உயில் எழுதப்போறீங்களா? அப்ப இதையெல்லாம் கவனமா பார்த்துக்கோங்க..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஓடி, வியர்வைச் சிந்தி சம்பாதித்த சொத்துக்களை உயில் எழுதி வைப்பது சுலபம்தான். ஆனால் இவ்வளவு நாள் நீங்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை உங்களது விருப்பம் போல் பிறருக்குச் சரியான வகையில் கொண்டு சேர்ப்பதைத் திட்டமிடுவது அவசியம் மட்டும் அல்லாமல் முக்கியமானவை கூட.

இதை நீங்கள் சரியாகச் செய்ய, சரியான வழிகாட்டுதல்கள் இதோ..

சாட்சிக் கையெழுத்து

சாட்சிக் கையெழுத்து

சாட்சிக் கையெழுத்துப்போடுபவர் பயனாளியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் உயில் எழுதும்போது அதில் பயனாளியாக உள்ள ஒருவரைச் சாட்சியாகச் சேர்க்காதீர்கள்.

அது நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. மேலும் அந்த உயிலில் சேர்க்கப்படாத சிலர் அதனை எதிர்ப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக அது அமையும்.

 

உயிலில் எழுதியிருப்பதை நடைமுறைப்படுத்த யாரை நியமிப்பது?

உயிலில் எழுதியிருப்பதை நடைமுறைப்படுத்த யாரை நியமிப்பது?

உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு நெருக்கமாக உள்ள ஒருவரை உயிலை நடைமுறைப்படுத்துபவராக நியமிக்கலாம். அவர் உங்கள் துணைவராகவோ அல்லது உங்கள் குழந்தையாகவோ உங்கள் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும்.

நடைமுறைப்படுத்துபவர் உயிலில் கூறப்பட்டுள்ளவாறு அதனை நிறைவேற்றுவார். அவரைச் செலவுகளையும் பொறுப்புகளையும் மேற்கொள்பவராகவும் உயிலில் நீங்கள் குறிப்பிடலாம்.

 

உயிலை எங்கு வைத்துப் பாதுகாப்பது?

உயிலை எங்கு வைத்துப் பாதுகாப்பது?

உங்கள் வங்கி லாக்கர் போன்ற நீங்கள் மட்டுமே திறக்கக்கூடிய இடங்களில் உயிலை வைப்பதைத் தவிருங்கள். இருவர் இணைந்து உபயோகிக்கும் லாக்கரையும் தவிருங்கள். இருவர் இணைந்து நடத்தும் லாக்கர்கள் நம்பத்தகுந்தவை அல்ல. பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கறிஞரிடம் உயிலைக் கொடுத்து அவர்களுடைய அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர்.

உயிலில் எப்போது எத்தனை முறை திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்?

உயிலில் எப்போது எத்தனை முறை திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்?

சூழ்நிலைகள் மாறக்கூடியவை என்பதால் உங்கள் உயிலையும் அவ்வப்போது மாற்ற வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக உங்கள் சொத்து உங்கள் மனைவிக்குப் போகவேண்டியிருந்து ஆனால் உங்கள் மனைவி உங்களுக்கு முன் இறந்துவிட்டால் அதில் திருத்தம் தேவையிருக்கும். எனவே இது போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் அவ்வப்போது உயிலை நீங்கள் திருத்த நேரிடும்.

நம்பகமானவர்

நம்பகமானவர்

உங்கள் உயில் எங்கு இருக்கிறது என்பதை உங்களுக்கு நம்பகமானவர்களிடம் தெரிவியுங்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் உயிலை வழக்கறிஞரிடம் கொடுத்து அவருக்கு நீங்கள் இறந்து போனது பற்றித் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் உங்களுடைய அனைத்துச் சொந்தங்களும் உயிலைத் தேட படாத பாடு படவேண்டியிருக்கும்.

நீங்கள் இறந்த பிறகு அதைத் தேட முடியாத ஒரு சூழ்நிலையை நீங்கள் நினைத்துப்பார்த்தால் அது ஒரு நரகமாக இருக்கும்.

உங்களுக்கு நம்பகமானவர்களிடம் உங்கள் உயில் எங்கே இருக்கிறந்து என்பதைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

 

உணர்வுப்பூர்வமான விஷயம்

உணர்வுப்பூர்வமான விஷயம்

உங்களுக்கு உணர்வுப்பூர்வமான விஷயம் ஏதாவது இருந்தால் அதனை உயிலில் குறிப்பிடுங்கள். அதற்கான ஒரு சிறப்பான ஒதுக்கீட்டையும் உயிலில் தெரிவிக்கலாம்.

நெடிய பாரம்பரியமும் கலை நயமும் நிறைந்த குடும்ப நகைகள் என்று எதாவது இருந்தால் அதனைக் குறிப்பிட்ட யாருக்காவது நீங்கள் கொடுக்க நினைத்தால் அதனை உயிலில் தனியாகக் குறிப்பிடலாம்.

 

உயிலில் கையெழுத்துப் போடா மறந்துடாதீங்க

உயிலில் கையெழுத்துப் போடா மறந்துடாதீங்க

ஒவ்வொரு முறையும் உயிலில் மாற்றங்கள் தேவையிருக்கும். அவ்வப்போது அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் கையெழுத்திட மறக்க நேரிடலாம். எனவே கடைசியாகச் செய்ததை நீங்கள் கையெழுத்திட மறந்து விடாதீர்கள்.

இந்த மேலே குறிப்பிட்ட விவரங்கள் மிகவும் உயில் எழுதும்போது முக்கியமானவை. இதை நீங்கள் உயில் எழுதும்போது நினைவு படுத்திக்கொள்ள உதவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Important Tips When Preparing A WILL In India

Creating a WILL may not be as hard as the time and efforts spent by individuals in generating assets and creating wealth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X