அடங்காத டிர்ம்ப்..புதிய குடியேற்ற ஆணைக்கும் பழையதற்கும் என்ன வித்தியாசம்..!

அடங்காத டிர்ம்ப்..புதிய குடியேற்ற ஆணைக்கும் பழையதற்கும் என்ன வித்தியாசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் குடியேற்ற ஆணைக்குக் கையெழுத்து இட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்துத் திங்கட்கிழமை புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார். பழைய ஆனையில் அகதிகள் மற்றும் அமெரிக்கா வருபவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் புதிய ஆணையில் சிலவற்றை மாற்றியுள்ளனர்.

 

இந்தக் குடியேற்ற ஆணை அமெரிக்காவைத் தீவிரவாத தாக்குதல், மற்றும் வெளிநாட்டில் இருந்து அகதிகளாக வருபவர்களிடம் இருந்து ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறிய டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம் நாடுகளைத் தடை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்கள் கருத்து

போராட்டக்காரர்கள் கருத்து

டொனால்டு டிரம்ப் முதலில் கையெழுத்திட்ட முதல் ஆணைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று முதல் ஆணையத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நடத்திய அமெரிக்கச் சென் கோரி புக்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் மீதான தடையில் மாற்றம்

இஸ்லாமியர்கள் மீதான தடையில் மாற்றம்

அகதிகள் விஷயத்தில் மதவாரியான சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற சலுகை முன்னர்க் கூறப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களைக் குறிவைத்து இந்த விதி உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சரி, முதல் ஆணைக்கும் திருத்தப்பட்ட ஆணைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று இங்குப் பார்ப்போம்.

 

பட்டியலில் ஈராக் இல்லை
 

பட்டியலில் ஈராக் இல்லை

புதிய ஆணையால் சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுளில் இருந்து வருபவர்களுக்கு 90 நாட்களுக்குத் தடை. இந்தப் பட்டியலில் ஏற்கனவே இருந்து ஈராக் மட்டும் அமெரிக்க அரசுடன் அந்நாட்டு அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில் நீக்கப்பட்டுள்ளது.

எனவே முன்பு 7 நாடுகளாக இருந்த பட்டியல் 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

நீதி மன்றம் ஏற்காத ஆணை

நீதி மன்றம் ஏற்காத ஆணை

புதிய திருத்தப்பட்ட குடியேற்ற ஆணைக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருந்து எந்தக் கருத்தும் இல்லை. புதிய ஆணையிலும் பல முரண்பாடுகள் இருந்து எதிர்ப்பு வழுக்கும் நிலையில் இந்த ஆணையும் தடை செய்ய வாய்ப்புள்ளது.

நேரம் அளிக்கப்பட்டுள்ளது

நேரம் அளிக்கப்பட்டுள்ளது

முதல் முறையாகக் குடியேற்ற ஆணையில் கையெழுத்துப் போடப்பட்ட உடன் விமான நிலையங்களில் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் இம்முறை மார்ச் 16-ம் தேதி காலை 12:01 வரை வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிரிய அகதிகள் மீதான தடையில் மாற்றம்

சிரிய அகதிகள் மீதான தடையில் மாற்றம்

சிரிய அகதிகளுக்குக் காலவரையற்ற என்று இருந்ததை மாற்றி 120 நட்களுக்குத் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய விசாக்கலுக்குத் தடையில்லை

பழைய விசாக்கலுக்குத் தடையில்லை

ஏற்கனவே அமெரிக்க வந்து செல்வதற்கான அனுமதி பெற்ற விசா உள்ளவர்களுக்குத் தடையில்லை.

முழுமையான தடை இல்லை

முழுமையான தடை இல்லை

மாநில மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஒருவருக்கு தேசிய நலன் கருதியும், பாதுகாப்புப் பிரச்சனைகளில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தடைக் காலத்தில் அனுமதி வழங்கும் சலுகை முறையும் உண்டு. இந்த முறை அனுமதி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஃபேக்ட் ஷீட் பொருத்து வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 differences between Trump's new travel ban and the old

7 differences between Trump's new travel ban and the old
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X