யார் இவர்கள்..? ஆப்பிள் நிறுவனத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் 'ஆப்பிள்' நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய கடுமையான உழைப்பு, புதுப்புது டெக்னிக்குகள் ஆகியவை இன்று அந்த நிறுவனத்தைப் பெரிய அளவில் கொண்டு வர உதவியது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் தனியொரு மனிதராக இந்த நிறுவனத்தை முன்னேற்றவில்லை. அவருக்கு உதவிகரமாக ஒரு பெரிய குழு இருந்தது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஸ்டீவ் ஜாப் அவர்களுக்கு எந்த அளவு பங்கு உண்டோ அதே அளவு அந்தக் குழுவினர்களுக்கும் பங்கு உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த 10 நபர்கள் குறித்துத் தற்போது பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சி.இ.ஓ மைக்கேல் ஸ்காட்: ஆப்பிள் நிறுவனத்தின் அஸ்திவாரங்களில் ஒருவராக இருந்த ஸ்காட், புதிய திறமை மிகுந்த தொழிலாளர்களைத் தேர்வு செய்வதில் வல்லவராக விளங்கினார்.

இவர் தேர்வு செய்த தொழிலாளர்கள் கொடுத்த உழைப்பில்தான் இந்நிறுவனம் அபரிதமான வளர்ச்சியை அடைந்தது. மேலும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் ஆகியவையும் இவரால்தான் கிடைத்தது.

கேரி மார்ட்டின்

கேரி மார்ட்டின்

ஆப்பிள் நிறுவனத்தின் அக்கவுண்ட் செக்சனை முற்றிலும் மாற்றிய பெருமை இவருக்குத் தான் உண்டு. 1983ஆம் ஆண்டு வரை இவரது உழைப்பால் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலக நிர்வாகம் சிறப்பாக விளங்கியது. அதன் பின்னர் இவர் வேறொரு நிறுவனத்திற்கு மாறிச் சென்றார். என்றாலும் இவருக்கு இணையான ஒருவர் ஆப்பிள் நிறுவனத்திற்குக் கிடைப்பது சவாலாக இருந்தது.

ஷெர்ரி லிவிங்ஸ்டன்

ஷெர்ரி லிவிங்ஸ்டன்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சி.இ.ஓ அவர்களுக்கு வலதுகரமாக இருந்தவர். ஆப்பிள் நிறுவனத்தின் செயலாளர் பதவியில் இருந்த இவர் நிறுவனத்திற்குக் கொடுத்த மகத்தான உழைப்பு, அந்நிறுவனத்தின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. ஆரம்பக் காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகங்களில் பல புதுமைகள் செய்து சி.இ.ஓ மைக்கேல் ஸ்காட் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்

கிறிஸ் எஸ்பினோசா
 

கிறிஸ் எஸ்பினோசா

பள்ளியில் மாணவராக இருந்த போது பகுதி நேர ஊழியராக ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த இவர் படிப்பை முடித்த பின்னர் அந்நிறுவனத்திலேயே முழு நேர ஊழியராக இணணந்துவிட்டார். 14 வயதில் இருந்து இவர் தன்னுடைய உழைப்பை ஆப்பிள் முன்னேற்றத்திற்காகக் கொடுத்துள்ளார். இன்று வரை இவர் தன்னுடைய சேவையை அளித்துக் கொண்டிருக்கின்றார். ஆப்பிள் நிறுவனத்தின் சீனியர் ஊழியர் என்று கூறினால் அது இவர் மட்டுமே.

மைக்கில் 'ஸ்காட்டி' ஸ்காட்

மைக்கில் 'ஸ்காட்டி' ஸ்காட்

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓவாகப் பணியாற்றும் இவர் ஜேம்ஸ்பாண்ட் 007 என்பதைக் குறிக்கும் வகையில் தன்னை எப்போது நம்பர் 7 என்றே அழைத்துக் கொள்வாராம். ஆப்பிள் நிறுவனத்திற்குத் தரமான ஊழியர்களைத் தேர்வு செய்து அந்நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக மாறத் தனது பெரும் உழைப்பைக் கொட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தில் $250,000 முதலீடு செய்த மைக் மார்க்குலா என்பவர்தான் இவரைச் சி.இ.ஓவாகத் தேர்வு செய்தார். இவரது வியாபார உத்திகள் மலைக்க வைக்கும் அளவில் இருந்தது.

