வி.ஆர்.எஸ் பணத்தை இப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆச்சு... 20-30 வருஷம் ஒழச்சாச்சு.. இப்ப ரிடயர்மெண்டும் ஆகப்போறீங்க.. தற்போது பெரும்பாலானோர் தங்கள்பணியிடங்களிலிருந்து விருப்ப ஓய்வு அல்லது வி ஆர் எஸ் பெற விரும்புகின்றனர்.

ஆனால் இதில் நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது இந்த விருப்ப ஓய்வை நீங்கள் உங்கள் 40 அல்லது 50ஆவது வயதில் பெற திட்டமிட்டிருந்தால், நீங்கள் அதிலிருந்து கிடைக்கும் பணத்தைப் புத்திசாலித் தனமாக முதலீடுசெய்யவோ அல்லது சேமிக்கவோ வேண்டியுள்ளது.

வண்டி ஒட்ட வேண்டும்...

வண்டி ஒட்ட வேண்டும்...

வி.ஆர்.எஸ் பெற்ற பின் வருமானத்திற்கு வேறு எந்த வழியும் இல்லாத பட்சத்தில் வி.ஆர்.எஸ் பணத்தைக் கொண்டு நீங்கள்இன்னும் பல காலம் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கும்.

இத்தகைய நிலையில் வீஆர்எஸ் பணத்தைச் சரியான முறையில் முதலீடு செய்வதே உத்தமம்.

 

தவறான வழிகள்

தவறான வழிகள்

பணத்தை முதலீடு செய்யப் பலருக்கும் பல வழிகள் இருக்கும். அதைப் பற்றிப் பேசுவதை விட, பணத்தை எப்படி எல்லாம்முதலீடு செய்யக் கூடாது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது சிறந்தது.

சரி வாங்க உங்க வி ஆர் எஸ் பணத்தை என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை இப்போது பார்ப்போமா?

 

 

அதிக அபாயங்களை உடைய முதலீடுகள்

அதிக அபாயங்களை உடைய முதலீடுகள்

வி.ஆர்.எஸ் மூலம் கிடைக்கும் பணத்தைப் பங்குவர்த்தகத்தில் அதிகம் தொடர்புடைய மியூச்சுவல் பண்டுகள் போன்றமுதலீடுகளில் இடுவது முட்டாள்தனமான முடிவு.

ஏனெனில் அந்தப் பணம் உங்கள் ஒய்வு காலத்திற்கானது என்பதுடன் அதனை நீங்கள் இழக்கவும் கூடாது. பொதுவாகப்பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக்கள் அனைத்தும் அதிகளவிலான அப்பத்துகள் உடையவை.

 

ரியல் எஸ்டேட் விவகாரங்களை ஓரம் கட்டுங்கள்

ரியல் எஸ்டேட் விவகாரங்களை ஓரம் கட்டுங்கள்

உடனடியாக உங்கள் முதலீட்டின் மீதான வருவாய் திரும்பக் கிடைக்காது என்பதாலும், நீண்டகால முதலீட்டுக்கு உகந்ததுஎன்பதாலும் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

அவசர ஆபத்துக் காலங்களில் அதை விற்கவும் பணத்தை எடுக்கவும் முடியாது என்பது கூடுதலாக நீங்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.

 

ஆடம்பரத்தைக் கைவிடுங்கள்

ஆடம்பரத்தைக் கைவிடுங்கள்

நீங்கள் சற்று முன்னதாகவே ஒய்வு பெற்றுவிட்டீர்களானால், வேறு வருவாய்க்கான ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில்உங்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து உங்கள் பணத்தைப் பாதுகாப்பது அவசியம்.

எனவே அவ்வப்போது உங்கள் வாழ்க்கை முறையையும் செலவுகளையும் ஆராய்வது அவசியம்.

 

தொழில் தொடங்க வேண்டாம்

தொழில் தொடங்க வேண்டாம்

தொழிலில் முதலீடு செய்வது பல சிக்கல்களை உடையது. அதில் வருமானம் இல்லை என்பதற்காக நாம் இதைக்குறிப்பிடவில்லை.

ஆனால், தொழிலில் எப்போதும் ஒரு சிக்கலோ அல்லது முதலீட்டுக்கு ஆபத்தோ இருந்துகொண்டே இருக்கும் என்பதைநாம் உணரவேண்டும்.

 

 

சரி எங்கேதான் அந்தப் பணத்தை முதலீடு செய்வது?

சரி எங்கேதான் அந்தப் பணத்தை முதலீடு செய்வது?

மிகவும் பாதுகாப்பான முதலீட்டு வழிகளை நாடுங்கள். மிகவும் பாதுகாப்பான நிறுவன வைப்பு நிதிகள் வங்கிவாய்ப்புகளைக் காட்டிலும் அதிக வட்டி வருவாய் தரக்கூடியவை.

கேரளா அரசு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன வைப்புகள், மகிந்திரா பைனான்ஸ் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். இவை உங்களுக்கு 9 முதல் 10 சதவிகித வட்டியி ஈட்டித் தரும்.

 

 

பாதுகாப்பான முதலீடு அவசியம்

பாதுகாப்பான முதலீடு அவசியம்

இறுதியாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் ரிடையர்மென்ட் பணத்தை மிகவும் கவனமாகவும்பாதுகாப்பாகவும் முதலீடு செய்யவேண்டியது அவசியம்.

ஏனென்றால் காத்திருந்தோ அல்லது சற்றுச் சிக்கலில் ஈடுபட்டோ வருவாய் ஈட்ட நமக்குக் கால அவகாசம் இல்லை.

 

 

முடிவுரை

முடிவுரை

நீங்கள் இளைய வயதில் இருக்கும்போது ரிஸ்க் எடுப்பது சரியானதாக இருக்கலாம். ஆனால் வயதான பின்பு அதற்கு நீங்கசரிப்பட்டு வரமாட்டீர்கள்.

அதனால் விஆர்எஸ் பணத்தைப் பாத்திரமாகக் கடைசி மூச்சு வரைக்கும் உங்களுக்குப் பயன்படும் வகையில் முதலீடுசெய்யத் திட்டமிடுங்கள்.. என்ன சரியா?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Where To Invest Your VRS Money Without Too Many Risks?

Many individuals opt for a Voluntary Retirement Scheme (VRS) offered by companies. It's important to remember that if you have opted for this scheme when you are in the late 40s or early 50s, you should invest the money wisely as you may have to use that money for several years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X