ஆதார் எண்ணை எங்கெல்லாம் இணைக்க வேண்டும்..? எதற்கெல்லாம் இணைக்க வேண்டும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் எண் ஒரு 12 இலக்க அடையாள எண், இதனைப் பயன்படுத்தி நீங்கள் பல நன்மைகளைப் பெறும் வகையில் மத்திய அரசு இதனை வடிவமைத்துள்ளது.

 

ஆதார் அட்டை இந்தியாவில் முழுவதும் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து அதையும் நமது அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம்.

ஆதார் எண்ணை வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இது பல பரிவர்த்தனைகளுக்கு பயன்படுகின்றது. குறிப்பாக சமையல் சிலிண்டர்-க்கான மானியம், போல பல இடங்களில் இது மக்களுக்கு நன்மை அளிக்கிறது.

ஆதார் எண்ணை எங்கெல்லாம் இணைக்க வேண்டும்..? எதற்கெல்லாம் இணைக்க வேண்டும்..? இதன் மூலம் எப்படி எல்லாம் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதை பற்றிய பார்க்கப்போகிறோம்.

முகவரி மற்றும் அடையாள சான்று

முகவரி மற்றும் அடையாள சான்று

ஆதார் எண்ணை என்னும் ஒன்றை வைத்திருந்தாலே நாம் பல இடங்களில் அடையாளம் சான்று, முகவரி சான்றுகள், பயோ மெட்ரிக் பதிவுகளுக்கான சான்று என பலவற்றை கொண்டும் செல்வதை தவிர்க முடியும். இது ஒரு எளிமையான வழி.

e-KYC படிவும்

e-KYC படிவும்

பல நிதி நிறுவனங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ள e-KYC(உங்கள் வாடிக்கையாளர்களைத் தெரிந்து கொள்தல்) என்ற சேவை தங்கள் குறித்த தகவல்களை சரிபார்க்க பயன்படுத்துகின்றன.

எனவே நாம் பின்வரும் சேவைகளில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.

 

பாஸ்போர்ட்
 

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைப் படிவம்-1 உடன் இணைத்துச் சமர்ப்பித்தால் காவல்துறை அறிக்கை பெறாமலேயே பாஸ்போர்ட் பெற இயலும்.

வாக்காளர் அட்டை

வாக்காளர் அட்டை

மார்ச் 2015 முதல் வாக்காளர் ஆட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர்களை குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எல்பிஜி

எல்பிஜி

எல்பிஜி காஸ் மானியம் மற்றும் பொது விநியோக முறைகள் என அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் உங்கள் பணம் அதிகளவில் சேமிக்கப்படுகிறது.

வருமான வரி

வருமான வரி

பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் தனிநபர்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

உங்கள் ஆதார் எண்ணை வருமான வரித்துறை இணையதள கணக்கில் இணைத்து இருந்தால் உங்கள் வருமான வரி தாக்கல் இறுதி படிவமான ITR-V-ஐ வருமான வரிதுறையினருக்கு அனுப்பத் தேவையில்லை. இதன் மூலம் துரிதமாக வரி தாக்கல் செய்து விரைவாக பணத்தை திரும்பப்பெற முடியும்.

 

ஓய்வூதியம் பெறுவோர்

ஓய்வூதியம் பெறுவோர்

ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வங்கி கணக்கு உள்ள கிளையில் விருப்பமான வழங்குநர் அமைப்பு, ஆதார் அட்டை மற்றும் வங்கி பாஸ் புத்தத்துடன் சென்று அணுகுவதன் மூலம் சுலபமாக ஆதார் எண்ணை அவர்களுடைய கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

‘ஜீவன் ப்ரமான்' ஆதார் சார்ந்த டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் அமைப்பில் உங்கள் வாழ்க்கை சான்றைதழை சமர்ப்பிப்பதன் வாயிலாக ஒவ்வொரு வருடமும் வங்கிக்குச் செல்வதை தவிர்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீடு நிறுவனங்கள்

மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீடு நிறுவனங்கள்

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது இணையம் வாயிலாகக் காப்பீடுகள் வாங்க ஐஆர்டிஏ, இந்திய பத்திர பரிவர்த்தனை வாரியம் இரண்டும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அட்டையை அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றாக ஏற்க முடிவு செய்துள்ளன.

மாத ஓய்வூதியம்

மாத ஓய்வூதியம்

மாத ஓய்வூதியம் பெறுவோர் மொசடியாக பணம் எடுத்தலைத் தவிர்க்க தங்கள் மாத ஓய்வூதிய கணக்கில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி

வருங்கால வைப்பு நிதி

எளிதான வருங்கால வைப்பு நிதி திரும்ப பெறுதலை உங்கள் ஓய்வூதிய கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதன் வாயிலாக வேகமாக வருங்கால வைப்பு நிதியைத் திரும்ப பெற இயலும்.

பெரும்பாலான நிறுவனங்களில் தற்போது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்துகின்றன.

 

டிஜிட்டல் லாக்கர்

டிஜிட்டல் லாக்கர்

டிஜிட்டல் லாக்கரில் உங்கள் எல்லா மின்னணு ஆவணங்களையும் வைக்கக் கூடிய ஒரு சேமிப்பு இடமாகும், இதிலும் நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இ-அடையாளம் வசதியினால் தனிநபர்கள் தங்கள் மின்னணு ஆவணங்களை பதிவேற்றலாம் மற்றும் டிஜிட்டல் முறையில் கைய்யொப்பம் இடலாம்.

 

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள் தொடங்கும் போது அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றாக பயன்படும். இதன் மூலம் பல ஆவணங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்கலாம்.

சொகுசான வீடு

சொகுசான வீடு

சொகுசான வாழ்க்கைக்கு சொகுசான வீடு.. இந்தியாவில் இப்போ இதுதான் டிரெண்ட்..!சொகுசான வாழ்க்கைக்கு சொகுசான வீடு.. இந்தியாவில் இப்போ இதுதான் டிரெண்ட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the Benefits You Lose If You Do Not Link Your Aadhaar Number?

What are the Benefits You Lose If You Do Not Link Your Aadhaar Number?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X