ரேண்டி விஜ்ஜிங்டன்

ரேண்டி விஜ்ஜிங்டன்

பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் மிகுந்த இவர் கடைசியில் தஞ்சம் புகுந்தது ஆப்பிள் நிறுவனத்திடம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தை முற்றிலும் புதுமையாக மாற்றிய பெருமை இவரைச் சேரும். கம்ப்யூட்டரில் உள்ள BASIC மொழியை முற்றிலும் மாற்றி அனைவரையும்ன் ஆச்சரியப்படுத்தினார். ஆப்பிள் நிறுவனத்தை அடுத்து இவர் இபே, கூகுள், செஹ், ஸ்கொயர் உள்படப் பல நிறுவனங்களில் இணைந்து பணியாற்றினார்.

ராட் ஹோல்ட்

ராட் ஹோல்ட்

 ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர் ராட் ஹோல்ட். ஆப்பிள் நிறுவனத்தின் பவர் சப்ளை செக்சனை மிகச்சிறப்பாகக் கவனித்த இவர், ஆறு வருடங்களுக்குப் பின்னர் வந்த புதிய நிர்வாகம் இவரை வெளியேற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பாக முன்னேற இவருடைய உழைப்பு குறிப்பிடத்தக்க ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பில் பெர்னாண்டஸ்

பில் பெர்னாண்டஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஜ்னிக் ஆகியோர்களுக்கு மிக நெருக்கமானவர் பில் பெர்னாண்டஸ். குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் பள்ளி தோழன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தொழிலாளி என்று இவரைக் கூறலாம். முதலில் ஹார்ட்வேர், பின்னர்ச் சாப்ட்வேர், அதன் பின்னர் டிசைனர் என ஆப்பிள் நிறுவனத்தில் இவர் பல பிரிவுகளில் தன்னுடைய உழைப்பை நண்பருக்காகக் கொட்டியவர்.

ஆனாலும் இவர் கடந்த 1993ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி டேட்டாபேஸ் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது பெர்னாண்டாஸ் ஆம்னி பயாட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக உள்ளார்.

 

மைக் மார்க்குள்ளா

மைக் மார்க்குள்ளா

ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சி அடைய நிதியுதவி செய்தவர்கள் முக்கியமானவர் மைக். இவர் ஆப்பிள் நிறுவனத்தில் $250,000 முதலீடு செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஜ்னிக் ஆகியோர்கள் மீது இவர் வைத்த பெரும் நம்பிக்கையே இந்த அளவுக்கு ஒரு பெரிய தொகையை அவர் முதலீடு செய்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இண்டெல் நிறுவனத்தில் முதலில் பணிபுரிந்த இவர் மிகக்குறுகிய காலத்தில் லட்சாதிபதி ஆனார். இவர் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்த இந்தத் தொகை இவருடைய மொத்த சொத்து மதிப்பில் 10%க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

இந்தப் பெயரை தெரியாத தொழில்நுட்ப நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முதலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தை உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்குத் தனது அயராத உழைப்பால் உயர்த்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் வோஜ்னிக்

ஸ்டீவ் வோஜ்னிக்

டெக்னிக்கல் மேதாவியான இவருக்கு HP நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைக் கிடைத்தது. ஆனால் அதை உதறித்தள்ளிவிட்டு ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் எடுத்த இந்த முடிவுதான் இவருடைய வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது. இவர் பல டெக்னிக்கல் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அந்த உரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள விலை மதிப்பில்லா உரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டு வேனே

ரொனால்டு வேனே

இவர்தான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நிறுவனர். ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஜ்னிக் உடன் இணைந்து ரொனால்டு வேனே இந்நிறுவனத்தைத் துவங்கினார்.

ஆனால் 12 நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து தனது முதலீட்டை வெளியேற்றினார். அப்போது அவருக்குக் கிடைத்த தொகை 1,700 அமெரிக்க டாலர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet Apple's first 10 employees

Meet Apple’s first 10 employees - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X