கிளவுட் சேவையில் கோடிகளை அள்ளும் மைக்ரோசாப்ட்.. அமேசான் தினறல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேகம் விடு தூது பாடிய நமது பண்டைத் தமிழ்க் கவிஞன் இந்த மேகக் கணிமை எனும் கிளவுட் தொழில்நுட்பத்துக்கு முன்னோட்டம் விட்டவனா? இல்லையா? என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இன்றைய உலகமும், வருங்கால உலகமும் இந்தக் கிளவுட் கம்ப்யுட்டிங் என்ற விந்தை உலகத்தை ஒதுக்கிவிட முடியாது என்பது காலத்தின் கட்டாயம்தான்.

கிளவுட் என்ற வார்த்தை சமீப நாட்களில் அலுவகங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் அதிகம் பேசப்படுகிற ஒரு வார்த்தையாகியிருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் கிளவுட் தளங்களில் விண்டோஸ் அல்லது மேக் ஓஎஸ் போன்ற இயங்குதளங்களில் ஒன்றும் ட்ராப்பாக்ஸ், கூகிள் கிளவுட் அல்லது வேறு ஏதாவது தளத்தில் ஒன்றும் என ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கின்றனர்.

சினர்ஜியின் கூற்றுப் படி அமேசான் நிறுவனம் சேவை உள்ள கட்டுமான (Iaas) பிரிவில், 45% அளவிற்குச் சந்தை பங்குகளைக் கொண்டதாக உள்ளது. இது, மைக்ரோசாப்ட், கூகிள் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் மூன்றையும் சேர்த்து பார்ப்பதை விடக் கூடுதலாகும்.

கிளவுட் கம்பியுட்டிங் என்றால் என்ன?

கிளவுட் கம்பியுட்டிங் என்றால் என்ன?

கிளவுட் கம்பியுட்டிங் என்பது டேட்டாக்களை ஒரு ஹார்ட் டிரைவில் சேமித்துப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இணையதளம் மூலமாக ஒரு செர்வரில் சேமித்துப் பயன்படுத்துவது ஆகும்.. நிறுவனங்களுக்கான கிளவுட் கம்பியுட்டிங் பல வகைப்படும். முதலாவது சேவையாக மென்பொருள் (Saas) வகை மூலம் பயனர்கள் சர்வரில் உள்ள மென்பொருளை அணுகிப் பயன்படுத்துதல் ஆகும்.

பெரும்பான்மையான மக்கள் இவ்வகையில் நாள்தோறும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 365 அல்லது கூகிள் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். மற்றொரு வகை, சேவையாக மென்பொருள் (PaaS) மூலம் தங்களின் பொருள்கள் மற்றும் சேவைகளை ஒரு தளத்தில் செயல்படுத்தித் தங்கள் வர்த்தகத்தை முன்னடத்திச் செல்லுதல் ஆகும். கடைசியாக, கட்டுமானமாக மென்பொருள் (Iaas) மூலம் கிளவுட் செர்வர்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை வழங்கி வாடிக்கையாளர்கள் விர்ச்சுவல் டேட்டா மையங்களை வைத்திருக்க உதவும்.

 

பணத்தைச் சேமிக்க உதவும்

பணத்தைச் சேமிக்க உதவும்

வழக்கமான பயனர்களுக்கு யுஎஸ்பி அல்லது கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஹார்ட் டிரைவ் களை பயன்படுத்த அவசியம் இல்லாமல் நிலையான இணைய வசதி உள்ள இடங்களில் புகைப்படங்கள், டாக்குமென்ட்கள் மற்றும் பிரசன்டேஷன்கள் ஆகியவற்றை அணுகிட இந்தக் கிளவுட் கம்பியுட்டிங் உதவிக்கரமாயிருக்கும். வர்த்தகர்களுக்கு இது பணத்தைச் சேமிக்க உதவும். PaaS மற்றும் IaaS பயன்பாடு அதிகப் பொருட்செலவில் பராமரிப்பு, இடம் மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்களுக்குத் தேவைக்கதிகமான வன்பொருள்களைப் பயன்படுத்தாமல் அவர்களின் வளர்ச்சியை அனுமதிக்கும்.

வேகமாக வளரும் நிறுவனங்களின் பயபாட்டில் கிளவுட்
 

வேகமாக வளரும் நிறுவனங்களின் பயபாட்டில் கிளவுட்

சமீப காலங்களில் பயன்பாட்டிற்கு வந்த இந்தக் கிளவுட் கம்பியுட்டிங்கைக் கொண்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளையும், வர்த்தகத்தையும் வெகு விரைவாக வளர்த்து வருகின்றனர். 2015 ல் இருந்த 70 பில்லியன் டாலரிலிருந்து 2019 ல் உலகளாவிய செலவினம் 141 பில்லியன் டாலராக அதிகரிக்கும். கிளவுட் செலவினங்களில் இரண்டில் மூன்று பங்கை SaaS ஆக்கிரமிக்கிறது. 2019ல் கிளவுட் சேவை பயன்படுத்தும் நிறுவனங்கள் கூடுதலாக 80 பில்லியன் டாலர்கள் செலவழிக்கும்.

