எச்1பி விசா மீதான 'தடை' விரைவில் அமல்படுத்தப்படும்: டிரம்ப் தேர்வுசெய்த அட்டர்னி ஜெனரல் அறிவிப்பு..!

சில வருடங்கள் முன்பு செஷன்ஸ் மற்றும் கிராஸ்லீ இருவரும் இணைந்து H1B விசா மீது கொண்டு வந்த சட்டங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை அதிரவைத்தது. தற்போது இச்சட்டங்கள் விரைவாக அமல்படுத்த உள்ளதாக டிரம்ப்.....

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய ஐடி தொழில் நிபுணர்கள் பெரிதும் பயன்படுத்தும் எச்1பி விசா மோசடிகளுக்கு எதிரான தடை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்த அட்டர்னல் ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.

நாம் திறந்த உலகத்தில் உள்ளோம் என்று நினைப்பது தவறானது, அமெரிக்க மக்களுக்கு சொந்தமான வேலைவாய்ப்பை பிடுங்கி வேறு நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, குறைந்த ஊதியத்தில் அளிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் செனேட்டர் ஜெஃப் செஷன்ஸ், செனட் நீதித்துறைக் குழு உறுப்பினர்களுடன் கூறியுள்ளார்.

எல்லை உண்டு

எல்லை உண்டு

நமக்கும் ஒரு எல்லை உண்டு. நமது நாட்டின் குடிமக்களின் மீது நமக்குப் பொறுப்பு வேண்டும் என்றும் இதற்காக உங்களுடன் இணைந்து செயலாற்ற நான் தயார் என்றும் செனட் நீதித்துறைக் குழுவின் தலைவர் செனட்டர் சார்லஸ் கிராஸ்லீயின் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது செஷன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்பு ஏற்பட்ட பிரச்சனைக்கும் இவர்கள் தான் காரணம்

முன்பு ஏற்பட்ட பிரச்சனைக்கும் இவர்கள் தான் காரணம்

சில வருடங்கள் முன்பு செஷன்ஸ் மற்றும் கிராஸ்லீ இருவரும் இணைந்து H-1B விசா மீது கொண்டு சட்டங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை மோசமாகப் பாதித்தது.

பாகுபாடு விதிகள்
 

பாகுபாடு விதிகள்

நீதித்துறையில் உள்ள குடியேற்றம் தொடர்பான நியாயமற்ற வேலைவாய்ப்புப் பயிற்சிகள் சிறப்பு ஆலோசனை அலுவலகம் அமெரிக்கச் செனேட் உடனான செஷன்சின் உரையாடல் பற்றி உறுதி அளித்துள்ளது.

இந்த அலுவலகம் குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டம் விரோத பாகுபாடு விதிகளை அமல்படுத்தும்.

 

விசா மோசடி கவனிப்பு

விசா மோசடி கவனிப்பு

அயல் நாட்டில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது எச்1பி மற்றும் எல்1 விசா போன்றவற்றைப் மோசடி இன்றிக் கவனித்துக்கொள்ளவே குடியேற்றம் தொடர்பான நியாயமற்ற வேலைவாய்ப்புப் பயிற்சிகள் சிறப்பு ஆலோசனை அலுவலகம் வடிவமைக்கப்பட்டது.

இந்த அலுவலகம் அமெரிக்கர்கள் அல்லாதவர்களைப் பணிக்கு அமர்த்தும் போது இதற்கு முன்பு அந்தப் பணியில் இருந்தது அமெரிக்கரா அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார், அந்த வேலைக்கு என்ன பாகுபாடு என்பதை உறுதி செய்யும்.

கிராஸ்லீ கருத்து

கிராஸ்லீ கருத்து

பல அமெரிக்கர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எச்-1பி விசாம் மூலம் குறைவான சம்பளத்தில் வெளிநாட்டவர் அந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகும் இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள தேசிய அடிப்படையிலான பாகுபாடு என்றும் கிராஸ்லீ கூறினார்.

ஒபாமா நிர்வாகத்தின் தோல்வி

ஒபாமா நிர்வாகத்தின் தோல்வி

ஒபாமா தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பதில் தோல்வியுற்றது.

இந்த விசா நிகழ்வுகள் குறித்த விசாரணையை ஏற்க நீங்கள் தாயாரா? என்று ஒபாவின் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.

எச்-1பி விசாவிற்கு முன்பு இருந்த விதிமுறை

எச்-1பி விசாவிற்கு முன்பு இருந்த விதிமுறை

அதிகத் திறமையான வேலை வாய்ப்பை அயல் நாட்டினர் ஒருவருக்கு அளிக்கும் முன்பு தகுதியான அமெரிக்க ஊழியர்களைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அப்படி ஏதும் முடியாத பட்சத்தில் தான் எச்-1பி விசா பயன்படுத்திப் பிறரை அனுமதிக்க வேண்டும் என்று செஷன்ஸ், கிராஸ்லே மற்றும் செனட்டர் டிக் டர்பின் ஆகியோர் இணைந்து மசோதா ஒன்றை முன்பு உருவாக்கி இருந்தனர்.

ஏஎப்எல் நிறுவன சிஐஓ கருத்து

ஏஎப்எல் நிறுவன சிஐஓ கருத்து

அமெரிக்க ஊழியர்களுக்காக நிறையப் பாதுகாப்பை அளிக்க முயற்சித்து வருகின்றோம் என்றும், வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் முன்பு இங்கு உள்ள மக்களைப் பணிக்கு அமர்த்தச் சிறப்பான முயற்சிகளை எடுப்பதாகவும் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களை இறக்க நாங்கள் இதற்காக அரசுடன் இணைந்து ஊழியர்களின் விவரங்களைத் தணிக்கை செய்யவும் அனுமதித்துள்ளதாக ஏஎப்எல் நிறுவன சிஐஓ தெரிவித்தார்.

ஒபாமாவின் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட கோரிக்கை

ஒபாமாவின் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட கோரிக்கை

ஒபாமாவின் நிர்வாகத்திற்குத் தெற்கு கலிபோர்னியா எடிசன், டிஸ்னி மற்றும் ஐபிஎம் நிறுவனங்களில் அமெரிக்கர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு எச்-பி1 விசா மூலம் ஆட்கள் எடுக்கப்பட்ட விவரங்களை அளித்து விசாரணை நடத்தக் கோரிக்கை வைத்ததாகவும் கிராஸ்லீ கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1B Visa Curbs Coming Soon, Promises Trump's Pick For Attorney General

Before once Mr Sessions and Mr Grassley worked together to bring legislations on H1B visas which badly hited Indian IT companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X