ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ திடீர் பதவி விலகல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ: உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனரான டாக்நோபு இட்டோ நிறுவனத்தின் விற்பனை அளவு குறைந்ததாலும், தரமற்ற ஏர்பேக் பிரச்சனைகளால் நிறுவன பதவிகளில் இருந்து விலகுகிறார்.

ஏர் பேக் பிரச்சனை

ஏர் பேக் பிரச்சனை

இந்நிறுவனத்தின் 6.2 மில்லியன் ஹோண்டா வாகனங்களில் பொருத்தப்பட்ட டகாடா நிறுவனத்தின் தரமற்ற ஏர்பேக்-களை மாற்ற இந்நிறுவனம் அனைத்து வாகனங்களையும் நிறுவனத்திற்கு மீண்டும் கொண்டு வர அழைப்பு விடுத்துள்ளது. இது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இக்குறைப்பாட்டால் விபத்தில் 6 பேர் மரணம், 64 பேர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது.

விற்பனையில் சரிவு

விற்பனையில் சரிவு

மேலும் கடந்த சில வருடங்களாக இந்நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது இதனால் இந்நிறுவனத்தின் வருவாய் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

பதவி விலகல்

பதவி விலகல்

இப்பிரச்சனைகளால் இந்நிறுவனத்தின் அனைத்து பதவிகளில் இருந்தும் டாகநோபு இட்டோ விலகுவதாக தெரிவித்தார்.

டாகநோபு இட்டோ

டாகநோபு இட்டோ

இவர் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனராக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பதவியில் உள்ளார். 1978ஆம் ஆண்டு ஒரு சாதாரண இன்ஜினியராக நிறுவனத்தில் சேர்ந்த இவர் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறுவனத்தை விட்டு விலகுகிறார்.

வருவாய்

வருவாய்

2014ஆம் ஆண்டில் சந்தை கணிப்புகளுக்கும் குறைவான அளவை வருவாயை பெற்றதுள்ளது ஹோண்டா நிறுவனம். இந்நிறுவனத்தின் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சந்தைகள் இந்நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 4.8 பில்லியன் டாலராக இருக்கும் என கணித்திருந்தது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 4.6 பில்லியன் டாலர் மட்டுமே வருவாயாக பெற்றது.

வழக்குகள்

வழக்குகள்

மேலும் இதுக்குறித்து அமெரிக்காவில் பல வாடிக்கையாளர்கள் ஹோண்டா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு அமெரிக்க நீதிமன்றம் 70 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Honda CEO to step down amid air bag crisis, sales drop

Honda Motor Co hurt by falling sales and embroiled in a crisis over defective air bags is replacing its CEO.
Story first published: Tuesday, February 24, 2015, 12:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X