டொனால்டு டிரம்ப் சேட்டை ஆரம்பம்.. பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் புதிய அணுகுமுறை...!

டொனால்டு டிரம்ப் அரசு இனி பாகிஸ்தானை எப்படி அணுக போகிறது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப்-இன் சட்டதிட்டங்கள், கண்ணோட்டங்கள் அனைத்தும் உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது.

 

அவை அனைத்திற்கும் மேலாக டிரம்ப் அரசு, இனி பாகிஸ்தானை எப்படி அணுகப்போகிறது என்பதற்கான 10 பரிந்துரைகளை ஹெரிடேஜ் நெட்வொர்க் வெளியிட்டுள்ளது.

நட்பு நாடு..

நட்பு நாடு..

அமெரிக்கா இனி பாகிஸ்தான் நாட்டை நட்புநாடாகப் பார்ப்பதை தவிர்க வேண்டும். பாகிஸ்தான் முறைமுகமாக ஆப்கான் தாலிபான் தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றனர். இந்தத் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கொன்றுவிட்டனர்.

இதன் மூலம் இனியும் பழைய அரசைப் போல் பாகிஸ்தான் நாட்டுடன் நட்பு பாராட்டுவது சரியாக இருக்காது. இதன் மூலம் பல பிரச்சனைகள் வரும், அதனை முழுமையாகத் தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

முதலீடும்.. வெற்றியும்..

முதலீடும்.. வெற்றியும்..

ஆனால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் நாட்டுடன் மற்றொரு வகையில் இணைய அமெரிக்கா விரும்புகிறது.

இந்த விருப்பத்தின் வாயிலாக இரு நாடுகள் மத்தியிலும் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்க அரசு விரும்புகிறது.

 

மனிதாபிமான
 

மனிதாபிமான

தற்போது அமெரிக்கா பாகிஸ்தான் நாட்டின் மக்கள் நல அமைப்புகளுடன் இணைந்து மனிதாபம் மற்றும் சமுக அக்கறை கொண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா மற்றும் வளைகுடா நாடுகள்

சீனா மற்றும் வளைகுடா நாடுகள்

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் தீவிரவாதம், தீவிரவாதிகள் குறித்து அமெரிக்கத் தனது கருத்துக்களைப் பிற நாடுகளுடன் ஏற்கனவே பகிர்ந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளுடன் இணைந்து நெறிமுறைகளை வகுக்க முடியும்.

தொடர் தாக்குதல்

தொடர் தாக்குதல்

அமெரிக்கா ராணுவத்தின் மீது சமீபத்தில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அரசு ராணுவத்திற்கான உதவிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும் பாகிஸ்தான் நாட்டிற்குள் தீவிரவாதத்தை வளர்ப்பவர்கள் மீது கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு அடக்க அரசு முடிவு செய்ய வேண்டும்.

 

இலக்கு

இலக்கு

பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் தாலிபான் தீவிரவாதிகளை, தற்போது செயல்படுத்தி வரும் தன்னிச்சையாக நடவடிக்கையைத் தொடர விரும்புகிறது. இதன் தாலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்பாக இருக்கும் Quetta மற்றும் பிற பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மூலம் தீவிரவாதத்தைத் தவிர்க முடிவு செய்யப்படலாம்.

அமெரிக்க ராணுவ உதவி

அமெரிக்க ராணுவ உதவி

பாகிஸ்தான் நாட்டிற்கு வெளியில் நடக்கும் தீவிரவாதங்களை முறையாகக் கண்காணித்து அதனைத் தடுக்கப் பாகிஸ்தான் திட்டங்களையும் வழிமுறைகளையும் வகுக்க வேண்டும். இதற்கு அமெரிக்க ராணுவமும் உதவி செய்யலாம்.

தீவிரவாதத்தின் ஆதரவாளர்

தீவிரவாதத்தின் ஆதரவாளர்

பாகிஸ்தான், ஆப்கான் தாலிபான் மற்றும் Haqqani நெட்வொர்க் ஆதரவைக் குறைக்கச் செயல்படுத்திய வழிகள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவை எதுவும் பயனளிக்கவில்லை என்று அறிவுறுத்தப்படலாம்.

இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் ஆதரவாளர் செயல்படுகிறது என்று சர்வதேச சந்தையில் நிரூபிக்க உள்ளது.

 

தாலிபான்

தாலிபான்

அமெரிக்கா மற்றும் NATO அமைப்பு தாலிபான் தீவிரவாதிகளுடன் தனித்தனியே சமரசம் பேசி வருகிறது, இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அதற்கான விளைவுகளைப் பாகிஸ்தான் சந்திக்க நேரிடலாம்.

நட்புறவில் முறிவு..

நட்புறவில் முறிவு..

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் நடக்கும் தீவிரவாத செயல்கள் அனைத்தும் இந்தத் தீவிரவாத கும்பல்கள் செய்துவரும் நிலையில் பாகிஸ்தான் இந்த அச்சுறுத்தல் முழுமையாக நீக்காதவரை அமெரிக்கா தீவிரவாத்தை ஒழிக்க உதவ முடியாது.

மேலும் அமெரிக்கா - பாகிஸ்தான் நட்புறவில் நிரந்தர முறிவு ஏற்படவும் அமெரிக்கா விரும்பவில்லை.

 

அணுகுமுறை

அணுகுமுறை

இதுவே டொனால்டு டிரம்ப் அரசு பாகிஸ்தான் நாட்டை எப்படி அணுகப்போகிறது என்பதற்கான பரிந்துரைகள். இது "A New US Approach to Pakistan" என்ற தலைப்பில் அறிக்கையாக வெளிவந்துள்ளது.

மறுஆய்வு

மறுஆய்வு

இந்நிலையில் இந்த அறிக்கையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவில் பல திங்க் டேங்க் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளது.
(Source: Hudson Institute and The Heritage Network's report "A New U.S. Approach to Pakistan")

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

வேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்திட்டு காண்டாமிருகம்-ன்னு பேரு வைத்த கதையாய், அமெரிக்க மக்கள் அதிபர் தேர்தலில் தவறான நபருக்கு வாக்கு போட்டுவிட்டோமோ..? நாளுக்கு நாள் டிரம்ப் சேட்டை தாங்க முடியல என்று புலம்பத் துவங்கியுள்ளனர்.

வீடியோ

வீடியோ

டொனால்டு டிரம்ப் தான் கொஞ்சம் அப்படின்னா.. அவங்க கட்சியை சேர்ந்தவர்களும் அப்படிதான் போல.

நீதிபதியையே கேள்வி கேட்க கூடாதுன்னு சொல்றாங்க அந்த அம்மா..!

டொனால்டு டிரம்ப் அரசு இனி பாகிஸ்தானை எப்படி அணுக போகிறது..?!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How the Trump administration can approach US Pak relations

How the Trump administration can approach US Pak relations
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X