தொழில்நுட்ப உலகின் ராட்சதர்கள்

தொழில்நுட்ப உலகின் ராட்சதர்கள்

பல நிறுவனங்கள் இந்தக் கிளவுட் சேவையில் ஈடுபட்டுச் சாதனை புரியத் துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு சில நிறுவனங்களே நன்கு விரிவாக்கம் பெற்று முன்னேறிச் செல்பவர்களாக உள்ளனர். தொழில்நுட்ப உலகின் ராட்சதர்களான மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் அல்பாபெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிறுவனங்களே முதலீட்டுக்கான ஆதாரங்களுடன் வாடிக்கையாளர் அமைப்புகளுடன் செயல்திறமிக்கக் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துபவையாக உள்ளன.

7. சேப் எஸ்ஈ (SAP SE - ADR)

7. சேப் எஸ்ஈ (SAP SE - ADR)

கிளவுட் வருமானம் : 1.02 பில்லியன்

இந்நிறுவனம் மென்பொருள் மற்றும் சேவை வழங்குநராக உள்ளது. நிறுவனத்தின் கிளவுட் வருவாய் ஆண்டிற்கு 34% உயர்ந்து 2017ல் 906 மில்லியன் யுரோ டாலர்களாக அதாவது 1.02 பில்லியன் டாலர்களாக வளர்ந்துள்ளது.. 2018லிருந்து 2020 க்குள் மென்பொருள் துறையை விடக் கிளவுட் மூலம் அதிக வருவாயை எட்டிட திட்டங்கள் வைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

6. ஆரக்கிள் கார்ப்ரேஷன்

6. ஆரக்கிள் கார்ப்ரேஷன்

கிளவுட் வருவாய் : 1.19 பில்லியன் டாலர்

பிப்ரவரி 28 ல் முடிவடைந்த 2017 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கு இந்நிறுவன கிளவுட் வருவாய் 1.19 பில்லியன் டாலராக இருந்தது. இந்தத் தொகையின் பெரும்பகுதியான 1.01 பில்லியன் டாலர் மென்பொருளுக்கான சேவை மூலமும், 178 மில்லியன் டாலர் உள்கட்டுமான சேவை பிரிவு மூலமாகவும் வரப்பெற்றது. ஆரக்கிள் நிறுவனம் தனது கிளவுட் மூலமான வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு Netsuite நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டது.

 

5. ஆல்பாபெட்

5. ஆல்பாபெட்

கிளவுட் வருவாய் : 1.8 பில்லியன் டாலர் (நான்காவது காலாண்டு)

இந்நிறுவனம் கிளவுட் வர்த்தகத்திற்கெனத் தனியாக டேட்டாக்களை வழங்குவதில்லை. மாறாக, அது தனது கூகிள் பகுதியில், தேடுதல், விளம்பரங்கள், வர்த்தகம், வரைபடங்கள், யூ டியூப் மற்றும் பல பிரிவுகளில் தரவுகளைக் கொண்டு Alphabetன் மிகப்பெரிய பிரிவாக உள்ளது. எனினும், சில பகுப்பாய்வாளர்கள் நிறுவனத்தின் கிளவுட் வருவாய்க்கான மதிப்பீடுகளைத் தருகின்றனர். பசிபிக் கிரேஸ்ட் செக்யூரிடீஸ் ன் கணிப்பின் படி 2016ம் ஆண்டு நான்காவது காலாண்டிற்கு இதன் கிளவுட் வருவாய் 1.8 பில்லியன் டாலர் ஆக இருந்தது.

 

4. சேல்ஸ்ஃபோர்ஸ்

4. சேல்ஸ்ஃபோர்ஸ்

கிளவுட் வருவாய் : 2.2 பில்லியன் டாலர்

இந்த நிறுவனம் கிளவுட் மூலமாக நிறுவனங்களுக்கான மென்பொருள்களை வழங்குகிறது. ஏப்ரல் 30ல் முடியும் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் கிளவுட் வர்த்தகம் : 2.2 பில்லியன் டாலர் ஆக இருந்தது. சந்தா கட்டணம் மற்றும் கூடுதல் சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாயோடு கூட வரைபட உருவாக்கம் மற்றும் திட்ட நிர்வாகம் போன்ற சில தொழில்முறை சேவைகள் மூலமும் வருவாய் ஈட்டுகிறது.

