மேனேஜர் உடன் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்ற 5 வழிகள்..!

மேனேஜர் உடன் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்ற 5 வழிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு மேலாளருக்கும் பணியாளருக்குமான உறவு ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் வகையில் இருந்தால் இந்த உறவு மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமின்றி உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் வகையில் இருக்கும். ஒரு மேலாளரின் பணி நடைமுறையைக் கண்டுபிடித்து அவர் வழியே நடப்பதும், இருவரும் அடிக்கடி பணி நிமித்தம் உரையாடி வந்தாலே போதும், ஒரு மேலாளரின் குட்புக்கில் அந்தப் பணியாளரின் பெயர் இடம்பெற்று விடும்.

 

மேலும் அந்தப் பணியாளர் மீது மேலாளருக்கு ஒரு தனி மதிப்பும் தானாக வரத்தொடங்கிவிடும். மேலாளருக்கும் பணியாளருக்குமான உறவு மேம்பட ஒருவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.

மேலாளரின் பணி நடைமுறையைக் கடைப்பிடியுங்கள்:

மேலாளரின் பணி நடைமுறையைக் கடைப்பிடியுங்கள்:

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் மேலாளரின் செயல்பாட்டை நோக்கியே செல்ல வேண்டும். உங்கள் மேலாளர் உங்களை இமெயில் மூலம் தொடர்பு கொண்டு ஒரு சிறிய விஷயத்தையோ அல்லது முக்கியமான ஒன்றையோ கேட்டால் உடனடியாக அவருக்கு அந்த விபரங்களைத் தெரிவிப்பதன் மூலம் நற்பெயரைப் பெறலாம்.

மேலும் மேலாளரிடம் வழக்கமான அதே நேரத்தில் தீர்க்கமான உரையாடல்களை அடிக்கடி வைத்துக் கொள்ளுங்கள் என்று பங்கஜ் கண்ணா என்பவர் தெரிவித்துள்ளார்.

 

சகாக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள்

சகாக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள்

உங்கள் சக ஊழியர்களின் நன்மதிப்பை நீங்கள் பெற தவறினால் உங்கள் மேலாளர் உங்களுடைய திறமையை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கடினமாகவே இருக்கும்.

உங்களுடைய திட்டங்களில் உங்களுடைய சக பணியாளர்களையும் இணைத்து அந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால் உங்களுடைய முழுத்திறமை வெளிப்படுத்துவதோடு, உங்கள் திறமையை மேலாளர் புரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும்

 

சாக்கு-போக்கு வேண்டாம்:
 

சாக்கு-போக்கு வேண்டாம்:

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வேலை முடியவில்லை என்றாலோ அல்லது தவறாகச் செய்துவிட்டாலோ உடனே ஏதாவது சாக்கு-போக்கு கூறி தப்பிக்க வேண்டாம், மீண்டும் அதே வேலையைச் சரியாகச் செய்து விடுவதாக வாக்குக் கொடுங்கள்.

அதன்படி சரியாகச் செய்து முடித்தால், உங்களை மேலாளர் மதிப்புக்குரியவராகக் கருதுவார். இந்தப் பழக்கம் உங்களது முதிர்ச்சியையும் தோல்வியைச் சரிசெய்து விடுவார் என்ற செயல் திறனையும் வெளிப்படுத்தும் என்று கூறுகிறார் சந்தீப் கோஹ்லி

 

எப்போதும் துடிப்பாக இருங்கள்

எப்போதும் துடிப்பாக இருங்கள்

முன்னேற வேண்டும் மற்றும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற கொள்கை உடையவர் ஒவ்வொருவரிடமும் துடிப்பான செயல்திறன் இருக்கும். நமது இலக்குகளை மாற்றிக்கொள்ள இது ஒரு நல்ல ஐடியா ஆகும்.

உங்களுடைய குழுவின் வெற்றி என்பது செல்ல வேண்டிய இலக்கை நிர்ணயிப்பது மற்றும் அதை நோக்கிச் செல்வதிலும்தான் உள்ளது. இந்த நடைமுறையை உங்கள் மேலாளர் உங்களிடம் கவனிக்கும் திறனில்தான் உங்களது முன்னேற்றம் இருக்கும் என்று கூறுகிறார் பிரசாந்த் பார்மர் என்பவர்.

 

உங்கள் மேலாளரின் வெற்றிக்கு உதவுங்கள்:

உங்கள் மேலாளரின் வெற்றிக்கு உதவுங்கள்:

Key Result Areas என்று கூறப்படும் உங்களுடைய KRA உங்கள் மேலாளரைச் சென்றடைய வேண்டும் என்பதும், அந்த KRA உங்கள் மேலாளரின் KRAஐ ஒத்து இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம்.

இது உங்கள் மேலாளரின் வெற்றிக்கு உதவும் வகையில் இருப்பதால் அதில் உங்கள் வெற்றியும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் மேலாளரின் பாராட்டுக்களைப் பெறலாம்' என்று கூறுகின்றார் கோஹ்லி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five ways to earn your manager's respect

Five ways to earn your manager's respect
Story first published: Thursday, April 6, 2017, 16:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X