சீன பொருட்கள் தான் "போலி" என்றால் "சீன வங்கியே" போலியாக உள்ளது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான்ஜிங்/சீனா: உலகிலேயே இரண்டாவது வல்லரசு நாடாக விளங்கும் சீனாவில் ஒரு மோசடி கும்பல் போலியான வங்கி அமைத்து 200 பேரின் பணத்தை கொள்ளை அடித்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் நான்ஜிங் நகரத்தின் கிழக்கும் பகுதியில், இக்கும்பல் உண்மையான வங்கிகளை போலவே சீருடையுடன் போலியான கிளர்க், மற்றும் பிற அதிகாரிகளுடன் மிகப்பெரிய கட்டடத்தில் செயல்பட்டு வந்த இவ்வங்கி 32 மில்லியன் டாலர் பணத்தை இப்பகுதி மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளது.

32 மில்லியன் டாலர்

32 மில்லியன் டாலர்

இவ்வங்கியில் இருந்த 32 மில்லியன் டாலர் வைப்பு தொகையில் ஒரு தனிநபரின் வைப்பு தொகை மட்டும் 1.9 மில்லியன் டாலராகும். மேலும் இவ்வங்கி மக்களுக்கு உறுதி அளித்தப்படி வட்டித்தொகை சரியான நேரத்தில் அளிக்காத காரணத்தினால் மக்கள் தங்களின் பணத்தை பிற வங்கிகளில் முதலீடு செய்ய இந்த வங்கியை அனுகியுள்ளனர்.

வங்கியின் மறுப்பு

வங்கியின் மறுப்பு

பணத்தை பிற வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வங்கி நிர்வாகம் மறுத்து வந்தது இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசரித்தபோது தான் விபரம் வெளி வந்ததது.

சரியான உரிமம் இல்லை

சரியான உரிமம் இல்லை

இவ்வங்கியின் தலைவருக்கு வங்கி நடத்துவதற்கான உரிமம் இன்னும் பெறவில்லை என்றும், மேலும் தற்போது நடத்திவரும் வரத்தம் அனைத்தும் கிராமப்புற கூட்டுறவு வங்கி மூலம் நடத்தி வருவதாகவும் வங்கி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனவும்.. போலியும்...

சீனவும்.. போலியும்...

மேலும் போலீஸ் அதிகாரிகள் இப்போலி வங்கியின் 5 பணியாளர்களை கைது செய்துள்ளனர். பொதுவாக சீன தயாரிப்பில் மக்களுக்கு அதிகளவிலான நம்பிக்கை இல்லை, இருந்து போதிலும் இந்த போலி வங்கியின் செய்தி மக்கள்களை வியப்பில் ஆள்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fake Chinese Bank Loots $32 Million: BBC

Conmen deceived around 200 people into handing over their money by setting up a fake bank near the eastern city of Nanjing, according to BBC report.
Story first published: Wednesday, January 28, 2015, 10:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X