இப்படி ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய்கிழிய யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.

பொதுவாக அரசியல்வாதிகள் பேசுகையில் முந்தைய அரசு செய்த தவறுகளைத் திருத்தும் புதிய சட்டங்கள் இயற்றுவோம், அல்லது தடம் புரண்ட பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க ஒரு முக்கிய வளர்ச்சி வடிவத்தை வைத்துள்ளோம் என்பதே பிரதானமாக இருக்கும்.

ஆனால் சில நாடுகள் சரியான நிர்வாகத் திறன் இல்லாத, மக்களுக்கான நல்ல திட்டங்களை வடிவமைக்கத் தெரியாத அரசியல் தலைவர்கள் மூலம் இந்த நாடுகள் தற்போது எதையுமே செய்ய இயலாத நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளது.

மோசமான ஆட்சி

மோசமான ஆட்சி

மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாடுகளை ஆட்சி செய்பவர்களுக்கு மக்கள் மீது எந்த விதமாழ அக்கறையும் இல்லை என்பதை நிறுபனம் செய்யும் வகையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் 11 மோசமான ஆட்சியைச் செய்து கொண்டிருக்கும் நாடுகள் பட்டியலிட்டுள்ளது.

முக்கியக் காரணிகள்

முக்கியக் காரணிகள்

இந்தப் பட்டியலை உருவாக்கப் பணவீக்க விகிதம், பொருளாதாரச் சுதந்திரம், ஊழலின் தீவிரம், உணரப்பட்ட ஊழல்கள், குற்றங்களின் அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொதுக் கடன் சுமை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தனி நபர் வருமானம் மற்றும் பாலின சம உரிமை ஆகிய காட்டிகளைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

மதிப்பெண்கள்: 14

மதிப்பெண்கள்: 14

போரினால் சீர்குலைந்திருக்கும் இந்த நாடு சாதாரண நிலைக்குத் திரும்புவதில் தொடர்ந்து பல சிக்கல்களைக் கொண்டிருப்பது ஆச்சரியமல்ல. உண்மையில், தற்பொழுது ஊழலால் பெரும் சிக்கலை இந்த நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.

டிரான்ஸ்பரன்ஸி இன்டெர்னேஷனல் அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்கள் படி, உலகில் உள்ள 167 நாடுகளின் பட்டியலில் ஈராக் 161வது இடத்தில் உள்ளது.

உணரப்பட்ட ஊழல்கள் அடிப்படையில் தயாரான பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 0.13 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.

 

மதிப்பெண்கள் : 18

மதிப்பெண்கள் : 18

ஜிம்பாப்வே குடியரசு உண்மையில் மோசமான ஒரு பொருளாதார நிலையில் இல்லை. அதே நேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) கடன் சுமையானது 200 சதவீதமாக உள்ளதாகச் சிஐஏ-வின் 2012 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றாலும், இந்த நாடு பஞ்சம் மற்றும் வறுமையில் போராடி வருகிறது. எல் நினோ எனப்படும் இயற்கை நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு உணவுப் பொருட்கள் தேவைப்படுவதாக இந்நாட்டின் துணை அதிபர் அறிவித்துள்ளார்.

 

மதிப்பெண்கள் : 18

மதிப்பெண்கள் : 18

ஆப்கானிஸ்தான் நாட்டின் கடந்த 2014 ஆண்டின் கடைசியில் முடிவுக்கு வந்த அமெரிக்கப் போர் உள்ளிட்ட பிரச்சனைகளின் பிரதானமாக ஊழல் தற்போது உருவெடுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டின் ஃபிஸ்கல் டைம்ஸ் ஆய்வறிக்கைப் படி, உள்நாட்டு வருவாய்க் குறைவினால் இந்த நாடு 2016 ஆண்டின் பட்ஜெட் செலவினங்களை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை எனக் கூறப்படுகிறது. நாட்டின் உள்நாட்டு வருவாய் ஆதாரங்கள் திருடப்பட்டுவிட்டதால் ஆப்கானிஸ்தான் வெறுமையில் சிக்குண்டுள்ளது.

 

மதிப்பெண்கள் – 19

மதிப்பெண்கள் – 19

ஏமன் குடியரசு அரேபிய தீபகற்பத்தில் பெரும் நிர்வாகப் பிரச்சனைகளில் சிக்கியுள்ள நாடு. உணரப்பட்ட பெரும் ஊழல்களின் இருப்பிடமாக இருப்பது மட்டுமல்ல, பணவீக்கமும் மிக அதிகமாக உள்ள நாடு.

சர்வதேச நிதியத்தின் புள்ளி விவரங்கள் படி, இந்த நாட்டின் 2015 ஆம் ஆண்டுப் பணவீக்கம் 30 சதவீதமாக இருந்தது.

துரதிருஷ்டவசமாக ஆண்-பெண் சம உரிமையில் மிக மோசமான நிலையிலேயே உள்ளது ஏமன். இங்கு வேலை செய்வோரில் 26 சதவீதம் மட்டுமே பெண்களாக உள்ளனர் என்பதோடு உயர்பதவிகளில் 2 சதவிகித பெண்கள் மட்டுமே அங்கம் வகிக்கின்றனர்.

