகை உண்டு

ஃபிக்சட் வட்டி மற்றும் ஃப்லோடிங் வட்டி போன்ற பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். முடிந்த வரை ஃப்லோடிங் வட்டி விகிதத்தை கொண்ட கடனை பெறுவது தான் நல்லது.

கல்விக்கடனின் அளவு

கல்விக்கடனின் அளவு

வங்கி மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் அளவு அமையும். உதாரணத்திற்கு, தொழிற்கல்வி அல்லாத படிப்புகளுக்கு, ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கடனை ஐ.டி.பி.ஐ. வங்கி வழங்குகிறது. அதே போல் சார்ட்டட் அக்கௌண்டன்சி படிப்பு என்றால் கல்விக்கடனாக ரூ. 3 லட்சத்தை வங்கி வழங்குகிறது.

கடனை திருப்பி செலுத்தும் காலம்

கடனை திருப்பி செலுத்தும் காலம்

இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பை பொருத்தும் வங்கியை பொருத்தும் மாறுபடும். உங்கள் கடனின் அளவை பொறுத்து அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை பல்வேறு வங்கிகள் தீர்மானிக்கிறது. உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடிடுங்கள்.

செயலாக்க மற்றும் இதர கட்டணங்கள்

செயலாக்க மற்றும் இதர கட்டணங்கள்

கல்விக்கடனின் மீது பல்வேறு பிற கட்டணங்களும் பொருந்தும். செயலாக்க கட்டணம், கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் படிப்பதற்கு கல்விக்கடன் பெரும் போது சில வங்கிகள் செயலாக்க கட்டணத்தை வசூலிப்பதில்லை. ஆனால் வெளிநாட்டில் படிப்பதற்காக கல்விக்கடன் பெரும் போது அவர்கள் செயலாக்க கட்டணத்தை வசூலிக்கலாம்.

இலவசங்களை பாருங்கள்

இலவசங்களை பாருங்கள்

இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெரும் போது, இவ்வகையான இலவசங்களை மறந்து விடாதீர்கள், இது வாழ்கையில் கண்டிப்பாக உதவும்.

முடிவுரை

முடிவுரை

ஏற்கனவே சொன்னதை போல், நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது வட்டி விகிதமே. பொதுத்துறை வங்கிகள் இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களிடம் இருந்து கடனுக்கான ஒப்புதலை பெறுவதற்கு நீங்கள் பல முறை அலைய வேண்டியிருக்கும். ஆனாலும் கூட முடிவில், உங்கள் அலைச்சல் நல்ல பலனை அளிக்கும்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things to Look for in an Education Loan in India

The cost of education has shot-up immensely in the last few years and you need to be an informed individual in case you are a parent or student seeking loans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X