9 வருடத்தில் 100 கோடி ஐபோன் விற்பனை: ஆப்பிள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூப்பர்டினோ: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், மொபைல் மற்றும் ஸமார்ட்போன் சந்தையைப் புரட்டிபோட்ட ஐபோன்-ஐ அறிமுகம் செய்து 9 வருடம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் 1 கோடி ஐபோன்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

 

கூப்பர்டினோ பகுதியில் இருக்கும் ஆப்பிள் தலைமையகத்தில் நடந்த ஊழியர்கள் கூடத்தில் ஆப்பிள் சீஇஓ டிம் குக் 100 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்தார்.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுக நாள் முதல் தனிப்பட்ட கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்க்கிறது. இதற்கு முழுமையான காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் எளிமையான வடிவம் மற்றும் தொழில்நுட்பம் தான்.

டிம் குக்

டிம் குக்

இன்றைய மக்களின் தினசரி வாழ்வில் ஐபோன் என்பது ஒரு அங்கமாக மாறிய நிலையில் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் 100 கோடிவது ஐபோனை விற்பனை செய்துள்ளது. இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என டிம் குக் தெரிவித்தார்.

ஜூன் 29,2007
 

ஜூன் 29,2007

அமெரிக்காவில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஜூன் 29, 2007ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்ட 9 வருடங்களில் 100 கோடி மொபைல் விற்பனை செய்தது ஆப்பிள் நிறுவனம் மட்டும். அதுவும் தனது அனைத்து அறிமுகங்களும் ஆடம்பர சந்தைக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் சந்தை

உலகச் சந்தை

அமெரிக்காவிற்குப் பின் நவம்பர் 2007ஆம் ஆண்டுப் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அயர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் ஐபோன் விலை

முதல் ஐபோன் விலை

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோனின் குறைந்தபட்ச விலை 499 டாலர்

புதிய ஐபோன்

புதிய ஐபோன்

2017ஆம் ஆண்டு ஐபோனின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் ஐபோன் டிசைனில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக ஆப்பிள் சீஇஓ டிம் குக் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

At an employee meeting in Cupertino this morning, CEO Tim Cook announced that Apple recently sold the billionth iPhone.
Story first published: Thursday, July 28, 2016, 13:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X