 

மதிப்பெண்கள் – 22

மதிப்பெண்கள் – 22

சோமாலியா தனக்கே உரித்தான பிரச்சனைகளால் இந்த ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்த நாட்டின் எல்லையில் நிகழும் சட்ட மற்றும் சமூக விரோத செயல்கள் எனப் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்நாட்டில் அனைத்துத் தரப்பிலும் உள்ள ஊழல், உணரப்படும் ஊழல்கள் போன்றவையும் சேர்ந்து இதனை இந்தப் பட்டியல்களில் சேர்த்துள்ளன.

 

மதிப்பெண்கள்: 22

மதிப்பெண்கள்: 22

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் மதிப்பெண்களைப் பெற்றுள்ள இந்த நாடு பொருளாதாரச் சுதந்திரம், ஊழல் மற்றும் தனிநபர் உற்பத்தி ஆகியவற்றில் பிரச்சனைகளைக் கொண்டுள்ளது.

மிகப்பெரும் ஊழல் நிலவும் மரம் மற்றும் வைர வர்த்தகத் தொழில் துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனின் பொருளாதாரச் சுதந்திரம் உள்ள 178 நாடுகளின் பட்டியலில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 168 வது இடத்தைப் பிடித்துள்ளது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு.

இந்த நாட்டின் தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகிலேயே மிகவும் குறைவாக 609 பன்னாட்டு டாலர்கள் என்ற அளவில் உள்ளது.

 

மதிப்பெண்கள் – 23

மதிப்பெண்கள் – 23

வெனிசுலா நாட்டைப் பற்றிய அண்மை செய்திகளை நீங்கள் படித்திருந்தால் இதன் பணவீக்கம் எவ்வாறு 481 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை அறிந்திருப்பீர்கள்.

இதென்ன பெரிய விசயம், எகனாமிக் டைம்ஸ் கூற்றுப்படி கச்சா எண்ணை விலைச் சரிவால் இது 720 சதவிகித அளவிற்கு உயர வாய்ப்பிருக்கிறதாம். இந்த நாட்டின் குற்றங்களின் அளவும் விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்துள்ளது.

 

மதிப்பெண்கள் – 24

மதிப்பெண்கள் – 24

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான இது பணவீக்கம் மற்றும் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது.

சூடானின் பணவீக்கம் 2015 ஆம் ஆண்டில் 12.94 சதவிகிதமாக உள்ளதெனச் சர்வதேச நிதியம் தெரிவிக்கிறது. அதே நேரம், உணரப்படும் ஊழல் பிரிவில் 10 புள்ளிக்கு 0.12 புள்ளிகள் பெற்றுள்ளது.

 

மதிப்பெண்கள்: 24

மதிப்பெண்கள்: 24

தெற்கு சூடான் கூட மிகப்பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது. பணவீக்கம், ஊழல் மற்றும் உணரப்படும் ஊழல் ஆகியவை இதில் அடக்கம்.

இந்த நாட்டின் பணவீக்கம் 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 202.5 சதவீதமாக உள்ளது. உலகில் இது மூன்றாம் தர விகிதம். அதே நேரம் தெற்கு சூடான் உணரப்படும் ஊழல் கொண்ட நாடுகளில் 10 புள்ளிகளுக்கு 0.15 புள்ளிகள் பெறுகிறது.

அடிப்படையில் கச்சா எண்ணை மூலம் வருமானம் கிடைத்தாலும் ஊழல் இதில் குறுக்கிட்டு ஜனநாயகத்திற்குத் தடையாக உள்ளது. 2013 ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டுப் போரும் அதன் வளர்ச்சியைத் தடுப்பதாகவே உள்ளது.

 

மதிப்பெண்கள் – 26

மதிப்பெண்கள் – 26

காங்கோ குடியரசு ஒரு நாடு எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு நேர் எதிராக உள்ளது. பொருளாதாரச் சுதந்திரம், ஊழல் மற்றும் தனி நபர் உள்நாட்டு உற்பத்தி ஆகிய பிரிவுகளில் பின் தங்கி உள்ளது. உணரப்பட்ட ஊழல் பிரிவில் காங்கோ பெற்ற புள்ளிகள் வெறும் 0.

இதன் தனி நபர் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 729 சர்வதேச டாலர்கள் எனச் சர்வதேச நிதியம் தெரிவிக்கிறது.

 

மதிப்பெண்கள் – 32

மதிப்பெண்கள் – 32

பொருளாதாரச் சுதந்திரம், ஊழல் மற்றும் உணரப்பட்ட ஊழல் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளது. ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டெர்னேஷனல் மற்றும் பிற அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் படி வட கொரியா ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இங்கு ஊழல்களை வெளியில் சொல்ல அச்சப்படும் நிலைகளில் உள்ளதோடு இவையெல்லாம் எவ்வளவு தவறாக உள்ளது என்று கூடத் தெரியாத அளவிற்கு ஒரு நிலைமை நிலவுகிறது.

அதே நேரம் இந்த நாட்டில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகப் பொருளாதாரச் சுதந்திரம் என்கின்ற பேச்சிற்கே இடமில்லை எனலாம்.

 

..." data-gal-src="http:///img/600x100/2016/05/11-1462978064-2-workers.jpg">
என்ன பிரச்சனை..?

என்ன பிரச்சனை..?

<span style=இந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..?" title="இந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..?" />இந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 Worst Governed Countries in The World

Running a country is certainly a lot of hard work, and sometimes it’s clear that the people who rule don’t really care about the wellbeing of the people, which is obvious in these 11 worst governed countries in the world. 11 Worst Governed Countries in The World
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X