நோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், பல மாதங்கள் அடைகாத்து விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இந்நிறுவனம் அதிகளவிலான நிதி நெருக்கடி மற்றும் வர்த்தகச் சரிவை சந்தித்தது. புதிய விண்டோஸ் 10 அறிமுகத்தின் மூலம், மீண்டும் சந்தையைக் கலக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள்

புதிய வாடிக்கையாளர்கள்

சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், பழைய வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அற்புதமாகத் திட்டம் தீட்டியது.

இத்திட்டத்தின் படி, புதிய மென்பொருளை அனைவருக்கும் இலவசமாக அளிப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

 

இதனால் என்ன கிடைக்கும்

இதனால் என்ன கிடைக்கும்

இலவசமாக அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆர்வமுடன் கவனிப்பதோடு மட்டும் அல்லாமல், இதனைப் பயன்படுத்தவும் துவங்குவர். எனவே விண்டோஸ் 10 பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.

வர்த்தகம்

வர்த்தகம்

கடந்த 2 வருடமாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சந்தையில் தோற்றுப் போனது, குறிப்பாக விண்டோஸ் 8, எக்ஸ் பாக்ஸ் 360, மைக்ரோசாப்ட் azure எனப் இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. எனவே இலவசமாக மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து தனது பிற தயாரிப்புகள் விற்கவும் இது சிறந்த முயற்சியாகும்.

(நோக்கியாவுடன் இணைந்ததால் கதை மாறியது... மைக்ரோசாப்ட் புலம்பல்!)(நோக்கியாவுடன் இணைந்ததால் கதை மாறியது... மைக்ரோசாப்ட் புலம்பல்!)

ஒன் சொல்யூஷன்

ஒன் சொல்யூஷன்

மேலும் இந்த மென்பொருள் கம்ப்யூட்டர் மட்டும் அல்லாமல், டேப்லெட், போன் (விண்டோஸ் போன்), ராஸ்பெர்ரி பை, எக்ஸ்பாக்ஸ் ஓன் மற்றும் ஹோலோ லென்ஸ் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும்.

இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் சரி, லாபமும் சரி பல மடங்கு உயரும் வாய்ப்புகள் உள்ளது.

 

புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

புதிய விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் கார்டானா என்னும் தனிப்பட்ட டிஜிட்டல் உதவியாளர் மென்பொருள், இண்டர்நெட் எக்ஸ்போலர்-க்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ், எக்ஸ்பாக்ஸ் ஆ போன்றை அடங்கும்.

பீசி டூ மொபைல்

பீசி டூ மொபைல்

மேலும் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்களை, விண்டோஸ் 10 இயக்கம் கொண்ட கம்பியூட்டருடன் இணைத்துக்கொள்ள ஒரு பிரத்தியேக ஆப் உள்ளது.

இதை இப்படியும் இயக்கலாம்.

இதை இப்படியும் இயக்கலாம்.

ஐயன் மேன் படத்தில் வரும் ஜார்வீஸ் போல, விண்டோஸ் 10 இயக்கம் கொண்ட ஒரு பொருளை பேனா( Electronic pen), பேசுவதன் மூலம் (Voice) மற்றும் சைகை (gestures) மூலமும் இயக்கலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

டவுன்லோடு பண்ணிடிங்களா??

டவுன்லோடு பண்ணிடிங்களா??

பொதுவாகச் சந்தையில் வரும் மென்பொருள் பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் வந்தாலும், முழுமையான பயன்பாட்டிற்கு வரும் போது பல பிரச்சனைகள் வருவது வழக்கம். ஆகவே சில மாதங்களுக்குப் பின் பீட்டா (BETA VERSON) தர மென்பொருளை டவுன்லோடு செய்வது உத்தமம்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now, Windows 10 from Microsoft

Microsoft Corporation launched its latest operating system — Windows 10 — on Wednesday, announcing that it will be available as a free upgrade.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X