ஓய்வுபெற்ற முதலீட்டாளர்களுக்கான வரியில்லாத முதலீட்டுச் சேமிப்பு திட்டங்கள்..!

By Ashok
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஓய்வு பெற்ற நபர்களுக்குத் தங்களின் பணி ஓய்வின் போது மிகப்பெரிய தொகை கிடைக்கக்கூடும். இத்தகைய தொகைக்கு அதிகமாக வரி வராதபடி அவர்கள் அதனை முதலீடு செய்ய வேண்டும். சொல்லப்போனால், மிகச்சிறந்த முறையில் வரி தொகையை அவர்கள் குறைக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற முதலீட்டாளர்களுக்கான வரியில்லாத சில முதலீட்டுச் சேமிப்புத் திட்டங்கள் பின்வருமாறு:

ஓய்வுபெற்ற முதலீட்டாளர்களுக்கான வரியில்லாத முதலீட்டுச் சேமிப்பு திட்டங்கள்..!

வரியில்லாத கடன் பத்திரங்கள்:

மூத்த குடிமகன் திட்டம் போலவே, வரியில்லாத கடன் பத்திரங்களும் சிறந்த வட்டி விகிதங்களைப் பெரும்பாலும் அளிப்பதில்லை. இருப்பினும், அவர் வரியில்லாத வருமானமாக உள்ளது. இந்த முதலீட்டில் கிடைக்கும் வட்டிக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், நிறுவன வைப்புத் தொகை போல் இங்கே சீரான இடைவேளையில் வட்டி வருவதற்குப் பதிலாக வருடாந்திர அடிப்படையில் தான் வட்டி கிடைக்கும். இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

வரியில்லாத கடன் பத்திரங்களுக்குக் கிட்டத்தட்ட 7.5% வட்டி கிடைக்கும். இது அதிக வருவாயை அளிப்பதில்லை. உங்களுக்கு வருமான வரி அதிகமாக விதிக்கப்படும் என்ற நிலை இருந்தால் மட்டுமே இந்த முதலீட்டைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு வரி எதுவும் வரப்போவதில்லை என்றால், இந்த முதலீட்டுத் திட்டத்தை நாடாதீர்கள். வருடாந்திர வட்டியாக 9.3% விகிதம் அளிக்கும் சிறந்த மூத்த குடிமகன் திட்டங்கள் எல்லாம் உள்ளது.

என்.எம்.டி.சி.-யின் பங்குகள்

ஓய்வு பெற்ற நபர்கள் என்.எம்.டி.சி.-யின் பங்குகளை வாங்குவதும் கூட ஒரு சிறந்த தேர்வாகும். அதற்குக் காரணம், ஒரு பங்கிற்கு டிவிடெண்ட்டாக ரூ.8/- ஐ நிறுவனம் வழங்குகிறது. இது கிட்டத்தட்ட 10% மேலான வருவாயாகும். வருடத்திற்கு இரண்டு முறை டிவிடெண்ட் அளிக்கிறது என்.எம்.டி.சி. முதலீட்டாளர்கள் கையில் இருக்கும் டிவிடெண்ட் தொகைக்கு வரி கிடையாது.

என்.எம்.டி.சி. பங்குகளில் முதலீடு செய்வதால் ஏற்படக்கூடிய ஒரே நஷ்டம் என்னவென்றால், பங்குகள் வாங்கும் போது இடர்பாடு என்ற கூறு ஒன்று அடங்கியுள்ளது. இருப்பினும், வளமான ரொக்கத்தைக் கொண்டுள்ள போட்டியில்லாத நிறுவனம் இது.

மியுச்சுவல் ஃபண்ட்களில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட்

மியுச்சுவல் ஃபண்ட்களில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கும் வரி கிடையாது. இங்கே நீங்கள் டிவிடெண்ட் தொகையைச் சீராக அளித்து வரும் பங்குகள் மற்றும் கடன் பத்திர ஃபண்ட்கள், என இரண்டையும் தேர்ந்தெடுக்கலாம்.

இருப்பினும் ஓய்வு பெற்ற நபர் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும். காரணம், ஈக்விட்டி, மியுச்சுவல் ஃபண்ட்டில் அதிக ரிஸ்க் அடங்கியுள்ளது. அதுவும் ஓய்வு பெற்றவர் என்றால் இந்தப் பண்ட் சிறந்த தேர்வாக இருக்காது.

முடிவுரை:

வருமான வரி மற்றும் இடர்பாட்டின் அளவை ஒருவர் மிகக் கவனமாக ஆராய வேண்டும். நீங்கள் அதிகமாக வரிக் கட்டும் பாளத்தில் இருந்தால், வட்டியில்லாத கடன் பத்திரங்களை வாங்கவும். நீங்கள் குறைவான வரிக் கட்டும் பாளத்தில் இருந்தால், பாதுகாப்பான மூத்த குடிமகன் சேமிப்புத் திட்டம் அல்லது நிறுவன வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்யவும். கே.டி.டி.எப்.சி., மகிந்திரா ஃபைனான்ஸ் அல்லது எச்.டி.எப்.சி. ஆகியவை இதில் அடக்கம். அஞ்சலக மாதாந்திர வருமான திட்டத்தையும் கூட நீங்கள் அணுகலாம்.

நீங்கள் இடர்பாடு எடுக்கத் தயாராக இருந்தால், ஈக்விட்டி மியுச்சுவல் பண்ட்களை நோக்கிச் செல்லலாம். ஆனால் அதற்கு நல்ல நிறுவனம் மற்றும் டிவிடெண்ட் தொகையைச் சீராகக் கொடுக்கும் நிறுவனமாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Are The Tax Free Investment Saving Schemes For Retired Investors?

Retired individuals tend to receive a lump sum on retirement and then need to park money in such away that their tax liabilities is minimal. In fact, these individuals may need to reduce their tax liability in the most efficient manner.
Story first published: Sunday, January 17, 2016, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X