அரபு நாடுகளில் வேலை செய்ய சிறந்த 15 நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய் : சமீபத்திய பணியிட ஆலோசகர்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் Great Place to Work (GPTW) நிறுவனம் ஐக்கிய அரபு நாடுகளின் சிறந்த வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது.

உயர்ந்த நிலையில் உள்ள 15 நிறுவனங்கள் பட்டியலில் பிரத்தியேக பணியிடங்களுடன் பணியாளர்கள் தாங்கள் செய்யும் வேலையினைப் பெருமையுடனும், உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் செய்வதோடு, நிர்வாகத்தால் மரியாதையாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என்று இந்த சர்வே கூறுகின்றது.

இப்படிப்பட்ட பல நிறுவனங்கள், பணியாளர் நலன் சார்ந்த முயற்சிகள் மற்றும் பணியாளர் முன்னேற்றம் மற்றும் பணிச்சுமையின்றி இருக்கும் நிலை ஆகியவற்றைக் கைக்கொண்டிருக்கும்போது, வேலை தேடுவோருக்கான புதிய பணி சந்தர்ப்பங்கள் பலவற்றை உருவாக்கி, வேலை தேடுவோருக்கான வழிகாட்டியாகவும் விளங்குகின்றன.

எனவே இங்கு ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்வதற்கேற்ற 15 நிறுவனங்களின் பட்டியலை பார்ப்போம்.

DHL – டிஎச்எல்

DHL – டிஎச்எல்

டிஎச்எல் நிறுவனம் வேலை செய்யச் சிறந்த பணியிடங்களுக்கான விருது பெறுவோர் வரிசையில் இரண்டாம் ஆண்டாக இடம் பெற்றுள்ளது. டிஎச்எல் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் பணியிட முயற்சிகளை உச்சத்தில் வைத்துள்ளதை நிரூபித்திருக்கிறது. இந்நிறுவனம் பல்வேறு மக்களின் செயல்முறைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு தனது பணியாளருக்கு நல்லதைக் கொடுத்து கவர முயற்சிக்கிறது. பணியாளர்களின் தேர்விலிருந்து ஓய்வு வரை, பணியாளரின் டிஎச்எல் உடனான வாழ்க்கை சுழற்சி நிறுவனத்தின் உள்ளக மதிப்புகள், வியாபார குறிக்கோள்கள் மற்றும் பணியாளரை அலுவகத்துக்குள்ளேயும், வெளியேயும் சிறப்பாகச் செயல்பட வைக்கச் செயல்திட்டங்களோடு மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது.

Ericsson – எரிக்சன்

Ericsson – எரிக்சன்

நிறுவனத்தின் திறன்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் மக்களை வாடகைக்கு அமர்த்திப் பணியினை மேற்கொள்ளும் முறையினைக் கொண்டுள்ளது இந்நிறுவனம். இது புதிய பணியமர்த்தல்களைக் கொண்டு மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப துரித முறையில் செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது.

Omnicom Media group (OMG) – ஓஎம்ஜி

Omnicom Media group (OMG) – ஓஎம்ஜி

OMG நிறுவனம் தனது பணியாளர்கள்
பணியினையும், வாழ்க்கையினையும் சமன்படுத்திட விரும்புகிறது. அது, மனித வள பொது மன்றங்களைக் கொண்டிருக்கிறது. பணியாளர்களை அவர்களது சூழல் குறித்துக் குரல் கொடுக்க அனுமதிக்கிறது. "ஓஎம்ஜி கம்பெனியின் நடைமுறையில் பணியாளர்களின் பணி மற்றும் வாழ்க்கை சமஷ்டியில் கவனம் செலுத்தி நிறுவனங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கான முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஓஎம்ஜி மூத்த தலைவர்களிடமிருந்து அர்ப்பணிப்பு தன்மையைப் பெற்றிருக்கிறது." என்று கூறுகிறது GPTW பயிற்சி நிலையம்.

