குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்த 5 பேரின் கதை..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது. அது என்றுமே மாறிக்கொண்டே இருக்கும். இன்று தாழ்ந்த நிலையில் இருப்பதற்காக நாம் துவண்டு விடக்கூடாது. நமக்கு என்று ஒரு காலம் வரும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

 

நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றுவதற்கான முயற்சியை மட்டும் நாம் என்றும் கைவிட்டு விடக்கூடாது.

உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நாம் இங்கே குடிசையிலுருந்து கோபுரத்திற்கு உயர்ந்த ஐந்து நபர்களைப் பற்றி விவரித்துள்ளோம்.

இவர்கள் தங்களுடைய இளம் வயதில் மிகவும் எளிமையான வேலையில் இருந்துள்ளனர். அவர்கள் மதுக்கடையில் மது பரிமாறுபவர்களாகவும், விற்பனையாளராகவும் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினர். அவர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக்ங்கோ..!

லாரி எலிசன், இணை நிறுவனர், ஆரக்கிள், ஒரு ப்ரோக்ராமர்

லாரி எலிசன், இணை நிறுவனர், ஆரக்கிள், ஒரு ப்ரோக்ராமர்

தன்னுடைய 22 ம் வயதில், பெர்க்லி, கலிபோர்னியாவிற்கு வந்து சேர்ந்த லாரி எலிசன், தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர், ஒரு சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆர்க்கிளை நிறுவினார் என்பது ஒரு ஆச்சரியமாகும். அதன் பின்னர் அவர் கணினி நிரலாக்கத்தை பற்றி தானே முயன்று கற்றுக் கொண்டார்.

அவர் இறுதியாக அம்தால்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய முதல் ஐபிஎம் இணக்க மெயின்ஃபிரேம் கணினியில் வேலை பார்க்கும் வரை, ஃப்யர்மேன்'ஸ் நிதியம், வெல்ஸ் பார்கோ, மற்றும் அம்பெக்ஸ் போன்ற இடங்களில் பல்வேறு தொழில்நுட்ப வேலைகளை செய்து வந்தார்.

 

ஜே.கே. ரோலிங், ஆசிரியர், செயலாளர்
 

ஜே.கே. ரோலிங், ஆசிரியர், செயலாளர்

ரவ்லிங் தன்னுடைய 25ம் வயது வரை சர்வதேச மன்னிப்பு சபை, லண்டன் அலுவலகத்தில் செயலாளராகப் பணியாற்றினார். 1990-ல் ஒரு நாள் அவருடைய தாமதமான நான்கு மணி நேர ரயில் பயணத்தில் அவருக்கு ஹாரி பாட்டர் பற்றிய முதல் யோசனை தோன்றியது. அன்று மாலையே புத்தகத்தை அவர் எழுத தொடங்கினாலும் அதை முடிக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டது.

ரவ்லிங் ஹாரி பாட்டர் பற்றி அதிகம் பகல்கனவு கண்டதால், தன்னுடைய வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய பணிநீக்க காசோலை, அடுத்த சில ஆண்டுகளுக்கு அவருடைய எழுத்தில் கவனம் செழுத்த அவருக்கு உதவியது.

இந்த ஆண்டுகளில் அவர் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார். விவாகரத்து நடந்தது மற்றும் அவருக்கு மனச்சோர்வு இருப்பதாக கண்டறியப்பட்டது. எனினும் அவர் ஒரு வழியாக 1995ம் ஆண்டில் தன்னுடைய புத்தகத்தை முடித்தார். இறுதியாக 1997 ஆம் ஆண்டு அவருடைய புத்தகம் வெளியிடப்பட்டது.

 

மார்க் கியூபா, உரிமையாளர், டாலஸ் மேவரிக்ஸ்,  பார்டெண்டர்

மார்க் கியூபா, உரிமையாளர், டாலஸ் மேவரிக்ஸ், பார்டெண்டர்

தன்னுடைய 25 ம் வயதில், கியூபா இந்தியானா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின் டல்லாஸ் சென்றார்.

அங்கு அவர் ஒரு மதுக்கடையில் மது பறிமாறுபவராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ஒரு கணினி மென்பொருள் விற்பனையாளர் பிரிவில் ஒரு விற்பனையாளராகப் பணியாற்றினார். அவருக்கு காலையில் கடை திறப்பதை விட ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக அவருடைய வேலையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியே அவரை தன்னுடைய முதல் வணிகமாகிய, மைக்ரோ சொல்யூஷன் என்கிற நிறுவனத்தை திறக்க தூண்டியது. "நான் டல்லாஸ் வந்தபோது, நான் மூன்று படுக்கையறை அபார்ட்மெண்ட்டில் ஆறு தோழர்களோடு தரையில் தூங்கப் போராடினேன்," என கியூபா தனது புத்தகமாகிய வர்த்தக விளையாட்டில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதில் எழுதியுள்ளார்.

 

லாயிட் பிளாங்க்ஃபீன், தலைமை நிர்வாக அதிகாரி, கோல்ட்மேன் சாக்ஸ், வழக்கறிஞர்

லாயிட் பிளாங்க்ஃபீன், தலைமை நிர்வாக அதிகாரி, கோல்ட்மேன் சாக்ஸ், வழக்கறிஞர்

பிளாங்க்ஃபீன் நிதித் துறையில் அடியெடுத்து வைக்க அனைவரும் பின்பற்றும் வழக்கமான பாதையில் செல்லவில்லை. அவர் உண்மையில் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

அவர், 24 வயதில் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தனது சட்டப் படிப்பை முடித்த பின்னர் டொனோவான் லிசர் என்கிற சட்ட நிறுவனத்தில் ஒரு இணையாளுனராக வேலை பார்த்தார். "நான் புரூக்ளினில் இருந்த போதும், உங்களைப் போன்றே நானும் இருந்தேன்," என பிளாங்பெயின் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அந்த நேரத்தில், அவர் ஒரு புகை பிடிப்பவராகவும் மற்றும் அவ்வப்போது சூதாடுபவராகவும் இருந்தார்.

அவர் சட்ட நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த போதிலும், தன்னுடைய 27-வது வயதில், ஜே ஆரோனுடன் சேர்ந்து, முதலீட்டு வங்கி தொடங்க முடிவு செய்தார்.

 

ஹோவர்ட் ஷூல்ட்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டார்பக்ஸ், ஜெராக்ஸ் விற்பனையாளர்

ஹோவர்ட் ஷூல்ட்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டார்பக்ஸ், ஜெராக்ஸ் விற்பனையாளர்

படிப்பை முடித்த பிறகு, ஷூல்ட்ஸ் ஒரு ஜெராக்ஸ் விற்பனையாளராகப் பணியாற்றினார். அங்கு அவர் பெற்ற வெற்றியானது அவருடைய 26ம் வயதில் ஹம்மர்பிளாஸ்ட் என்கிற ஒரு ஸ்வீடிஷ் காபி இயந்திரம் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்து தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு வறுமாறு அழைக்கும்ப் படி தூண்டியது.

அங்கு வேலை செய்யும் போது, அவர் சியாட்டிலில் முதல் முதலாக ஸ்டார்பக்ஸ் மையங்களை சந்தித்தார். அதன் காரணமாக தன்னுடைய 29ம் வயதில் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர சென்றார்.

 

வாசகர் விருப்பம்..!!

வாசகர் விருப்பம்..!!

இந்த பட்டியலில் நீங்கள் சேர்க்க விரும்பும் மனிதர்களை பற்றி கமென்ட் செய்யவும். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 inspiring entrepreneurs rags to rich story

5 inspiring entrepreneurs rags to rich story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X