பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் 2016, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியுடன் தனது 47 வயதை அடைந்தார்.

இவர் 2008 ஆண்டு முதல் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெரில் சாண்ட்பெர்கிற்கு பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அளவிடுதல் மற்றும் அதனை உலகளவில் முன்னிலைப்படுத்துவது குறித்த பணிகள் அளிக்கப்பட்டு இருந்தது.

நாம் இப்போது ஷெரில் சாண்ட்பெர்க் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

ஷெரில் சாண்ட்பெர்க் குடும்பம்

ஷெரில் சாண்ட்பெர்க் குடும்பம்

அடெல் மற்றும் ஜோயல் சாண்ட்பெர்க் என்ற தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் ஷெரில் சாண்ட்பெர்க். இவருடைய அப்பா ஒரு கண் மருத்துவர் தாய் பிரஞ்சு ஆசிரியர்.

படிப்பு

படிப்பு

மியாமி மூத்த கடற்கரை உயர்நிலைப் பள்ளியில் தனதைப் படிப்பை துவங்கிய ஷெரில் சாண்ட்பெர்க், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஏ பொருளாதார பட்டத்தை பெற்றார். மேலும் 1995 ஆம் வருடம் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள்

பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள்

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் போது ‘பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள்' என்ற குழுவைத் துவங்கினார்.

பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெண்கள் அதிகம் வர வேண்டும் என்பதற்காகவே இந்தக் குழுவை ஷெரில் சாண்ட்பெர்க் உருவாக்கினார்.

 

மெக்கென்சி, உலக வங்கி மற்றும் கூகுள்

மெக்கென்சி, உலக வங்கி மற்றும் கூகுள்

ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பு மெக்கென்சி, உலக வங்கி மற்றும் கூகுள் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

டெரஷரி லாரி சம்மர்ஸ் அமெரிக்கா செயலாளர் தலைமை அலுவலராகப் பணியாற்றினார். பின்னர், 2001 இல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

 

கூகுள் நிறுவனத்தின் அறப்பணிகள்

கூகுள் நிறுவனத்தின் அறப்பணிகள்

கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பொருட்கள் மற்றும் கூகுள் புத்தக தேடலின் விற்பனை பிரிவுகளை கவனித்துக் கொண்டு வரும் போது கூகுள்.ஆர்க்(google.org) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் துவங்கினார்.

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநர்

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநர்

2012 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக ஷெரில் சாண்ட்பெர்க் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த விற்பனையாகும் புத்தகம்

சிறந்த விற்பனையாகும் புத்தகம்

‘லீன் இன்: வுமன், வொர்க் அண்ட் தி வில் டு லீட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இன்று வரை தலைமை பொறுப்பில் உள்ள சில பெண்களைப் பற்றி இவர் எழுதியிருந்த இந்தப் புத்தகம் சிறந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

 

டைம் பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணிகளில் ஒருவர்

டைம் பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணிகளில் ஒருவர்

2013 ஆண்டின் டைம் பத்திரிக்கையின் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணிகளில் ஒருவராக இடம் பெற்றார்.

அதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு உலகின் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராக ‘டைம் 100'-இல் இடம் பெற்றார்.

அதுமட்டும் இல்லாமல் ஃபார்ட்யூன் இதழில் பல முறை உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

9 things you might not know about Sheryl Sandberg

9 things you might not know about Sheryl Sandberg
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X