எச்-1பி விசா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க வருபவர்களைக் குறைக்கப் புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் எச்-1பி விசா பயன்படுத்தி அமெரிக்க வருபவர்களைக் குறைக்கப் புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளார். இந்தப் புதிய விதிகளினால் இந்திய தொழில் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்றவை கடும் பதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது.

எச்-1பி விசா என்றால் அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் மூன்று வருடத்திற்குப் பணிபுரிய வழங்கப்படும் விசா ஆகும். எச்-1பி விசா முதன் முதலாக 1990-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

எச்-1பி விசா பிறப்பு

எச்-1பி விசா பிறப்பு

எச்-1பி விசாவிற்கான சட்டம் 1990-ம் ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1991 முதல் எச்-1பி விசா அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஹ் எச் புஷ் அவர்களால் அதிகாரப் பூர்வமான குடியேற்றத்தை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது இருந்த விதிகளின் படி 365 ரூபாய்ச் செலுத்தினால் ஆறு வருடத்திற்கு மூன்று வருட நீட்டிப்புடன் எச்-1பி விசா வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் 65,000 டாலர் சம்பள இருக்க வேண்டும். இப்போது வரை இது தான் குறைந்தபட்ச சம்பளமாக உள்ளது.

 

அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம்

அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம்

1998-ம் ஆண்டு அமெரிக்காவின் போட்டித்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் பில் கிலிண்டன் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. அப்போது புதிய எச்-1பி விசா பெற 65,000 டாலரில் இருந்து 115,000 டாலராகச் சம்பளம் இருக்க வேண்டும் என்ற விதி 1999 மற்றும் 2000 நிதி ஆண்டிற்கு அமல்படுத்தப்பட்டது.

மேலும் 365 டாலராக இருந்த அடிப்படை கட்டணம் 500 டாலராக உயர்த்தப்பட்டது.

 

சட்டம் 21

சட்டம் 21

அமெரிக்காவின் போட்டுத்தன்மை மற்றும் பணியாளர் மேம்பாடு சட்டம் 21 எச்-1பி விசா குறித்த விதிகளில் 2000 ஆண்டு மேலும் விதிகளைத் திருத்தி அமைத்தது.

சட்டம் 21-ன் படி எச்-1பி வசா மூலம் வேலை பார்க்கும் ஊழியர்கள் எளிதாக நிறுவனங்களில் இருந்து மாற உதவியது. அதுமட்டும் இல்லாமல் 2001, 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் 195,000 டாலர்கள் வரை சம்பளம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

 

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுக் சட்டம்

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுக் சட்டம்

2005-ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு வந்த போது மீண்டும் 65,000 டாலர்களாகச் சம்பளம் குறைக்கப்பட்டது. மேலும் முதுகலைப் பட்டம் உள்ளவர்களுக்கு 20,000 எச்-1பி விசாக்கள் வரை 500 பெறலாம் என்றும், 500 டாலர்கள் வரை மோசடி எதிர்ப்பு கட்டணமாகவும் விதிக்கப்பட்டது.

எச்-1பி விசா சீர்திருத்த சட்டம்

எச்-1பி விசா சீர்திருத்த சட்டம்

2013-ம் ஆண்டுப் பராக் ஒபாமா எச்-1பி விசாவை முறைகேடாகப் பயன்படுத்துவதைக் குறைக்கச் சீர்திருத்த சட்டம் ஒன்றை அமல்படுத்தியது.

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுச் சட்டம்

ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டுச் சட்டம்

2016-ம் ஆண்டு அமெரிக்கா எச்-1பி விசா கட்டணத்தை 50 பேருக்கும் அதிகமாக வெளிநாட்டு ஊழியர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் போது 4,000 டாலர்களாக உயர்த்தி அறிவித்தது.

2017-ம் ஆண்டு

2017-ம் ஆண்டு

அதிபர் டொனால்டு டிரம் பெரிய குடியேற்றச் சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, எச்-1பி விசா நிர்வாக உத்தரவுகளைத் தயார் செய்து வருகின்றார். இது விரைவில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க:

இந்தியர்களின் அமெரிக்க கனவை எச்1பி விசா கெடுத்துவிடும் என்பதற்கான காரணம் தெரியுமா..?இந்தியர்களின் அமெரிக்க கனவை எச்1பி விசா கெடுத்துவிடும் என்பதற்கான காரணம் தெரியுமா..?

இந்தியர்களின் அமெரிக்க கனவை எச்1பி விசா கெடுத்துவிடும் என்பதற்கான காரணம் தெரியுமா..?இந்தியர்களின் அமெரிக்க கனவை எச்1பி விசா கெடுத்துவிடும் என்பதற்கான காரணம் தெரியுமா..?

 

புதிய எச்-1பி மசோதாவால் அதிகம் பாதிக்கப்படபோவது 'இன்போசிஸ்'..!புதிய எச்-1பி மசோதாவால் அதிகம் பாதிக்கப்படபோவது 'இன்போசிஸ்'..!

 

எச்1பி விசா தாக்கத்தால் ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய் இழந்த இந்திய ஐடி நிறுவனங்கள்..!எச்1பி விசா தாக்கத்தால் ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய் இழந்த இந்திய ஐடி நிறுவனங்கள்..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Everything you wanted to know about H-1B Visa

Everything you wanted to know about H-1B Visa
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X