THE One – தி ஒன்

THE One – தி ஒன்

தி ஒன் நிறுவனம் முதுநிலை செயல் அலுவலரைக் கொண்டு அனைவரும் திரும்பிப் பார்க்கத்தக்க அளவில் முதன்மை நிறுவனமாக உயர்ந்துள்ளது. பணியாளர்களின் நியமனம் சிக்கல்களைத் தரும்போது முதன்மை செயல் அலுவலரின் பங்களிப்புடன் சமாளித்திருக்கிறது. தி ஒன் நிறுவனம் தனித்த அடையாளத்துடன் சமூகக் குறிக்கோள்களுடன் பணியாளர்களை உணர்வுப்பூர்வமாகச் சேர்த்து வைத்து ஊக்குவிக்கிறது.
நிறுவனம் "THE Onederworld" என்கிற கிராம சமூக முன்முயற்சி திட்டத்தை அமைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கென்யாவின் பிம்பினியட் சமுதாயத்தில் Free The Children என்ற சர்வதேச தர்மஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன் ஆறு வகுப்பறைகள் கொண்ட புத்தம் புதிய பள்ளி ஒன்றைக் கட்டியுள்ளது.

Marriott - மரியோட்

Marriott - மரியோட்

உலகளாவிய அளவில் 4,200 ஹோட்டல்களை நடத்தி வரும் இந்நிறுவனம் "துவக்கத்தில்" என்ற அடிப்படை புத்தாக்கப் பயிற்சியைப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாளர்களுக்கு அளிப்பதன் மூலம் ஹோட்டல் சொத்துக்களைப் பராமரிக்கும் நிர்வாகக் குழுவினருடன் சந்திப்பை ஏற்படுத்தி நிறுவனத்தின் நடைமுறைகள், தரம், வரலாறு மற்றும் அடையவேண்டிய இலக்குகள் குறித்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. ஹோட்டல்களின் பணியாளர்கள் எந்தவொரு மர்ரியோட் ஹோட்டல்களிலும் பணியாற்றுவதாகத் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். "நமது நண்பர்களுக்குப் பணியாற்றுவோம் " என்ற திட்டத்தின் மூலம் ஹோட்டல் பணியாளர்கள் தங்கள் பணி நிலைமையில் முன்னேற்றம் கண்டிட உதவுகிறது. "மர்ரியோட் இன்டர்நேஷனல் நிறுவனம் பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு நல்ல நிறுவனம் " என்று பயிற்சி நிலையம் கூறுகிறது.

Estee Lauder – எஸ்டீ லாடர்

Estee Lauder – எஸ்டீ லாடர்

எஸ்டீ லாடர் பெரும்பான்மையான ஐக்கிய அரபு நாடுகள் செய்யாததைச் செய்கிறது. புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிறுவனத்தின் தங்களது பணியில் அமரும் முன் ஒரு வரவேற்பு அட்டையைப் பெறுவார்கள். வெளியிலிருந்து வருபவர்களுக்கு "இது வெள்ளிக்கிழமை என்று அவர்களுக்குத் தெரியுமா " என்ற சுய விவர வழிகாட்டி ஒன்று கொடுக்கப்படும். அதில் துபாய் நகர வரைபடத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பதில் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக விளக்கியிருப்பார்கள்.

அந்தப் புத்தகம் பணியாளர்களுக்கு அவர்கள் பணியில் சேரும் முன் அவர்கள் வீட்டு முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். "கனவு வெளி" என்ற திட்டத்தின் வழியாகப் பணியாளர்களின் புதிய மாற்றியமைக்கக்கூடிய கருத்துக்களை நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள ஊக்கப்படுத்துகிறது. "இது புதிய கருத்துருவாக்கங்களுக்கு ஒரு தளமாக இருக்கிறது. இது அடிப்படையில் ஒவ்வொரு பணியாளரையும் புதிய கருத்துக்களைச் சிந்திக்க வைத்து அவரது இருக்கையில் இருந்தவாறே நிறுவனத்தை முன் நடத்திச் செல்ல அதிகாரம் கொடுக்கிறது."

 

weber Shandwick – வெபர் ஷண்ட்விக்

weber Shandwick – வெபர் ஷண்ட்விக்

இந்நிறுவனம் சமீபத்தில் அலுவகங்களைத் துவக்கி தனது பணியாளர்களைக் குழுவின் பகுதியாக உணரச் செய்வதுடன் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறது. வரவேற்பறை பணியாளரின் தகுதிக்கேற்ப வரவேற்பறையை வடிவமைத்திருக்கிறது. வெபர் ஷண்ட்விக் துபாய் அலுவலகம்....மரங்களைத் தெரிவு செய்வதிலிருந்து, சுவர்களின் ஓவியங்களிலிருந்து, வரவேற்பறையை நிர்மாணிப்பது வரை தனது அனைத்துப் பணியாளர்களின் குரலையும் பிரதிபலிக்கிறது." என்கிறது பயிற்சி நிலையம். அனைத்துக் குழு உறுப்பினர்களையும் நிறுவனத்தின் "வாழ்க்கையோடு இணைந்து பணியாற்றுவோம்" என்ற குறிக்கோளுடன் ஒன்றிணைந்து பணிபுரிய வைக்கிறது.

