மோடியைப் பார்த்தாச்சு, அடுத்து ராஜபக்ஷவை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழும்பு: கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய திட்டங்களுக்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்களுடன் 5 நாள் சந்திப்பை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஷின்சோ அபே தற்போது 2 நாள் பயணமாக இலங்கைக்கு நேற்று வந்துள்ளார். இச்சந்திப்பில் பல பிரச்சனைகளும், பல நிதிதிட்டங்களும் செயல்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளது.

மேலும் மோடி அவர்களின் சந்திப்பிற்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இருநாட்டின் தலைவர் சந்திப்பில் நடந்த முக்கிய விவாதங்களை இப்போது பார்போம்..

இலங்கை உள்நாட்டு போர்

இலங்கை உள்நாட்டு போர்

இலங்கையில் தமிழ் விடுதலை புளிகளுக்கும் எதிராக நடந்த போர், முடிந்து 5 வருடம் ஆன நிலையில் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களிடையே இன்னும் இன நல்லிணக்கம் வரவில்லை எனவும் இதை விரைவில் கொண்டு வர அபே, மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

உதவி

உதவி

மேலும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த வாழ்விடம் அமைத்து தரவும் ஷின்சோ அபே தெரிவித்தார். மேலும் தெற்கு ஆசிய பகுதிகளில் போருக்கான நெறிமுறைகள் சரிவர இல்லாத காரணத்தால் போரில் பல விதிமீறல்கள் நடந்தேறி வருகிறது என்றும். இதனை உடனடியாக களைய உயர் குழுவை அமைக்க வேண்டும் என ஷின்சோ அபே தெரிவித்தார்.

 கடற்படை

கடற்படை

மேலும் இரு நாடுகளுக்கு இடையே வலுவான கடலோர இணைப்புகள் ஏற்படுத்தவும் அபே இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் தெற்கு கடலோர பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும் அபே திட்டமிட்டுள்ளார். இதற்காக இலங்கைக்கு ஜப்பான் ரோந்து கப்பல்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

இராணுவம்

இராணுவம்

கடற்படை மட்டும் அல்லாமல் இலங்கை ராணுவத்தை மேம்படுத்த ஐப்பான் போன்று சக்தி வாய்ந்த நாடுகளுடன் இணையவும் தயாராக உள்ளோம் என இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ( இதன் மூலம் எத்தனை தமிழர்களை கொல்ல திட்டமிட்டுள்ளார்களோ!!)

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

மேலும் இலங்கையில் நவின துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைக்க நிதியதவி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷ, ஷின்சோவிடம் கூறினார். மேலும் நாட்டின் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைக்கும் பணியில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது சீனா என்றும் குறிப்பிட்டார்.

முதலீடு

முதலீடு

இலங்கையில் டிஜிட்டல் தொலைகாட்சியை அமைக்க ஐப்பான் 130 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது. இச்சந்திப்பில் கடைசியாக புத்தர் கோவிலுக்கு சென்று தன் நாட்டிற்கு திரும்பினார் அபே.

24 வருடம்

24 வருடம்

இச்சந்திப்பின் முக்கிய அம்சம் ஒன்று உள்ளது, கடந்த 24 வருடத்தில் எந்த ஒரு ஜப்பான் அதிபரும் இலங்கைக்கு வந்ததில்லை. இதனால் ஷின்சோவின் இச்சந்திப்பு மேலும் முக்கியதுவம் வாய்ந்தாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan, Sri Lanka leaders agree stronger maritime links

Japanese Prime Minister Shinzo Abe and Sri Lanka's president agreed on Sunday (Sep 7) to forge stronger maritime links between their countries in a move partly aimed at countering China's influence in the region.
Story first published: Monday, September 8, 2014, 14:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X