7,000 பணியாளர்களுக்கு விடுமுறை.. 500 பேருக்கு வேலை காலி.. மெர்சிடிஸ் பென்ஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாவோ போலோ: ஜெர்மனியின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தனது பிரேசில் கிளையில் 500 பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் 7,000 பணியாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

 

இதுகுறித்து இந்நிறுவன செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை நிருபர்களிடம் பேசுகையில் 7,000 பணியாளுக்கு வருகிற ஜூன் 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்குக் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் 500 பணியாளர்களை நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு

பிரேசில் நாட்டின் ஆட்டோமொபைல் விற்பனை அதிகளவில் குறைந்துள்ளதால் இத்துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

பென்ஸ் நிறுவனத்தின் பிரேசில் கிளையில் சுமார் 10,500 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 வருடமாகச் சரிந்து வருகிறது.

நடப்பு ஆண்டில் இதன் அளவு 1 சதவீதசம் அளவு குறையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

 

பணவீக்கம்

பணவீக்கம்

நாட்டின் பணவீக்க அளவை கட்டுப்படுத்த இந்நாட்டு அரசு கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் ஆடம்பர பொருட்களில் விற்பனை மற்றும் சந்தை குறைந்ததுள்ளது.

விற்பனை மற்றும் உற்பத்தி குறைவு..
 

விற்பனை மற்றும் உற்பத்தி குறைவு..

கடந்த நான்கு மாதத்தில் இந்நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி அளவு 17.5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் விற்பனை அளவு 19.2 சதவீதம் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

பென்ஸ் மட்டும் அல்லாமல் வோக்ஸ்வாகன், போர்டு, ஜென்டரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் பணியாளர்களுக்குக் கட்டாய விடுமுறை அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mercedes cuts 500 Brazil jobs, 7000 placed on leave

German vehicle manufacturer Mercedes Benz said Wednesday it had cut 500 jobs at its Brazilian plant in Sao Bernardo dos Campos near Sao Paulo and placed 7,000 workers on short-term leave.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X