ஒரு டேப்லெட்டை இப்படியும் பயன்படுத்தலாம்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களிடம் சொந்தமாக ஒரு பட்ஜெட் (விலை குறைவான) ஆண்ட்ராண்ட் டேப்லெட் இருந்தால், அதன் கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த செயல்பாட்டுத் திறன்கள் அல்லது நீங்கள் அதை விடச் சிறந்த ஒன்றை புதியதாக வாங்கியிருத்தல் போன்ற காரணங்களினால் அதை ஒதுக்கி வைத்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். இருந்தாலும், உங்கள் பட்ஜெட் டேப்லெட் முற்றிலும் பயனற்றது அல்ல. மேலும் அதைப் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. கார் பயண வழிகாட்டுதலுக்காக.

1. கார் பயண வழிகாட்டுதலுக்காக.

உங்கள் பட்ஜெட் டேப்லெட்டின் பெரிய திரை வரைப்படங்களையும் மற்றும் திசைகளையும் பார்ப்பதற்கு சிறந்தது. டேப்லெட்டை உங்கள் காரில் பொருத்துவதற்கு ஒரு கார் மவுண்ட்டையும் (ரூ. 399 க்கு மேல்) ஒரு கார் சார்ஜரையும் (ரூ. 399 க்கு மேல்) வாங்கிக் கொள்ளுங்கள். ஆப்கள் எனப்படும் செயலிகளைப் பெற நீங்கள் கூகுள் மேப்பிற்கு செல்லலாம். அது ஒவ்வொரு திருப்பத்திலும் உங்கள் பயண வழிகாட்டுதலுக்கு ஆதரவளிக்கிறது மேலும் ஒரு பகுதிக்கான வரைபடங்களை ஆஃப்லைனில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் பயணம் செய்யும் போது உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படாது. ஆனால் சூரிய வெளிச்சத்திலிருந்தும் அல்லது திருடு போவதிலிருந்தும் தடுப்பதற்காக நீங்கள் ஒவ்வொரு முறை காரை விட்டு வெளியேறும் போதும் டேப்லெட்டையும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மேப் மை இந்தியா தளத்தின் மூலம் நீங்கள் வரைபட திசை வழிகாட்டுதல்களையும் மற்றும் உள்ளூர் தேடுதல் செயலிகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

2. மியூசிக் ப்ளேயர்

2. மியூசிக் ப்ளேயர்

பெரும்பாலான டேப்லெட்டுகள் 8 ஜிபி சேமிப்பு இடத்துடன் வருகின்றன. 8 ஜிபி யில் ஆயிரக்கணக்கான பாடல்களை சேமித்து வைக்கலாம்! மேலும், கூகுள் ப்ளே மியூசிக், கானா, சாவ்ன், விங்க் மற்றும் பலப் பெருகி வரும் இசைச் சேவைகளின் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் மில்லியன் கணக்கான பாடல்களைப் பெறலாம். மேலும் இந்த சேவைகள் சந்தா செலுத்தினால் ஆஃப்லைனில் பாடல்களை தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதியளிக்கிறது. இயல்பாகவே ஒரு டேப்லெட்டின் ஸ்பீக்கர்கள் அதிக சத்தமாக இருக்காது என்பதால் படுக்கைக்கு பக்கத்தில் வைத்துக் கேட்கக்கூடிய ப்ளேயருக்கு இந்த ஒலி அளவு போதுமானதாக இருக்கிறது. எனவே நீங்கள் ஒரு ப்ளூ டூத் ஸ்பீக்கருக்கு மட்டும் முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கும். டேப்லெட்டை ஸ்பீக்கர்களுடன் இணைத்து விட்டால், உங்கள் டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர் தயார்.

3. பாதுகாப்பு கேமரா

3. பாதுகாப்பு கேமரா

வழக்கமாக டேப்லெட்டுகளில் உள்ள கேமராக்கள் இணை கேமராக்களுக்கு சமமானவையாகவே இருக்கும், அவை தரமான புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றவையல்ல. இருந்தாலும், அதே கேமரா தரத்தில் ஒரு அடிப்படைப் பாதுகாப்பு கேமராவைப் போல நல்லது. ஐபி வெப்கேம் போன்ற இலவச செயலிகளைப் பயன்படுத்தி, உங்கள் டேப்லெட்டை ஒரு சாய்வு மேசை அல்லது மேஜை மீது பொருத்தி பிறகு அதை ஒரு ரிமோட் பாதுகாப்பு கேமராவாகப் பயன்படுத்தலாம்.அந்தத் தொடர் கானொளிகளை எந்த பிரவுசரில் வேண்டுமென்றாலும் காண முடியும் மேலும் அது தானியங்கியாக கிளவுட் சேமிப்பகத்தில் பதிவேற்றப்படுகிறது. நீங்கள் அசைவகளைக் கண்டறிதல் போன்ற மேம்படுத்தப்பட்ட உயர்தர அம்சங்களைப் பெற விரும்பினால், பணம் செலுத்தும் பதிவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