Hyatt - ஹயட்

Hyatt - ஹயட்

நீங்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கிழக்கு அல்லது ஐக்கிய அரபு நாடுகளுக்கு வெளியிலிருந்து வருபவராக இருந்தால் விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். ஹயட்டின் கொள்கைகள் மக்களை மையப்படுத்தியவை. ஐக்கிய அரபு நாடுகளுக்கு வெளியிலிருந்து வரும் புதிதாகப் பணியில் சேருவோரை அவர்களுக்கென நியமிக்கப்பட்ட பிரத்தியேக நபர்களைக் கொண்டு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். பணியில் சேர்வதற்கான பரிசுகள் அனைத்துப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.

சிறப்பு நிகழ்வுகளான பிறந்தநாள் போன்றவற்றின் போது பணியாளர் அலுவலரிடமிருந்து அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். ஒவ்வொரு ஜூன் மாதமும், உலகெங்கிலும் உள்ள ஹயட்ஹோட்டல்கள் ஒரு வாரக் காலத்திற்குப் பணியாளர்களின் உணர்வுகளுக்கான விழா கொண்டாடப்படும். இச்சமயங்களில், ஜும்பா வகுப்பறைகள், போட்டோ எடுக்கும் பயிற்சிகள், உணவு திருவிழாக்கள், புதையல் வேட்டை, பனிமலைகள், தண்ணீர் விளையாட்டுக்கள் சிறப்புச் சிற்றுண்டிகள் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல கேளிக்கைகள் நடத்தப்படும்.

 

Leminar – லேமினார்

Leminar – லேமினார்

லேமினார் நிறுவனம் பணியாளர்களின் கடினமான காலங்களில் அலுவலகக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு உதவிகள் செய்யும். தனது ஒரு பணியாளர் திருமண விடுமுறைக்குப் பின்னர் வரும்போது அவரது இடத்தை வேறு ஒருவர் ஆக்கிரமித்திருந்தால் அவருக்குரிய வேறு இடத்தினை அவருக்கு ஒதுக்கும். ஐக்கிய அரபு அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்படாத விடுமுறைகளையும் அனுபவிக்க அனுமதிக்கும். பண்டிகை கால விடுமுறை திட்டத்தின் கீழ் எந்த ஒரு பணியாளரும் தங்களின் தேவை, கலாச்சாரம் ஆகியவற்றுக்கேற்ப விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

இந்த நிறுவனம், மகளிர் தினம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ரமலான் ஆகியவற்றைச் சிறப்புடன் கொண்டாடுகிறது. பணியாளர்களின் பணிபளு, பணி நடைமுறை ஆகியவற்றில் கவனம் கொள்வதுடன் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடுகிறது. அந்த நாள்களில் குழந்தைகள் பங்கேற்று எந்த நிகழ்வையும் செய்யலாம். மற்றவர்களோடு ஒப்பிடும்போது இந்த நிறுவனம் பணியாளர்களின் நலனைத் தாண்டிச் செல்லாமல் வருடாந்திர பிக்னிக், விளையாட்டுவிழா, ஆண்டுவிழா, மாறத்தான் பந்தயங்கள் ஆகியவற்றை நடத்தி அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது.

 

Fun City – ஃபன் சிட்டி

Fun City – ஃபன் சிட்டி

இந்த நிறுவனம் பணியாளர்களின் ஆர்வங்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஸ்பார்க் என்ற முன்முயற்சி எடுக்கப்பட்டுத் தயார்நிலை, பொறுமை, கவனித்தல், முடிவு மற்றும் உதவும்நிலை ஆகியவற்றை ஊக்கப்படுத்துகிறது. இவை பணியாளர்களுக்கிடையே போட்டுத்திறன் மற்றும் குறிப்பிடத்தக்க குணம் ஆகியவற்றைக் கண்டறிந்திட உதவுகிறது. உண்மையான தனித்த அணுகுமுறையுடன் கூடிய நேர்காணல் மற்றும் பணியமர்த்தல்களைச் செய்கிறது.

