ஈரான் நாட்டில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா தயார்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெஹ்ரான்: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த ஈரான் நாட்டில், இந்தியா 20 பில்லியன் டாலர் (ரூ.1.33 லட்சம் கோடி) வரை முதலீடு செய்யத் தயாராக உள்ளது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு உபகாரமாக இந்திய அரசு முன்வைத்தை சில கோரிக்கைகளின் காரணமாக, ரூ.1.33 லட்சம் கோடி முதலீடு அறிவிப்புக்குச் செவி சாய்க்காமல் மவுனமாக உள்ளது ஈரான் அரசு.

ஈரான் நாட்டு மீது விதிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக தடை பற்றி உங்களுக்கு தெரியுமா..? இல்லையென்றால் 9 ஸ்லைடரை பாருங்கள்.

20 பில்லியன் டாலர் முதலீடு

20 பில்லியன் டாலர் முதலீடு

ஈரான் நாட்டின் பெட்ரோ கெமிக்கல், உரங்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) துறையில், இந்திய அரசு சார்பிலும், இந்திய நிறுவனங்கள் மூலமாகவும் சுமார் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் தயாராக உள்ளோம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

உபகாரம்..

உபகாரம்..

இந்த 20 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு உபகாரமாக ஈரான் நாட்டிடம் இருந்து மலிவான விலையில் இயற்கை எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளை அமைக்க இடங்களை அளிக்குமாறு இந்திய அரசு கோரியுள்ளது.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்

ஈரான் நாட்டின் பல்வேறு தொழிற்துறை தலைவர்களைச் சந்திக்க இரண்டு நாள் இந்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 20 பில்லியன் டாலர் முதலீடு குறித்த திட்டங்களை அறிவித்தார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் 20 பில்லியன் டாலர் முதலீடு குறித்தும், எரிவாயு துறையில் இரு நாடுகளின் மத்தியில் இருக்கும் பிரச்சனைகளைக் களையும் விதமாகத் தர்மேந்திர பிரதான் இந்த அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 

தொழிற்சாலை

தொழிற்சாலை

20 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்த தர்மேந்திர பிரதான், ஈரான் நாட்டு அதிகாரிகளிடம், ஈரான் மண்ணில் பெட்ரோகெமிக்கல் மற்றும் உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை Chabahar சிறப்புப் பொருளாதாரச் சிறப்புப் பகுதியில் அமைக்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.

கூட்டணி

கூட்டணி

இத்தொழிற்சாலை அமைப்பதில் ஈரான் அரசு நிறுவனங்களின் கூட்டணியிலும் அல்லது தனியார் நிறுவன கூட்டணியில் துவங்க ஆர்வமாக உள்ளோம், தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை அளித்தால் கூட்டணி முயற்சியில் விரைவாகத் தொழிற்சாலை அமைக்கும் பணியைத் துவங்க ஏதுவாக இருக்கும் எனத் தர்மேந்திர பிரதான் இந்நாட்டு அரசைக் கேட்டுக்கொண்டார்.

விலை நிர்ணயம்..

விலை நிர்ணயம்..

மேலும் அவர், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயும் விலையை மறுமதிப்பீடு செய்து குறைவான விலைக்குத் தருமாறு கேட்டுக்கொண்டார். இதுமட்டும் அல்லாமல் நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் சந்தையின் விலைக்குக் குறைவாக இயற்கை எரிவாயுவை அளிப்பதன் மூலம் ஈரான் - இந்திய கூட்டணியில் உருவாகும் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வர்த்தகமாக அமையும் எனவும் தர்மேந்திர பிரதான் பேசினார்.

பைப்லைன் திட்டம்..

பைப்லைன் திட்டம்..

இப்படி ஈரான் நாட்டில் புதிய தொழிற்சாலை உருவாக்கத்திற்குப் பின் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு பாகிஸ்தான் நாட்டு வழியாகக் கொண்ட வர மும்முனை பேச்சுவார்த்தை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. (ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா)

இந்தியாவின் கோரிக்கை..

இந்தியாவின் கோரிக்கை..

எரிவாயுவின் விலை நிர்ணயம் மற்றும் பைப்லைன் திட்டம் ஆகியவற்றைக் குறித்து ஈரான் ஆசோசனை செய்து வருகிறது.

ஈரான்

ஈரான்

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக ஈரான் நாட்டு மீது சில ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகள் வர்த்தகத் தடையை அமலாக்கம் செய்தது. இதனால் இந்நாட்டு வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிப்படைந்தது.

முடங்கிய கணக்குகள்

முடங்கிய கணக்குகள்

இதன் மூலம் உலக நாடுகள் சர்வதேச சந்தையில் இருக்கும் ஈரான் நாட்டு வங்கி கணக்குகள் முடக்கியது. இதனால் இந்நாட்டிற்குச் சொந்தமான 100 பில்லியன் டாலர் நிதி முடங்கியது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

தொடர்ந்த 20 மாதங்கள் பேச்சுவார்த்தைக்குப் பின், ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கத் தலைமையிலான 6 சக்திவாய்ந்த நாடுகளுடன் முக்கிய ஒப்பந்தம் வியன்னா நகரில் சில மாதங்களுக்கு முன் கையெழுத்திட்டது.

10 வருடம்

10 வருடம்

இந்த ஒப்பந்தத்தின் படி அடுத்த 10 வருடங்களுக்கு இந்நாட்டின் அணுசக்தி பயன்பாடுகளைக் குறைத்து, உலக நாடுகளின் ஆய்வுகளுக்கு ஈரான் உட்படுத்தப்பட உள்ளது.

ராணுவ உதவி

ராணுவ உதவி

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வங்கி கணக்குள் மீதுள்ள கட்டுப்பாடுகளை விலகியது மட்டும் அல்லாமல் சர்வேத நடப்பு நாடுகளிடம் இருந்து ராணுவ உதவியும் பெறவும் உலக நாடுகள் ஒப்புக்கொண்டது.

எண்ணெய் உற்பத்தி

எண்ணெய் உற்பத்தி

இந்நிலையில் இந்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கூடுதல் நிதிதேவைக்காக, ஈரான் தேவைக்கு அதிகமாக இருக்கும் எண்ணெய் சந்தையில், தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகளவில் பாதித்தது.

அம்பானி வர்த்தகம்

அம்பானி வர்த்தகம்

<strong><em>5 ஆண்டுகளுக்குப் பின் ஈரானுடன் பிஸ்னஸ் செய்யும் ரிலையன்ஸ்..</em></strong>5 ஆண்டுகளுக்குப் பின் ஈரானுடன் பிஸ்னஸ் செய்யும் ரிலையன்ஸ்..

..." data-gal-src="http:///img/600x100/2016/04/11-1460363910-2-gujaratgas.jpg">
கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

<strong><em>ஈரான் நாட்டு வருகையால் கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு..!</em></strong>ஈரான் நாட்டு வருகையால் கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு..!

<strong><em>11 வருடச் சரிவில் கச்சா எண்ணெய் விலை.. சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ஈரான், அமெரிக்கா..!</em></strong>11 வருடச் சரிவில் கச்சா எண்ணெய் விலை.. சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ஈரான், அமெரிக்கா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India offers to invest $20 billion in Iran

India has offered to invest $20 billion in Iran’s petrochemical, fertilizer and liquefied natural gas (LNG) facilities and in return sought cheap natural gas and land to set up the units.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X