4. புக் ரீடர்

4. புக் ரீடர்

கிண்டில் புத்தகப் பிரியர்களுக்காக அவர்களது கிண்டில் கணக்கிலிருந்து புத்தகங்களைப் படிக்கக்கூடிய ஒரு இலவச செயிலியை வழங்குகிறார்கள். இதே போன்று ஏராளமான அளவில் இலசவ செயலிகள் கிடைக்கப் பெறுகின்றன. (எடுத்துக்காட்டாக, கூகுள் ப்ளே புக்ஸ், அல்டிகோ, மூன்+ ரீடர் மற்றும் பல) இதைக் கொண்டு உங்கள் அகன்ற பெரிய திரை கொண்ட டேப்லெட்டை இ-புக் ரீடர் கருவியாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான இந்த செயலிகள் பொதுவான இ-புத்தக வடிவமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் எழுத்தின் அளவு, எழுத்துரு, நிறம் மற்றும் ஒளியை சீரமைக்கும் தேர்வுகளை வழங்குகிறது. மேலும் இந்த செயலிகள் நீங்கள் படிக்கும் போது அமர்ந்திருக்கும் நிலையை நினைவுப்படுத்துகின்றன அத்துடன் நீங்கள் எங்கே படிப்பதை விட்டுச் சென்றீர்களோ அங்கிருந்து படிக்கத் தொடங்குவதற்கு உதவி புரிகின்றன.

5. டிஜிட்டல் புகைப்படச் சட்டம்

5. டிஜிட்டல் புகைப்படச் சட்டம்

ஒரு சாய்வு மேசை ஸ்டாண்டைப் பயன்படுத்தி உங்கள் பழைய டேப்லெட்டை டிஜிட்டல் புகைப்படச் சட்டத்தைப் போல பயன்படுத்துங்கள். டேப்லெட்டில் உள்ள இயல்பான கேலரி செயலி சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்களை தானியங்கியாக சுழற்சி முறையில் காட்டுவதில்லை. எனவே நீங்கள் கூகுள் ஃபோட்டோஸ் அல்லது டிஜிட்டல் ஃபோட்டோ ஃபிரேம் ஸ்லைடு ஷோ போன்ற செயலிகளைப் பெற வேண்டும். இந்த இரண்டு செயலிகளுமே உங்கள் டேப்லெட் சாதனத்தில் உள்ள புகைப்படங்களை தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட படக் காட்சிகளாகக் காட்டும். இன்னும் உயர்தர உள்ளடக்கத்தை நீங்கள் பெற விரும்பினால் டே ஃபிரேம் செயலியை பெறுங்கள். அது உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற இதர சேவைகளுடன் இணைத்து ஸ்லைடு ஷோ காட்சிகளாக காட்ட உதவுகிறது.

6. தனிப்பட்ட திட்டமிடுதல்

6. தனிப்பட்ட திட்டமிடுதல்

உங்கள் அட்டவணைகளை பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தி எழுதுவதற்குப் பதிலாக உங்கள் பழைய டேப்லெட்டை ஒரு டிஜிட்டல் திட்டமிடும் கருவியாக இயங்கச் செய்யலாம். சோல் காலண்டர், கால், அல்லது காலண்டர்+ போன்ற உயர்தர அம்சங்களைக் கொண்ட காலண்டர் செயலிகளை உங்கள் டேப்லெட்டில் நிறுவி மேலும் அதில் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்ட தட்ப வெப்ப நிலை, விடுமுறை நாட்கள் மற்றும் இதர காலண்டர்கள் செயலிகள் மற்றும் மின்னஞ்சல்களிலிருந்து பெறப்பட்ட நியமனங்களையும் கூட காட்டும்படி செய்யலாம். சில செயலிகளில் வரவிருக்கும் அல்லது முக்கிய நிகழ்வுகளை சத்தம் அல்லது அதிர்வலைகளின் வழியாக உங்களுக்கு அறிவிக்கும்படியும் அமைத்துக் கொள்ளலாம்.

7. வைஃபை ரூட்டர்

7. வைஃபை ரூட்டர்

இதை 4ஜி ஆதரவுக் கொண்ட டேப்லெட்டுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் டேப்லெட்டுகளில் 4ஜி டேட்டா திறன் இருந்தால் அதை மின்னிணைப்புடன் இணைத்து, அதில் ஒரு இணைய பயன்பாட்டு வசதி கொண்ட டேட்டா சிம் கார்டை நிறுவி வைஃபை ஹாட் ஸ்பாட் வசதியை பெறலாம். இந்த வழியில் உங்கள் முதன்மை தொலைபேசி கருவியின் பேட்டரியை செலவழிக்காமல் ஒரு தனிப்பட்ட வைஃபை இணைப்பை எங்கு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து ஆன்ட்ராய்ட் டேப்லெட்டுகளும் தனிப்பட்ட ஹாட் ஸ்பாட் உருவாக்க திறனுடன் வருகின்றன. செட்டிங்ஸ் > மோர் > டெத்தரிங் & பர்சனல் ஹாட் ஸ்பாட் என்ற தேர்வுகளுக்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் நெட்வொர்க்கிற்கு ஒரு பெயரை அமைத்துக் கொள்ளலாம். மேலும் அதற்கு ஒரு பாஸ்வேர்டையும் அமைக்குமாறு நாங்கள் மிக அதிக அளவில் பரிந்துரைக்கிறோம். ஏனென்றால் இதன் மூலம் உங்கள் டேட்டா நெட்வொர்க்கை வேறு யாராலும் பயன்படுத்த முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 things you can do with a budget tablet for optimal usage

7 things you can do with a budget tablet for optimal usage - Tamil Goodreturns | ஒரு டேப்லெட்டை இப்படியும் பயன்படுத்தலாம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Thursday, July 13, 2017, 19:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X