2017-ம் ஆண்டு வீட்டுக் கடன் வாங்குவதற்கான சிறந்த வங்கிகள்..!

2017-ம் ஆண்டு எந்த வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறைந்த வட்டி, செயலாக்கக் கட்டணங்களுடன் கடன் அளிக்கின்றன என்று இங்குப் பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் கனவு இல்லதைக் கட்ட வேண்டுமா, எந்த வங்கியில் கடன் வாங்குவது என்ற குழப்பமா அல்லது எந்த மாதிரியான கடன் பெறுவது என்பதில் சந்தேகமா அல்லது எந்த மாதிரியான திட்டங்களில் கடன் பெறுவது என்று தெரியவில்லையா?

 

2017-ம் ஆண்டு எந்த வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறைந்த வட்டி, செயலாக்கக் கட்டணங்களுடன் கடன் அளிக்கின்றன என்று இங்குப் பார்ப்போம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

எஸ்பிஐ வங்கி 9.10 சதவீதம் முதல் 9.30 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடன் அளிக்கின்றன. அதிலும் செயலாக்க கட்டணங்கள் ஏதும் இல்லாமல் கடன் பெற இயலும்.

உங்களுடைய சொத்தின் மதிப்பு 30 லட்சமாக இருப்பின் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும். இதுவே 75 லட்சமாக இருந்தால் 80 சதவீதமும், 75 லட்சத்திற்கும் மேலாக இருந்தால் 75 சதவீதம் வரை கடன் பெற இயலும்.

 

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கியில் கடன் பெறுகிறீர்கள் என்றால் 1.25 சதவீத செயலாக்கக் கட்டணத்தில் 9.10 சதவீதம் முதல் 9.10 சதவீத வரையிலான வட்டி விகிதத்தில் கடன் பெற இயலும்.

எச்டிஎப்சி வங்கியில் நல்ல சேவையை பெற இயலும் ஆனால் செயலாக்க கட்டண, செலுத்தியாக வேண்டும்.

 

எல்ஐசி ஹவுசிங்
 

எல்ஐசி ஹவுசிங்

எல்ஐசி ஹவுசிங்கில் கடன் பெற விரும்புவோர் 9.15 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை வட்டி விகிதங்களில் கடன் பெறலாம். எஸ்பிஐ வங்கியைப் போல இந்த இதிலும் செயலாக்க கட்டணம் ஏதும் இல்லை.

இங்கு நீங்கள் கடன் பெறும் போது உங்கள் சொத்து மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் பெறலாம்.

 

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

செயலாக்கக் கட்டணம் போன்றவை இந்த வங்கியில் செலுத்த வேண்டும் என்பதால் குறைந்த கட்டணத்தில் கடன் கிடைக்கவில்லை என்றாலும் 9.10 முதல் 9.45 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். செயலாக்கக் கட்டணம் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை செலுத்த வேண்டி வரும். சொத்து மதிப்பில் இருந்து 90 சதவீதம் வரை கடனாக பெற இயலும்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் செயலாக்க கட்டணம் செலுத்த தேவை இல்லை. கடன் 9.30 சதவீதம் முதல் 9.50 சதவீதத்திற்குள் இருக்கும்.

எஸ்பிஐ வங்கியைப் போன்றே உங்களுடைய சொத்தின் மதிப்பு 30 லட்சமாக இருப்பின் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும். இதுவே 75 லட்சமாக இருந்தால் 80 சதவீதமும், 75 லட்சத்திற்கும் மேலாக இருந்தால் 75 சதவீதம் வரை கடன் பெற இயலும்.

 

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

ஒருவர் கடன் வாங்கும் போது வட்டி விகிதம் பெரிதும் பாதிக்கும். எனவே குறைவான வட்டி உள்ள வங்கிகளில் கடன் வாங்குவது நல்லது.

பொதுவாக நிரந்தர வட்டி விகிதம் மாறும் வட்டி விகிதம் என்ற இரண்டு முறையில் கடன் பெற இயலும். நிரந்தர வட்டி விகிதம் என்றால் தவனை காலம் முழுவதும் ஒரே சீரான வட்டியைச் செலுத்த வேண்டி வரும். இதுவே மாறும் வட்டி விகிதம் என்றால் ரெப்போ விகிதத்திற்கு ஏற்றவாறு வங்கிகள் வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும் போது உங்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது.

 

செயலாக்கக் கட்டணம்

செயலாக்கக் கட்டணம்

ஒருவர் வாங்கும் கடனை செயல்படுத்துவதற்காகப் பெறும் கட்டணம் செயலாக்க கட்டணம். இது கடன் வாங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைப் பொருத்து மாறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Banks To Take Home Loans In 2017

Confused as to which banks to get the best quote or which kind of loan you must opt for home loan, we give you a list of best home loan providers you could approach in India in 2017 for your home loan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X