உங்கள் வரிப் பணத்தைக் குறைக்க எளிமையான ஏழு வழிகள்..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: வரிச் சட்டங்களில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முழுமையாக அறிந்துகொண்டாலே நாம் அதிகளவிலான வரிப் பணத்தைச் சேமிக்க முடியும்.

 

10இல் 8 பேர் வருமான வரியைக் குறைக்கத் தெரியாமல், வரி செலுத்த வேண்டிய திட்டத்தில் முதலீடு செய்து, மறைமுகமாக வரியைச் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உங்களது வரி வரிச்சுமையைக் குறைத்துக்கொள்ளப் பல உத்திகள் உண்டு என்பதை உணர்த்தவே இக்கட்டுரை. இதோ உங்களுக்காகச் சில சூப்பர் டிப்ஸ்..

பணவீக்க விகிதப் பட்டியலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பணவீக்க விகிதப் பட்டியலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பணவீக்க உயர்வு கடந்த சில வருடங்களாக முதலீட்டாளர்களுக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. ஆனால் சிலருக்கு இது பயனளிக்கவும் செய்கிறது. வரிச் சட்டங்கள் முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை பணவீக்கத்தைப் பொருத்து மறுமதிப்பீட்டைச் செய்ய அனுமதிக்கின்றன.

துணைவர் பணிபுரியவில்லை என்றால் அவர் பெயரில் முதலீடு செய்யுங்கள்

துணைவர் பணிபுரியவில்லை என்றால் அவர் பெயரில் முதலீடு செய்யுங்கள்

உங்கள் மனைவிக்குப் பணத்தைப் பரிசாக அளித்து அது முதலீடு செய்யப்பட்டால் வரி அதிகாரிகள் அதில் கிடைக்கும் வருமானத்தை உங்கள் வருமானத்தில் சேர்த்து விடுவார்கள். ஆனால் அதைப் பிபிஎ போன்றவற்றிலோ அல்லது வரியற்ற கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்தால் அதற்கு வரிப் பிரச்சினை இருக்காது

சிறு வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்
 

சிறு வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்

உங்கள் குழந்தையின் பெயரில் முதலீடு செய்திருந்தால் அந்த வருமானமும் உங்கள் கணக்கில் வரும். ஆனால் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு 1500 ரூபாய் வரை இதில் வரிவிலக்கு உண்டு. இந்தச் சலுகை அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்குப் பொருந்தும்.

வளர்ந்த குழந்தையின் உதவியைப் பெறுங்கள்

வளர்ந்த குழந்தையின் உதவியைப் பெறுங்கள்

18 வயது முடிந்த ஒருவர் தனி நபராகக் கருதப்படுவதுடன் அவர் வருமானம் தனியாகக் கருதப்படும். அவருடைய வருமானம் பெற்றோரின் வருமானத்துடன் இணைக்கப்பட மாட்டாது என்பதால் அவர்கள் பெயரில் முதலீடு செய்து வரியைச் சேமிக்கலாம்.

பெற்றோர் கூட இதில் உதவ முடியும்

பெற்றோர் கூட இதில் உதவ முடியும்

வரியைத் தவிர்க்க உங்கள் பெற்றோர் கூட உதவியாக இருக்கலாம். உங்கள் பெற்றோர் அதிக வருமானம் இல்லாதவராக இருந்தால் அதே சமயம் நீங்கள் 30 சதவிகித வரி அடுக்கில் வருபவரானால், உங்கள் முதலீடுகளை உங்கள் பெற்றோர் பெயரில் செய்வதன் மூலம் அதை உங்கள் வருமானத்துடன் இணைக்க வேண்டியதில்லை என்பதுடன் வரியை தவிர்க்கவும் முடியும்.

மறந்துவிட்ட யூலிப் முதலீட்டு

மறந்துவிட்ட யூலிப் முதலீட்டு

நம்மில் பலர் நிதித் திட்டத்தில் கருத்தில் எடுத்துக்கொண்ட யூலிப் திட்டங்களுக்கு ப்ரிமியம் தொகையைச் செலுத்துவதை நிறுத்தியிருப்போம். இந்தக் கூட்டத்தில் நீங்களும் ஒருவரானால் வரியற்ற வருமானத்திற்கு யூலிப் முதலீடுகளை முயன்று பார்க்கலாம். நீங்கள் நிலுவையில் வைத்திருக்கும் பாலிசி ப்ரிமியம் தொகைகளை ஒரே தவணையில் செலுத்தி வரியைத் தவிர்த்து வருமானத்தைப் பெற்றிடுங்கள்.

ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தை உருவாக்குங்கள்

ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தை உருவாக்குங்கள்

ஒரு கூட்டுக் குடும்பத்தை உருவாக்குவதன் மூலம் அடிப்படை வரிச் சலுகையை இருமடங்காகப் பெறமுடியும். வருமான வரித் துறை கூட்டுக் குடும்பத்தை ஒரு தனி அமைப்பாகக் கருதுகிறது. மற்ற அனைத்து வரிச்சலுகைகளும் இதற்கும் பொருந்தும்.

வருமான வரி

வருமான வரி

வருமான வரி குறித்த முக்கிய செய்திகளை முழுமையாக தெரிந்துக்கொள்ள ஒரு கிளிக் செய்யுங்கள் போதும்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X