 

3. ஐபிஎம்

3. ஐபிஎம்

கிளவுட் வருவாய் : 3.5 பில்லியன் டாலர்

சர்வதேச வர்த்தக இயந்திரங்கள் கழகம் அறிவார்ந்த தீர்வுகளைக் கிளவுட் தளங்களிலே வழகுவதுடன் நிறுவனங்களுக்கான கிளவுட் திட்டத்தில் உலகளாவிய தலைமை பொறுப்பினையும் ஏற்று 14.6 பில்லியன் ஆண்டு வருவாயையும் ஈட்டித் தருகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 33% வருடாந்திர உயர்வுடன் கிளவுட் வர்த்தகத்தில் 3.50 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.

 

2. அமேசான்.காம்

2. அமேசான்.காம்

கிளவுட் வருவாய் : 3.66 பில்லியன் டாலர்

இந்நிறுவனத்தின் கிளவுட் வர்த்தகம் அமேசான் வலைத்தளச் சேவைகள் (AWS) பிரிவை பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறது. இது நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசாங்கங்களுக்குக் கோரிக்கையின் பேரில் கிளவுட் கம்பியுட்டிங் தளங்களை அமைத்துத் தருகிறது. நிறுவனத்தின் தொழில்நுட்பம் மெய்நிகர் கணினிகளை மெய்யான கணினிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த செயல்முறை மென்பொருள்களுக்கு ஈடாக உருவாக்குகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 43% ஆண்டு உயர்வாக 3.66 பில்லியன் டாலர் வருவாயை AWS பிரிவு ஈட்டியுள்ளது.

 

1. மைக்ரோசாப்ட் கார்ப்பொரேசன்

1. மைக்ரோசாப்ட் கார்ப்பொரேசன்

கிளவுட் வருவாய் : 6.76 பில்லியன் டாலர்

இதன் கிளவுட் வர்த்தகம் பல்வேறு பிரிவுகளாக விரிந்துள்ளது. அதன் மிகப்பெரிய பகுதி Intelligent Cloud Segment, பொது, தனியார் மற்றும் இருவருக்குமான Azure, Windows Server மற்றும் Microsoft SQL Server முதலிய சர்வர்களைக் கொண்டதாகும். 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதன் வருவாய் 6.76 பில்லியன் டாலராக இருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வர்த்தகச் செயல்பாடுகள் சேவையாக மென்பொருள் பிரிவின் கீழ் Office 365 மற்றும் நிறுவன ஆதார திட்டமிடல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாகம் ஆகியவற்றிற்கான Dynamics 365 என்ற மென்பொருள்களைக் கொண்டு இயங்குகின்றன.

 

அதிக வருவாய் ஈட்டும் கிளவுட் நிறுவனங்கள்

அதிக வருவாய் ஈட்டும் கிளவுட் நிறுவனங்கள்

இந்த நிறுவனங்கள்தான் 2017 ஆம் ஆண்டின் அதிக வருவாய் ஈட்டும் கிளவுட் வழங்கும் நிறுவனங்கள் ஆகும். ஏற்கனவே சொல்லியபடி இவற்றில் பெரும்பான்மையானவை நன்கு வளர்ச்சியடைந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களாக உள்ளன. அதிக ஆதாரங்களுடன் சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்றும் திறமை மற்றும் செழிப்பான தொழிற்துறையில் முதலீடு செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டவையாகவும் உள்ளன.

தவிர்க்க முடியாத மென்பொருள் தொழில்நுட்பம்

தவிர்க்க முடியாத மென்பொருள் தொழில்நுட்பம்

தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் மென்பொருள் தொழில்நுட்பம் இன்னும் எத்தனை விதமான பரிமாணங்களை அடைந்தாலும் அவற்றோடு நாமும் இணைந்து இயைந்து சென்றால்தான் வரக்கூடிய நவீன உலகில் நாம் நிலைத்திருக்க முடியும் என்பது பூரணமான உண்மைதானே.

புதிய 500 ரூபாய்

புதிய 500 ரூபாய்

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 500 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டும் செல்லுமாம்..!

புதிய சட்டம்

புதிய சட்டம்

கர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க புதிய சட்டம் வருகிறதாம்.. தமிழ்நாட்டில்..?! கர்நாடகாவில் ஐடி ஊழியர்களின் பணிநீக்கத்தை தடுக்க புதிய சட்டம் வருகிறதாம்.. தமிழ்நாட்டில்..?!

ஏர்டெல், வோடாபோன்

ஏர்டெல், வோடாபோன்

ஜியோ படுத்தும் பாட்டை பாருங்கள்.. ஏர்டெல், வோடாபோன் புதிய திட்டம்..! ஜியோ படுத்தும் பாட்டை பாருங்கள்.. ஏர்டெல், வோடாபோன் புதிய திட்டம்..!

உடனே செஞ்சிடுங்க..!

உடனே செஞ்சிடுங்க..!

மக்களே இதையெல்லாம் செய்தீர்களா..? இல்லாட்டி உடனே செஞ்சிடுங்க..! மக்களே இதையெல்லாம் செய்தீர்களா..? இல்லாட்டி உடனே செஞ்சிடுங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Largest Cloud Providers By Revenue in 2017

7 Largest Cloud Providers By Revenue in 2017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X