EMC2

EMC2

EMC2 நிறுவனம் (www.emc.com) ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு பணியாளர்களுக்கு விடுமுறைகளை வழங்கி சந்தோசப்பட வைக்கிறது. தந்தையர்களுக்கான விடுமுறை, திருமண விடுமுறை மற்றும் சில விடுமுறைகளைக் கருணையுடன் வழங்குகிறது. பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. அரசாங்க அறிவிப்புக்களுக்கு அப்பாலும் பொது விடுமுறைகளை அளிக்கிறது.

WSP

WSP

திறந்த மனதுடைய, பெருந்தன்மையான, வரவேற்பு மிகுந்த கிளர்ச்சியூட்டக் கூடிய பணி நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதுடன், இந்நிறுவனம் இணையதள நிகழ்வுகளையும் நடத்துவதன் மூலம் ஒத்தக் கருத்துடைய பணியாளர்கள், தொழிற்துறை அறிவை வளர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. இந்நிறுவனத்தின் நியூஸ் லெட்டர் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் முனைப்புகளைத் தெரிவிப்பதோடு நிறுவனத்திற்குத் தங்கள் கொடைகளையும் அளிக்க உதவுகிறது. WSPல் பணியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதே வெற்றிக்கு வழிகோலுகிறது. பணியாளர்கள் அவர்களின் பணி நேரங்களில் சகஜமாக உணர்வதுடன் அவர்களின் இருப்பையும் அனுபவித்து உணர்கிறார்கள்.

Apparel Group - அப்பேரல் குழு

Apparel Group - அப்பேரல் குழு

"தெளிவான எண்ணம்" என்ற திட்டத்தின் கீழ் உலகளாவிய நவநாகரிக ஆடை வடிவமைப்புகளில் புதிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுதலை ஊக்குவிக்கிறது.
ஆர்வமுள்ள பணியாளர்கள் தங்கள் சிந்தனைகளை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அதற்கென வைக்கப்பட்ட பெட்டியில் சீட்டாகவோ போட்டுத் தெரிவிக்கலாம். அப்பேரல் குழும பணியாளர்கள் அனைத்து வகை ஆடைகளிலும் சொந்த உபயோகத்திற்கு வாங்கும்போது குறிப்பிடத்தக்க அளவிற்குத் தள்ளுபடிகளும் கிடைக்கும். அனைத்து அழுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் பிறந்த நாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது செய்து கொடுக்கப்படும்.

FedEx Express – பெடெக்ஸ் எக்ஸ்பிரஸ்

FedEx Express – பெடெக்ஸ் எக்ஸ்பிரஸ்

Purple Promise Award திட்டத்தின் கீழ் "மக்கள்-சேவை-லாபம்" என்ற கொள்கையோடு பணியாளர்களை அங்கீகரிப்பதை உறுதி செய்கிறது. ஒரு குழு உறுப்பினர் அவரது வாடிக்கையாளரது தேவைகளை நிறைவு செய்திடும் வகையிலான எதிர்பார்ப்புகளை அங்கீகரித்துப் பணி செய்வதன் மூலம் விருதுக்குத் தகுதியுள்ளவரை தேர்வு செய்கிறது. சில நேரங்களில் ஒரு தனி நபரின் முயற்சிகளுக்கு உடன் பணிபுரியும் பணியாளர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படும். அது போன்ற சமயங்களில், ஒரே பணிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட பணியாளருக்கும் விருதுகள் வழங்கப்படக்கூடும்.

Master Card – மாஸ்டர் கார்ட்

Master Card – மாஸ்டர் கார்ட்

"ஹார்ட்" விருது திட்டத்தின் கீழ் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் பணியாளர் உடன் பணியாற்றும் ஒருவரை அவரின் நிர்வாகத்தின் மதிப்புகளை உணர்ந்து செய்யும் சேவைகளுக்காகப் பரிந்துரைக்கலாம்..வெற்றி பெற்றவர்கள் ஒரு சான்றிதழும் 500 டாலர் ரொக்கமும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். நிறுவனம் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பெண்களின் தலைமை வட்டத்தை உருவாக்கி வர்த்தகத்தில் பெண்களின் நிலையை உயர்த்தித் தொழில்நுட்ப பிரிவில் மகளிரின் பதவி உயர்விற்கும் வழி வகுக்கிறது.

மேலும் சில வேலை செய்வதற்கேற்ற பணியிடங்கள்

மேலும் சில வேலை செய்வதற்கேற்ற பணியிடங்கள்

1. Biz-group
2. Dabo & Co.
3. Abu Dhabi Finance
4. Eton Institute
5. Advanced Warertek

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 best companies to work in UAE

15 best companies to work in UAE
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X