என்ஆர்ஐகளே.. உங்களிடம் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்..!

புதிய காலக்கெடு நீட்டிப்பின் மூலம் 2017 மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே வெளிநாட்டு வாழ் மற்றும் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்ற காலக்கெடு நீட்டிக்கப்பட்டு 2017

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் பழைய செல்லா ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்பிஐ சனிக்கிழமை புதிய காலக்கெடு நீட்டிப்பைச் செய்துள்ளது.

இந்த புதிய காலக்கெடு நீட்டிப்பின் மூலம் 2017 மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே வெளிநாட்டு வாழ் மற்றும் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்ற காலக்கெடு நீட்டிக்கப்பட்டு 2017 ஜூன் 2017 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.

அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை

அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை

வெளிநாட்டு வாழ் மற்றும் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த உச்ச வரம்பும் இல்லை. ஆனால் வெளிநாட்டுப் பயணங்களின் போது 25,000 ரூபாய் வரை இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல விமான பயணிகளை அனுமதிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது வெளிநாட்டில் இருந்ததற்கான ஆவணம் மற்றும் அடையாள சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மூன்றாம் நபருக்கு அனுமதி இல்லை

மூன்றாம் நபருக்கு அனுமதி இல்லை

மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மூன்றாம் நபரைப் பயன்படுத்தி வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்ய இயலாது.

எல்லா வங்கிகளிலும் மாற்ற முடியுமா?

எல்லா வங்கிகளிலும் மாற்ற முடியுமா?

இல்லை, வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்கள் 2017 ஜூன் 30-ம் தேதிக்குள் ரூபாய் நோட்டுகளை மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, நாக்பூர் நகரங்களில் உள்ள ஆர்பிஐ அலுவலகங்களில் அளித்து மாற்றிக்கொள்ளலாம்.

எந்த நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் மாற்ற முடியாது?

எந்த நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் மாற்ற முடியாது?

நேப்பால், பூட்டான், பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் உள்ள இந்தியர்களால் இந்தக் காலக்கெடு நீட்டிப்பைப் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது.

மேலே கூறியுள்ள விதிகளை ஏற்க முடியாது என்றால் என்ன செய்ய வேண்டும்?

மேலே கூறியுள்ள விதிகளை ஏற்க முடியாது என்றால் என்ன செய்ய வேண்டும்?

மேலே கூறியுள்ள விதிகளை யாரேனும் ஏற்க மறுத்தால் 14 நாட்களுக்குள் ஆர்பிஐ வங்கியின் மத்திய குழுவிடம் முறையீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Risks in NRIs Can Exchange Defunct Notes Till June 30, Others Till March 31: RBI

NRIs Can Exchange Defunct Notes Till June 30, Others Till March 31: RBI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X