ஹேக்கர்கள் கையில் சிக்கிய பெரிய தலைகள்.. அடுத்து யார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016ஆம் ஆண்டு டெக்னாலஜி துறைக்குச் சிறப்பான ஆண்டாக இருந்தாலும், டெக்னாலஜி துறையில் முக்கியமானவர்களின் கணக்குகள் ஹேக்கிங் செய்யப்பட்டு அதிர்ச்சி கொடுத்ததும் இந்த 2016ஆம் ஆண்டுத் தான்.

எனவே இந்த ஹேக்கிங், அரசியல் தலைவர்கள், பணக்காரர்களையும் தாண்டி தற்போது டெக்னாலஜி தொழிலதிபர்களுக்கு, தொழில்நுட்பங்கள் குறித்துச் சில பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது.

சாதாரணமானவர்கள் போல் இல்லாமல் தங்கள் அக்கவுண்டுகளைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்பதே அது.

இந்த ஆண்டு ஹேக்கிங் தாக்குதலுக்கு ஆளான மிகப்பெரிய டெக்னாலஜி தொழிலதிபர்கள் யார்..?

ஜாக் டார்சே (டிவிட்டர் சி.இ.ஓ)

ஜாக் டார்சே (டிவிட்டர் சி.இ.ஓ)

டிவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓவான ஜாக் டார்சே அவர்களுடைய டிவிட்டர் அக்கவுண்ட்டையே அவர்மைன் என்ற ஹேக்கர் குரூப், ஹேக்கிங் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

டிவிட்டர் சி.இ.ஓ அக்கவுண்ட்டே ஹேக் செய்யப்பட்டால் அதில் உள்ள பயனாளிகள் கதி என்ன ஆவது என்று பயமுறுத்தவே அவருடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது.

ஜாக் டார்சே அவர்களின் அக்கவுண்டை ஹேக் செய்த ஹேக்கர்கள், ஹேக் செய்த பின்னர்த் தங்களுடைய இணையத் தள முகவரியைப் பதிவு செய்து உங்கள் பாதுகாப்பை சோதனை செய்கிறோம்' என்று பதிவு செய்து தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தியது.

பின்னர் ஹேக்கர்கள் ஒரு மணி நேரம் கழித்துத் தங்களது டுவீட்டை அழித்துவிட்டனர்.

 

சுந்தர் பிச்சை, கூகுள் சி.இ.ஓ

சுந்தர் பிச்சை, கூகுள் சி.இ.ஓ

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவான் சுந்தர் பிச்சை அவர்களின் குவோரா அக்கவுண்டை மூன்று நபர்கள் கொண்ட ஹேக்கிங் குழு ஹேக் செய்து அதில் சில போஸ்ட்களைப் பதிவு செய்தது.

மேலும் சுந்தர் பிச்சையின் டிவிட்டர் அக்கவுண்டும் அதில் லிங்க் இருந்ததால் இரண்டுமே ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் டிவீட் காட்சி அளித்தது.

பின்னர்ச் சில மணி நேரங்களுக்குப் பின்னர்ச் சுந்தர் பிச்சையின் இரண்டு அக்கவுண்ட்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியது

 

மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக் சி.இ.ஓ

மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக் சி.இ.ஓ

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களையும் ஹேக்கர்கள் கடந்த ஆண்டு விட்டுவைக்கவில்லை.

அவர்மைன் ஹேக்கர்கள் குழு அவருடைய டிவிட்டர் மற்றும் பிண்ட்ரெஸ்ட் அக்கவுட்களை ஹேக் செய்தனர். ஃபேஸ்புக் நிறுவனரின் மேற்கண்ட இரண்டு அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டுகள் வலிமையாக இல்லாததின் காரணமாகவே ஹேக்கர்கள் ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் டிவிட்டர் அக்கவுண்டில் இருந்த மார்க் அவர்களின் போன் நம்பர்களையும் ஹேக்கர்கள் கண்டுபிடித்து அதில் பதிவு செய்தனர். பின்னர் ஒருசில மணி நேரங்களில் ஹேக்கர்கள் அதை அழித்துவிட்டு விலகினர்.

 

டேனியல் ஏக், ஸ்பாட்டிஃபை சி.இ.ஓ

டேனியல் ஏக், ஸ்பாட்டிஃபை சி.இ.ஓ

மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை அளிக்கும் ஸ்பாட்டிபை நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓவான டேனியல் ஏக் ஹேக்கர்களின் பிடியில் சிக்கிய அனுபவமும் தந்தது இந்த 2016 தான்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்மைன் ஹேக்கர்கள் இவருடைய டிவிட்டர் அக்கவுண்டை ஹேக்கிங் செய்து 'நாங்கள் தான் அவர்மைன். உங்களது டிவிட்டர் அக்கவுண்டின் பாதுகாப்பை டெஸ்ட் செய்வதற்காகவே ஹேக் செய்தோம்.

உங்கள் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்' என்று பதிவு செய்து சில மணி நேரம் கழித்து அவருடைய அக்கவுண்டை விடுவித்தது.

 

 

ஜிம்மி வேல்ஸ், விக்கிபீடியா இணை நிறுவனர்

ஜிம்மி வேல்ஸ், விக்கிபீடியா இணை நிறுவனர்

உலகத்துக்கே தகவல்களை அள்ளி கொடுக்கும் விக்கிபிடியாவின் இணை நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் அவர்களின் டிவிட்டர் அக்கவுண்டும் ஹேக்கர்களின் கையில் இருந்து தப்பவில்லை.

இவருடைய டிவிட்டர் அக்கவுண்ட்டை ஹேக் செய்த அவர்மைன் ஹேக்கர்கள், ஜிம்மி வேல்ஸ் மரணம் அடைந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் டுவீட்டை பதிவு செய்தது., மேலும் விக்கிபீடியாவில் உள்ளது அனைத்தும் பொய், அவர்மைனில் உள்ளது மட்டுமே மெய்' என்றும் பதிவு செய்தது.

பின்னர் ஜிம்மி வேல்ஸ், ஹேக்கர்களின் டுவீட்டுக்களை அழித்துவிட்டு, தான் நலமுடன் இருப்பதாகப் பதிவு செய்தார்.

 

அவர்மையின்

அவர்மையின்

OURMINE என்பது ஒரு ஹேக்கர் குழு. இவர்கள் இணையக் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல முக்கியத் தலைவர்களின் கணக்குகளை ஹேக் செய்து வருகின்றனர்.

இது உண்மையில் சட்டத்திற்கு எதிரான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினசரி அப்டேட்

தினசரி அப்டேட்

மேலும் இக்குழு செய்யும் வேலைகளைத் தொடர்ந்து இணையப் பக்கத்தில் அப்டேட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் Stanford University-இன் இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பை உடைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையைப் பாருங்கள்.

இணையதளம்

இணையதளம்

இதுவே அவர்களின் இணையதள முகவரி. https://ourmine.org/

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 tech CEOs whose accounts were hacked in 2016

5 tech CEOs whose accounts were hacked in 2016 - Tamil GoodReturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X