ஜிஎஸ்டி-க்கு பின் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தில் எப்படி ஒரு பெறும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோ அதே போன்று சமுகத்தில் அதன் பிரதிபலிப்பும் உள்ளது. ஆடம்பர பொருட்களை வாங்குவதில் சிலர் விலை உயர்வை எதிர்கொள்ள நேரிடும் போது, நன்மைகள் இறுதியில் மக்களுக்கு வந்து சேரும் என்பதில் அந்தச் சந்தேகமும் இல்லை.

 

தினசரி மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் பல வற்றின் மீது வரி விலக்கு அளித்துள்ளதினால் தற்போது இருப்பதை விட விலை குறைந்துவிடும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறு நன்மை

சிறு நன்மை

ஜிஎஸ்டி செயல்பாட்டுக்கு வந்த பிறகு உங்களுக்கு வருவது சிறு நன்மைகளாக இருந்தாலும் நீண்ட காலத்தில் பெறும் நமையினை அளிக்கும். அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

ஜிஎஸ்டி-ன் கீழ் உங்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் எப்படி மிச்சமாகும்?

ஜிஎஸ்டி-ன் கீழ் உங்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் எப்படி மிச்சமாகும்?

ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு உங்களுடைய மாத பட்ஜெட் 15,000 ரூபாய் என்றால் அமலுக்கு வந்த பிறகு மாதம் 500 ரூபாய் மிச்சமாகும்.

இது ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் சேமிப்பை உங்களுக்கு அலிக்கும். இந்தச் சேமிப்பு என்பது குறைவாகவும் இருக்கலாம் ஒருவேலை அதிகமாகவும் இருக்கலாம். ஜிஎஸ்டி காரணமாக நீங்கள் சேமித்து வைக்கும் பணம் இலாபகரமான பயன்பாட்டிற்கு வைக்கப்படலாம்.

 

 சிறு முதலீடு அதிக லாபம்
 

சிறு முதலீடு அதிக லாபம்

ஒவ்வொரு மாதமும் 500 ரூபாயினை எஸ்ஐபி-ல் முதலீடு செய்ய விரும்பினால் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.

இந்த 500 ரூபாயினை ஒவ்வொரு மாதமும் 20 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்தால் 16 சதவீத லாபத்துடன் 8.7 லட்சமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த லாபம் உங்களுடைய ஓய்வூதிய காலத்திற்குப் பெறும் உதவியை அளிக்கும்.

 

பழமைவாத முதலீட்டாளர்

பழமைவாத முதலீட்டாளர்

நீங்கள் ஒரு பழமைவாத முதலீட்டாளர் என்றால், நீங்கள் கடன் பரஸ்பர நிதி, அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

உங்கள் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள்

உங்கள் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள்

இப்போது கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில் நீங்கள் விரைவாகக் கடனை செலுத்துவதும் உங்களுக்கு நன்மையை அளிக்கும்.

வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு அதே நிலையில் இருக்காது. சமீப காலங்களில் நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதிலுள்ள முக்கியப் பகுதியினர் இன்னும் பணம் செலுத்தப்படாவிட்டால், கடனை மீட்பதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்துவதற்குப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆரம்பக்காலத் திருப்பிச் செலுத்துவது எப்போதும் நல்ல பழக்கம்.

 

இது தற்செயலாக நடக்கும்

இது தற்செயலாக நடக்கும்

இந்தச் சேமிப்புப் பணத்தை உங்களுக்குத் தற்செயலாக ஏற்படும் சிக்கல்களுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கனவே நீங்கள் அதற்காக முதலீடு செய்து வந்தாலும் கூடுதலாக இதனையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

6 முதல் 8 மாதங்கள் நீங்கள் சேமிப்பை தொடர்ந்தால் உங்களுக்குக் கண்டிப்பாகத் தற்செயலாக வரும் நிதி சிக்கலுக்கு உதவும்.

 

ஈஎம்ஐ

ஈஎம்ஐ

நீங்கள் ஏதேனும் வாங்க வேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்து வந்து நிதி நெருக்கடியைச் சந்தித்து இருக்கலாம். அவர்கள் இதனைக் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பயன்பெறலாம். ஈஎம்ஐ உதவியுடன் அந்தப் பொருட்களை வாங்கிக்கொண்டு மாத தவணையாகச் செலுத்திவிடலாம்.

காப்பீடு திட்டங்கள்

காப்பீடு திட்டங்கள்

உங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் சேமிப்பை வைத்து மருத்துவக் காப்பீடு திட்டம் ஒன்றை வாங்கலாம். முதலில் குறைவான திட்டங்களை வாங்கிப் பயன்படுத்திவிட்டுப் பின்னர்ப் பெரிய காப்பீடு திட்டங்களை வாங்கலாம்.

சிலர் தங்களது நிறுவனத்தில் அளிக்கப்படும் காப்பீடு திட்டமே போதும் என்று நினைப்பார்கள், ஆனால் அது சில நேரங்களில் பற்றாக்குறையாகவும் இருக்கும். எனவே தனியாக ஒரு மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வதும் நல்லது.

 

விலையில் மாற்றம் இல்லாத பொருட்கள்

விலையில் மாற்றம் இல்லாத பொருட்கள்

தினசரி பயன்பாட்டுக்குத் தேவையான மசாலா, தானியங்கள், பால், சமையல் எண்ணெய்கள், இனிப்புகள், சாறுகள், பற்பசை, ஷாம்பு, சவரன் கிரீம், சோப்பு, வெண்ணெய், பிஸ்கட், பருப்பு வகைகள், மருந்துகள், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்றவற்றின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

விலை உயரும் பொருட்களும் சேவையும்

விலை உயரும் பொருட்களும் சேவையும்

அதே நேரம் மொபைல் ரீசார்ஜ், செட் அப் பாக்ஸ் ரீசார்ஜ், ரயில் பயணக் கட்டணங்கள், டாக்ஸி கட்டணங்கள், பராமரிப்பு மற்றும் பழுது செய்வது போன்ற சேவைகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to use GST Savings and invest smartly

How to use GST Savings and invest smartly
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X