பெங்களூரில் இந்த இடங்கள் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி..!

பெங்களூரில் இந்த இடங்கள் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரில் இந்த இடங்களில் சொத்து வாங்குவதை மறந்துவிடுங்கள். ஆம், இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் நாளுக்கு நாள் வீடுகளின் விலை உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது. அப்படிப் பெங்களூரில் எந்த இடங்களில் எல்லாம் காஸ்டிலி என்று இங்குப் பார்ப்போம்.

 

பூர்வா கிராண்டி, லாவெல்லி சாலை

பூர்வா கிராண்டி, லாவெல்லி சாலை

பூர்வா கிராண்டி லாவெல்லி சாலையில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஆகும். இது சமீபத்தில் முத்திரைகள் மற்றும் பதிவிட்டு துறையின் (SR) மதிப்பீட்டுப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் அண்டை வீட்டாரான விட்டல் மல்லையா சாலையில் உள்ள யூபி டவர்ஸை தோற்கடிக்கும் வண்ணம் விலையுயர்ந்ததாக ஆகியுள்ளது.

அரசாங்க பதிவுகளில் இந்தப் புதிய வரவு ஒரு சதுர அடி ரூ. 22,946 ஆகவும் யூபி டவர்ஸ் சதுர அடி ரூ. 22,388 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

லாவெல்லி சாலையிலுள்ள பூர்வா கிராண்டி 3 மற்றும் 4 படுக்கை அறை, ஹால், சமையறைக் கொண்ட குடியிருப்பு வளாகத்தில் இந்தப் பகுதியின் ஒரு பிரிவு 3000 சதுர அடி முதல் 4350 சதுர அடி வரை தற்சமயம் ரூ. 13 கோடிகள் வரையிலும் பணப் பரிமாற்றம் நடக்கிறது.

 

விம்பிள்டன் கோர்ட், ரேஸ் கோர்ஸ் சாலை

விம்பிள்டன் கோர்ட், ரேஸ் கோர்ஸ் சாலை

கடந்த வருடம் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள விம்பிள்டன் கோர்ட், யூபி சிட்டியை விட முத்திரைகள் மற்றும் பதிவிட்டுத் துறையினரால் அதிக விலை மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தடுத்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பூர்வா கிராண்டி துணைப்பதிவாளரின் பதிப்பேட்டில் சதுர அடிக்கு ரூ. 22,946 உடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

யூபி சிட்டி பெங்களூர்
 

யூபி சிட்டி பெங்களூர்

முத்திரை மற்றும் பதிவிட்டுத் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2017 - 18 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு வழிகாட்டி அறிவிப்பில் (ஏப்ரல் 1 முதற்கொண்டு செயலாக்கத்தில் உள்ளது) சொத்து விலைகளில் மிகப்பெரிய புதிய திருத்தங்கள் எதுவுமில்லை.

ரியல் எஸ்டேட் துறையில் வீழ்ச்சி பண மதிப்பிறக்கத்தால் மேலும் மோசமாகியுள்ளது. எனவே அரசாங்கம் இந்த வருடத்திற்கான சொத்து விலை மதிப்பில் புதிய திருத்தங்களைத் தள்ளி வைத்துள்ளது.

அங்குமிங்குமாக நடந்த சில மாற்றங்களால் சில புதிய சொத்துக்கள் மதிப்பிடப்பட்டு அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

ராஜ்பவன் சாலை

ராஜ்பவன் சாலை

ராஜ்பவன் சாலை ஒரு சதுர அடி ரூ. 25,000 க்கு மனைகளைக் கொண்டு விலையுயர்ந்த பகுதியாகத் தொடர்கிறது. அதே சமயம் சந்திரிக்கா பேல்குன்றி வட்டாரத்தில் உள்ள கன்னிங்கம் சாலைப் பல வருடங்களாக மற்ற அனைத்துப் பகுதிகளை விடவும் விலையுயர்ந்தாகக் கோலோச்சி வருகிறது. அது தற்போது ஒரு சதுர அடி ரூ. 22,509 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

சங்கே சாலையிலிருந்து பெள்ளாரி சாலை வரை உள்ள பகுதிகள்

பெங்களூரின் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றான மற்றொரு பகுதியாகும். இதன் விலை ஒரு சதுர அடி ரூ. 22,304.

மதிப்பீட்டுப் புத்தகத்தில் நுழைந்துள்ள மற்றொரு புதிய சொத்து, கன்னிங்கம் சாலையிலுள்ள பிரெஸ்டீஜ் எட்வார்டியன் ஆகும். இது ஒரு சதுர அடி ரூ. 20,139 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பிரெஸ்டீஜ் கோதே டவர்ஸ்

பிரெஸ்டீஜ் கோதே டவர்ஸ்

வணிக ரீதியாக விலையுயர்ந்த ராஜ்பவனுக்கு எதிரில் உள்ள பிரெஸ்டீஜ் கோதே டவர்ஸ் பாதுகாப்பு காரணங்களுக்காகக் காவல் துறையினரால் வெளியாட்களுக்கு விடப்படாமல் இருந்தது. இப்போது அங்குப் பொதுமக்கள் குடியிருப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இந்தச் சொத்தானது பதிவுகளில் இதுவரை இருந்த சாதனைகளை முறியடித்துள்ளது - இங்கு ஒரு சதுர அடி 15,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குயின்ஸ் வட்டாரத்தில் உள்ள குயின்ஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பு ஒரு புத்தம் புதிய மதிப்பீட்டைப் பெற்றுள்ளது - அது ஒரு சதுர அடி ரூ. 8,382 ஆகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Forget buying property in these places in Bengaluru

Forget buying property in these places in Bengaluru
Story first published: Saturday, April 22, 2017, 15:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X