பிரீமியம் எச் 1பி விசா நல்லது தான் ஆனால் ஐடி துறைக்கு இல்லை: நாஸ்காம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம் (NASSCOM) என்பது இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் வணிகச் செயல்முறைகளின் வர்த்தகச் சங்கமாகும். நாஸ்காம் செவ்வாய் கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையினில் எச்-1பி பிரீமியம் விசாவினால் இந்திய ஐடி துறைக்குப் பெரிதாகப் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

உயர் கல்வி, லாபம் இல்லா நிறுவனங்கள் போன்றவற்றுக்குப் பிரீமியம் விசா வழங்குவதில் சில வரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளது. எங்கள் உறுப்பினர் நிறுவனங்கள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கவில்லை, "என நாஸ்காம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷிவேந்திர சிங் தெரிவித்தார்.

ஐடி துறை மீது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தாது

ஐடி துறை மீது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தாது

"பிரீமியம் எச்-1பி விசா ஐடி துறை மீது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், இது அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அனைவருக்கும் பிரீமியம் செயலாக்கத்தை மறுசீரமைப்பதன் மூலம் முன்னேற்றுவதற்கான நல்ல அறிகுறியாகும்" என்று கூறினார்.

எச்-1பி விசா

எச்-1பி விசா

எச்-1பி விசா என்பது அமெரிக்கர்கள் இல்லாத வெளிநாட்டினர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக அமெரிக்க அரசு அளிக்கும் விசா ஆகும்.

குடியேற்றச் சேவைகளில் இருந்து பதில்
 

குடியேற்றச் சேவைகளில் இருந்து பதில்

பொதுவாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது குடியேற்றச் சேவைகளில் இருந்து பதில் வரக் குறைந்தது ஒரு மாத காலமாவது எடுக்கும். 15 நாட்களில் நிலையினை அறிய நிறுவனங்கள் கூடுதலாகக் கட்டணத்தினைச் செலுத்த வேண்டும்.

பிரீமியம் விசா இடைக்காலத் தடை

பிரீமியம் விசா இடைக்காலத் தடை

அதிபர் பதவியினை டொனால்டு டிரம்ப் ஏற்ற பிறகு 2017 ஏப்ரல் மாதம் பிரீமியம் விசா வழங்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்தது, தற்போது ஞாற்றுக்கிழமை அமெரிக்க அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் சில வரம்பிற்குள் உட்பட்டுப் பிரீமியம் விசா விண்ணப்பத்தினை மீண்டும் துவங்க இருப்பதாக அறிவித்தது.

வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை

வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை

இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தங்களது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இடையில் மிகவும் பிரபலமாக உள்ள எச்-1பி விசா நேரடியாகத் தங்களது பணியாளர்களை அனுப்ப உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Premium H 1B visa good, but not for IT: Nasscom

Premium H 1B visa good, but not for IT: Nasscom
Story first published: Wednesday, July 26, 2017, 13:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X