இணையதள வங்கி சேவையில் ஏற்படும் மோசடியில் இருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இணையதளத்தின் பயன்பாடு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு பொருளை வாங்குவது விற்பது, பண பரிமாற்றம் செய்வது என அனைத்தும் உட்கார்ந்த இடத்தில் செய்வது இணைய உலகில் எளிமையான ஒன்று.

இப்படிப்பட்ட இணைய உலகில் நாம் முதலீடுகள் மற்றும் இணையதள பண வர்த்தனையை செய்யும் போது எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இணைய மோசடிகளில் சிக்கிகொள்ளாமல் பண பரிமாற்றம் செய்வது அவசியம். எனவே நாம் இங்கு இது போன்ற இணையதள மோசடிகளை எப்படித் தவிர்ப்பது என்று இங்குப் பார்ப்போம்.

சைபர் கேப்

சைபர் கேப்

ஒருபோதும் உங்கள் இணையதள வங்கி கணக்கை சைபர் கேப் மையங்களில் பயன்படுத்த வேண்டாம். சைபர் கேப் மையங்கள் மற்றும் இணையதளம் பகிரப்பட்ட கணினி உள்ள இடங்களில் உளவு மென்பொருள் பயன்படுத்தி உங்கள் கணினியை கண்காணிக்க இயலும்.

எனவே உங்கள் இணையதள வங்கி கணக்கை வீட்டில் உள்ள கணினியில் மட்டும் பயன்படுத்துவது நல்லது.

 

 இயங்கு தளத்தை புதுப்பித்தல்

இயங்கு தளத்தை புதுப்பித்தல்

உங்கள் இயங்கு தளம்(Os)-ஐ புதுப்பிப்பதன் மூலம் சில பாதுகாப்பு பேட்ச்களைப் பெற இயலும், இதன் வாயிலாக இணையதள மோசடிகளைத் தவிர்க்க இயலும்.

அதே போன்று உங்கள் கணினியில் உள்ள ஆண்டி வைரஸ் மென்பொருளையும் அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளவும். இணையதள வங்கி சேவையை பயன்படுத்தும் போது கணினியில் ஆண்டி வைரஸ் வைத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

 

உங்கள் கடவுச்சொல்லைப் புத்திசாலித்தனமாக தேர்வுசெய்க

உங்கள் கடவுச்சொல்லைப் புத்திசாலித்தனமாக தேர்வுசெய்க

இணையதள வங்கி கணக்குகளின் கடவுச்சொல்லைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்கவும். எழுத்து, எண் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் மூன்றும் கடவுச்சொல்லில் இருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்குப் பிடித்தவர்களின் பெயர், பிறந்த தினம், மொபைல் எண் போன்றவற்றை கடவுச்சொல்லாக அளிப்பது எளிதாக
யூகிக்கக்கூடியதாக இருக்கும். எனவே இவற்றை உங்கள் கடவுச்சொல்லாக அளிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

 

மோசடி மின்னஞ்சல்களிடம் இருந்து ஜாக்கிரதை

மோசடி மின்னஞ்சல்களிடம் இருந்து ஜாக்கிரதை

வங்கி கணக்கின் விவரங்களைப் புதுப்பிப்பது போன்ற ஏதேனும் மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்கள் வங்கியில் இருந்து வராத எந்த ஒரு மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம்.

இணையதள முகவரியை உலாவியில் நேரடியாகக் கைமுறையாக உள்ளிட்டுப் பரிவர்த்தனைகளை செய்க.

அசல் இணையதளங்களைப் போன்றே பல மோசடி இணையதளங்கள் வேறு முகவரிகளைக் கொண்டு இயங்கு வாய்ப்பு இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

பாதுகாப்பு(https)

பாதுகாப்பு(https)

செக்யூர் சாக்கெட் லேயர்(SSL) https பாதுகாப்பு உள்ள இணைப்பில் சென்று உங்கள் பணப் பரிவர்த்தனை மற்றும் வங்கி கணக்கை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்க.

http என்றால் அதில் உங்கள் பயனர் குறியீடும் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டுப் பரிவத்தனை செய்வதைத் தவிர்க்கவும்.

 

பரிவர்த்தனையைத் தொடர்ந்து சரிபார்க்கவும்

பரிவர்த்தனையைத் தொடர்ந்து சரிபார்க்கவும்

உங்கள் இணையதள பரிவர்த்தனையை தொடர்ந்து அவ்வப்போது சரிபார்க்கவும்.

உங்கள் கிரெடிட் கார்டு, வங்கி கணக்கில் இருந்து உங்களுக்குத் தெரியாத பரிவத்தனை செய்யப்பட்டு இருந்தால் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. காலதாமதம் ஆகும் போது அதற்கான பணத்தை இழக்க நேரிடும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Steps to keep in mind to avoid online fraud

Steps to keep in mind to avoid online fraud
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X