ரெண்டே வருடத்தில் ரூ.9,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய கூகிள் முன்னாள் ஊழியர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவைச் சேர்ந்த கோலின் ஹூகன் உலகளாவிய ஈகாமர்ஸ் துறையின் வர்த்தக முறையை மாற்றியமைக்கும் அளவிற்குப் புதிய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளார்.

 

இவர் துவங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் வெறும் 21 மாதங்களில் சந்தையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுத் தற்போது 9,642 கோடி ரூபாய் மதிப்பிலான வெற்றிக்கோட்டையாக மாறியுள்ளது.

கூகிள்

கூகிள்

பல லட்ச கணக்கான சீன மக்களைப் போலவே கோலினும் கல்லூரி படிப்பை முடித்த உடன் சிலிக்கான் வேலியில் தனது பணியைத் துவங்கினார்.

 

 

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

கூகிள் நிறுவனத்தில் பணியாற்றிய போது அதன் ஈகாமர்ஸ் அல்காரிதம்-இல் முக்கியப் பணியாற்றிய அனுபவம் கோலின் ஹூகனுக்குக் கிடைத்தது.

இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்பிய கோலின் Pinduoduo என்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் துவங்கினார்.

 

புரட்சி

புரட்சி

PDD என்று சீனாவில் அழைக்கப்படும் Pinduoduo நிறுவனத்தைத் துவக்கும்போது ஈகாமர்ஸ் சந்தையை இது புரட்டி போடும் என்று யாரும் நினைக்கவில்லை.

முதலீடும் வளர்ச்சியும்
 

முதலீடும் வளர்ச்சியும்

இந்த நிறுவனத்தைத் துவங்கிய போது 100 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்த PDD, 21 மாதங்களில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் யுவான்(1.5 பில்லியன் டாலர்). இது இந்த ரூபாய் மதிப்பில் 9,642 கோடி ரூபாய்.

அப்படி இந்த நிறுவனத்தில் என்ன தான் இருக்கிறது..?

 

சிறப்பான ஐடியா..

சிறப்பான ஐடியா..

பொதுவாக மக்கள் தங்களது தேவையை உணர்ந்த பின்பே ஈகாமர்ஸ் தளர்த்திற்கு வருவார்கள்.

உதாரணமாக இப்போது ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் ஈகாமர்ஸ் தளத்திற்குப் போவோம். அப்போது நம்முடைய தேவையான சைக்கிள்-ஐ அமேசான் அல்லது அலிபாபா நிறுவனத்தில் தேடுவோம்.

இந்தத் தேடல் மற்றும் வாங்கும் அனுபவத்தை ஒரு மாலில் நீங்கள் வாங்குவதே போன்று அளிக்கும் சேவையையே Pinduoduo அளிக்கிறது. எப்படி..?

 

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

நீங்க தேர்ந்தெடுத்த சைக்கிளைச் சமுக வலைத்தளத்தின் வாயிலாக உங்கள் நண்பர்களிடம் ஆலோசனை செய்து வாங்க Pinduoduo ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

மேலும் இதில் ஆலோசனை அளிக்கும் நண்பரும் சேர்ந்து அதே பொருளை வாங்கினால் பொருளுக்கான விலையில் கூடுதல் சலுகையும் அளிக்கிறது Pinduoduo.

 

லாபம்

லாபம்

இது வாடிக்கையாளர்களுக்குச் சரி, பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்குச் சரி மிகப்பெரிய அளவில் நன்மை அளிக்கும். இதுவே இந்நிறுவனத்தின் வெற்றி.

பேஸ்புக், டிவிட்டர்

பேஸ்புக், டிவிட்டர்

சில காலம் முன்பு பேஸ்புக், டிவிட்டர் தளங்கள் தங்களது Feeds-இல் BUY பட்டனை அறிமுகம் செய்து இதன் மூலம் ஈகாமர்ஸ் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை நேரடியாக ஈர்க்க உதவி செய்தது.

ஆனால் இது வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு மாறாக உள்ள நிலையில், இதனைப் பேஸ்புக், டிவிட்டர் ஆகிய இரண்டு நிறுவனமே தனது தளத்தில் இருந்து நீக்கியது.

 

கோலின் ஹூகன்

கோலின் ஹூகன்

இதனை அடிப்படையாக வைத்தே கோலின் ஹூகன் தனது Pinduoduo நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவிலும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இதேபோன்ற சேவையை அறிமுகம் செய்து தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ex-Google Engineer Builds $1.5 Billion Startup in 21 Months

Ex-Google Engineer Builds $1.5 Billion Startup in 21 Months - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X