நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும்.. உங்களால் தவிர்க்க முடியாத நிதி முடிவுகள்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை நம்பியுள்ளோர்க்குப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க உங்கள் நிதி நிலைமையை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். நிதிப்பிரச்சனைகள் ஒரு தனிப்பட்ட நபருக்கு மட்டுமல்ல, சிறு குறு நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களுக்கும் உண்டானதுதான்.

 

இவற்றிலிருந்து பாதுகாப்புடன் மீண்டு வரக் காலம் தாழ்த்தாமல் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய ஐந்து வழிகள் இதோ :

கடவுச் சொற்களைச் சேமியுங்கள்.

கடவுச் சொற்களைச் சேமியுங்கள்.

உங்கள் நிதி தொடர்பான விஷயங்கள் மெல்ல மெல்ல மின்னணு மயமாக மாறி வருவதால், உங்களின் இணைய வங்கி, மின்னஞ்சல், ஏடிஎம், மொபைல் பாங்கிங், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட அனைத்துக் கணக்குகளின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச் சொற்களை ஒரு தாளில் படி எடுத்து லாக்கரிலோ அல்லது வேறு எதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.

இந்த விஷங்களை எல்லாம் ஒரு கடவுச் சொல் நிர்வாகியில் சேமித்து வைத்திருந்தால், அதன் கடவுச் சொல்லை பாதுகாப்பாக வைக்கவும். முக்கியமாக, உங்களின் வாழ்க்கைத்துணை அல்லது வாரிசுகளுக்கு இவ்விஷயத்தைத் தெரியப்படுத்தியிருங்கள்.

 

வாரிசுதாரர்களை நியமியுங்கள்

வாரிசுதாரர்களை நியமியுங்கள்

இது அவசியமில்லாதது எனக் கருதி பெரும்பான்மையோரால் தவிர்க்கப் பட்டிருக்கும். இருப்பினும், வங்கி கணக்கு துவங்கவோ, காப்பீட்டு பாலிசி எடுக்கவோ அல்லது பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யவோ அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யவோ இது அவசியம் என்பதால் அவற்றின் பயன்கள் சேர வேண்டியவர்களுக்கு எளிமையாகச் சென்று சேர உதவியாக இருக்கும். வாரிசு நியமனம் என்பது முதலீடுகள் வாரிசுகளுக்குச் சென்று சேர ஒரு அறங்காவலராக இருப்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவு ஏற்படுதல் மற்றும் உணர்வுப் பூர்வமான அதிர்ச்சி ஆகியவற்றைக் குறைத்திட உதவும்.

கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றிடுங்கள்.
 

கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றிடுங்கள்.

சில்லறைச் செலவின நிதி ஒரு முறை நடக்கும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமணி செலவினங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும். ஆனால், கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கள் முன்னேற்பாட்டோடு இல்லாவிட்டால் உங்கள் சேமிப்புகள் முழுவதையும் கரைத்து விடும்.

அதிகரித்துவரும் நோய் பாதிப்புகளான புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்களிருந்து மீண்டு வர, நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது மட்டுமல்லாமல் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பு தரும் திட்டங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஆவணங்களைத் திட்டமிடுங்கள்.

ஆவணங்களைத் திட்டமிடுங்கள்.

முக்கிய ஆவணங்களை நெறிப்படுத்தித் திட்டமிடுதல் ஒரு முக்கியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும். முதலில், உங்கள் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைத்து அதனைப் பதிவு செய்து வைப்பது வாரிசுகளுக்கிடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும். அடுத்து, பிற சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் கடன்கள் குடித்து ஒரு பட்டியலிட்டு அவற்றையும் நெறிப்படுத்தவும்.

உங்கள் வங்கி கணக்குகள், காப்பீட்டுப் பாலிசிகள், மருத்துவம், கார் ஆகியவற்றுக்கான பாலிசி கள், வேறு நிதி திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், பிற சிறு சேமிப்புத் திட்டங்கள், பங்கு வர்த்தகங்கள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள், நிலம் விற்றல் வாங்குதல் தொடர்பானவை, கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்கு எல்லாம் தனித் தனிக் கோப்புறைகள் வைத்து பராமரிக்க வேண்டும். இந்தக் கோப்புறைகளில், இவற்றின் துவக்கம், முதிர்வுக் காலம், முதிர்வு தொகை, மாதாந்திர கட்டணங்கள், செலுத்தும் தேதிகள் மற்றும் பிற அனைத்துத் தகவல்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் இவற்றைத் தெரிந்திருக்குமாறு இவற்றை ஒரு வங்கி லாக்கரில் டெபாசிட் செய்து வைக்க வேண்டும்.

 

உங்கள் கடன்கள் குறித்துத் திட்டமிடுங்கள்

உங்கள் கடன்கள் குறித்துத் திட்டமிடுங்கள்

நீங்கள் ஒரு மிகப் பெரிய வீட்டுக் கடன் செலுத்துபவராக இருந்தால் உங்கள் இறப்பிற்குப் பிறகு அது உங்கள் குடும்பத்தினரை பெரும் சுமையாகத் தொந்தரவு கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதனைத் தவிர்க்க உங்கள் ஆயுள் காப்பீடு திட்டங்கள் இந்தக் கடன்களை உள்ளடக்கியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆண்டு வருமானத்தைப் போல் 8-10 மடங்கு இருக்குமாறு ஒரு காலமுறை சேமிப்புத் திட்டத்தை வைத்திருந்தால் அது உங்கள் குடும்பத்தை இந்தச் சிரமங்களிலிருந்து காப்பாற்றி அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்து கொள்ள உதவியாயிருக்கும்.

இதற்காக உங்கள் பாலிசி வரையறைக்குள் உங்கள் கடன் திட்டங்களையும் கொண்டு வந்து சிரமங்களைக் குறைக்கத் திட்டமிடுங்கள்.

 

நிதியும் சிரமும்

நிதியும் சிரமும்

நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும். அவற்றிலிருந்து சிரமமின்றி மீண்டு வர மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தோருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே பின்பற்றித்தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 financial decisions you can't put off any longer

5 financial decisions you can't put off any longer
Story first published: Thursday, June 22, 2017, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X