ரியல் எஸ்டேட் துறையில் இந்தியாவும் சீனாவும் தலைகீழாக உள்ளது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங்: இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் சீனாவில் தலைகீழாக உள்ளது. உலகிலேயே இரண்டாவது மிக்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவில் வீட்டு மனைகளின் விலை 8 மாதங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலைக்குச் சீனாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சி மிக முக்கியக் காரணமாகும்.

இந்த விலை நிலைகள் மாறச் சில மாதங்களாகும் எனச் சர்வதேச சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டது சீனாவின் உள்கட்டமைப்பின் வளர்ச்சி குறைபாடு தான்.

 25 வருட பாதிப்பு

25 வருட பாதிப்பு

சீனாவின் ரியல் எஸ்டேட் துறையின் பாதிப்பு இந்நாட்டின் மிகப்பெரிய பாதிப்பை அளித்து வருகிறது. கடந்த 5 மாதத்தில் 3 முறை வட்டி வகிதத்தைக் குறைத்தும் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி 25 வருட வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

ஊக்கம்

ஊக்கம்

ரியல் எஸ்டேட் துறை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டுச் சட்டம் மற்றும் நிதித்துறை வல்லுனர்கள் மேலும் சில சதவீத வட்டிக் குறைப்பு மற்றும் பல முக்கியத் திட்டங்களை அறிவிக்க உள்ளனர்.

6.1 சதவீத சரிவு

6.1 சதவீத சரிவு

கடந்த வருடத்தை ஒப்பிடும்போது சீனாவில் வீட்டு மனைகளின் விலை நிலை ஏப்ரல் மாதத்தில் சுமார் 6.1 சதவீதம் வரை குறைந்துள்ளது. மார்ச் மாதமும் இதே போன்ற நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

சீனாவில் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கியப் பகுதிகளில் மட்டும் வீட்டு மனைகளின் விலை உயர்ந்துள்ளது. இதில் ஷாங்காய் பகுதியில் 12 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக மார்ச் மாதம் விலை நிலை உயர்ந்து காணப்படுகிறது.

சிறிய நகரங்களில் சுமார் 60 சதவீதம் அளவில் விலை குறைந்துள்ளது.

 

ஜிடிபி

ஜிடிபி

இந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை மட்டும் மொத்த ஜிடிபியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China home prices fall 6.1% year-on-year in April

China's new home prices fell for the eighth consecutive month in April from a year earlier but were flat from March, adding to hopes that a property downturn which is weighing heavily on the economy is beginning to bottom out.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X