ஜிஎஸ்டிக்கு பின் சவரன் தங்க பத்திரங்கள் சிறந்த முதலீடாக உள்ளது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த மஞ்சள் உலோகத்தின் அதிகளவிலான இறக்குமதியை குறைப்பதற்காக நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, தங்க சவரன் பத்திரங்கள் அல்லது காகிதத் தங்கம் எனப்படும் வர்த்தக முறையை அறிமுகப்படுத்தியது.

 

ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இது அதிக லாபகரமானதாகத் தெரிகிறது. எப்படி..? வாங்க பார்போம்.

எஸ்ஜிபி எனப்படும் சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தின் ஒன்பதாவது பகுதி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டாவது நிதியாண்டாக தொடர்ந்து அதிக லாபம் அளிக்கும் ஒரு முதலீடாக உள்ளது.

கட்டித் தங்கம் இப்போது ஜிஎஸ்டி வரியாக 3%ஆக உள்ளது.

கட்டித் தங்கம் இப்போது ஜிஎஸ்டி வரியாக 3%ஆக உள்ளது.

அரசாங்கத்தால் வெளியிடப்படும் காகிதத் தங்கத்திற்கு எதிரான கட்டித் தங்க விற்பனை இனி முன்னோக்கி 3% ஜிஎஸ்டி வரிவிதிப்பைப் பெறும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் மீது 1 முதல் 1.2% வரை வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட்டது அதே நேரத்தில் தங்கத்தின் மீது 1% சுங்க வரிக் கட்டணம் விதிக்கப்பட்டது.

மூலதனத்தின் பெரும்பகுதி தங்கக் கட்டிகளாக சேமிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் இந்த பழைய தங்கத்தின் விற்பனை உயர்வானது கள்ளக்கடத்தல் போன்ற சட்ட விரோதமான நடைமுறைகளுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் என்பது வியாபாரிகளின் கண்ணோட்டாக இருக்கிறது.

மறுபுறம், சவரன் தங்கப் பத்திரங்கள் வாங்குவதற்கு அத்தகைய வரிகள் இல்லை. அதாவது, முதலீட்டுத் தேர்வுடன் உள்ளார்ந்த அடிப்படைச் சொத்துக்கள் எதுவும் இணைக்கப்படாததால் உற்பத்தியாளர் வரி இல்லை.

 

ஆண்டொன்றுக்கு 2.75% வருடாந்திர வட்டி அரையாண்டில் செலுத்தப்படும்

ஆண்டொன்றுக்கு 2.75% வருடாந்திர வட்டி அரையாண்டில் செலுத்தப்படும்

அரை-வருடாந்திர அடிப்படையில் 2.75% வட்டியை வழங்கும் காகித வடிவத் தங்கம் இதர திட நகைகளைக் காட்டிலும் அதிக மதிப்பீட்டைப் பெறுகிறது. திட தங்க ஆபரணங்கள் மூலதன மதிப்பீட்டு வழியில் தவிர வேறு எந்த ஒரு லாபத்தையும் ஈட்டுவதில்லை. இருந்தாலும், அவற்றை விற்பதன் மூலம் மட்டுமே லாபத்தை மீட்டெடுக்கலாம்.

 

 

சவரன் தங்க பத்திரங்களை திரும்ப மீட்பதில் மூலதன ஆதாயங்கள் இல்லை
 

சவரன் தங்க பத்திரங்களை திரும்ப மீட்பதில் மூலதன ஆதாயங்கள் இல்லை

பருப்பொருள் உருமற்ற வடிவங்களில் பாதுகாத்து வைக்கக்கூடிய இந்த பத்திரங்கள் பங்கு பரிமாற்றகங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன, இதன் பொருள் என்னவென்றால் இந்த பத்திரங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் முதிர்வடைவடைவதற்கு முன்பாகவே நடைமுறையிலுள்ள சந்தை விலைக்கு வெளியிலெடுத்துக் கொள்ளலாம்.

மேலும், சவரன் தங்கப் பத்திரங்களில் மீட்டெடுப்பின் மீது மூலதன லாபத் தாக்கங்கள் ஏற்படுவதில்லை அதற்கு நேரெதிராக கட்டித் தங்கம் குறுகிய கால மற்றும் நீண்ட கால இரண்டு வகை மூலதன லாபத் தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது.

 

கட்டணங்கள் குறைவு

கட்டணங்கள் குறைவு

திட வடிவ தங்கத்துடன் வங்கி லாக்கர்களில் சேமிக்கப்பட்டு வளர்ச்சியடைவதால் சவரன் தங்கப் பத்திரங்கள் தொடர்பாக வேறு கட்டணங்கள் எதுவும் இல்லை.

வங்கி லாக்கரைப் பராமரிப்பது தொடர்பாக வருடாந்திர சேமிப்புக் கட்டணத்தை விதிக்கும் திட வடிவ தங்கத்தை போலல்லாமல் எஸ்ஜிபி க்கள் டீமேட் வடிவில் பாதுகாக்கப்படுகிறது மேலும் கூடுதல் சேமிப்புக் கட்டணங்களை விதிப்பதில்லை.

 

நிறைவு

நிறைவு

எனவே, ஆண்டுக்கு 850 முதல் 950 டன் வரை நுகர்வுடன் சவரன் தங்க பத்திர முதலீடுகள் இந்த விலைமதிப்பற்ற மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்ய விரும்பும் சமூகத்தினரிடையே பிரபலமான அடுத்த முதலீட்டு விருப்பத் தேர்வாக அமைக்கப்படும். மேலும், ஆய்வாளர்களின் கருத்துப்படி இரண்டு முதலீட்டு வடிவங்களுக்கிடையே உள்ள வேறுபாடு, முன்னோக்கிய காலங்களில் அதிகரிக்கவும் அல்லது எஸ்ஜிபி க்களுக்கான தேவை உயரவும் வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sovereign Gold Bonds Are A Great Bet Under GST

Sovereign Gold Bonds Are A Great Bet Under GST - Tamil Goodreturns | ஜிஎஸ்டிக்கு பின் சவரன் தங்க பத்திரங்கள் சிறந்த முதலீடாக உள்ளது..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, July 23, 2017, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X